Friday, May 30, 2008

அமெரிக்க இரானுவ வீரர்களின் தற்கொலைகள் அதிகரிப்பு


ஈராக், ஆப்கானிஸ்தான் போரில் பங்குபெற்றிருக்கும் அமெரிக்க போர் வீரர்களின் கடுமையான மன அழுத்தம் காரணமாக பணியிலிருக்கும் போது நடைபெற்ற தற்கொலைகள் கடந்த 2007ல் அதிகரித்துள்ளன.

2007ல் மட்டும் 115 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2006 ஐ காட்டிலும் 12.7 சதவீதம் அதிகமாகும். 2006 102 தற்கொலைகள் நடந்துள்ளன.

1980லிருந்து இதுபோன்ற பட்டியல் தயாரித்து வருகையில் 2007ல் தான் அதிகம் என்று இரானுவ அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்த ஆண்டு சென்ற திங்கட்கிழமை வரை 38 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் பணியில் இல்லாதவர்கள் பற்றிய கணக்கு இல்லை.

2007ல் மட்டும் 935 தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளன என்று இரானுவம் தெரிவித்துள்ளது.

2007ல் அமெரிக்க அதிபர் புஷ் இராக்கிற்கு சென்று வந்த பின் அதிக படையை அங்கு அனுப்பினார். அதற்குப் பிறகு தான் அதிக அளவிலான தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. அதாவது 32 தற்கொலைகள்,இது மொத்த கணக்கில் கால்பங்கு அதிகமாகும்.

சாதாரன மக்கள் தொகையில் 1,00,000 த்தில் 19.5 சதவீதம் பேர் தற்கொலைகள் செய்வதாகவும், இரானுவத்தில் பணியிலிருக்கும் பொழுது 1,00,000 த்தில் 18.8 தற்கொலைகள் நடப்பதாகவும், இது குறைவுதான் என்று இரானுவம் ஆறுதல் படுத்திக்கொல்கிறது.


'தலையை கொடுத்து மாட்டிக்கிட்டாய்ங்க' ன்னு இதத்தான் சொல்லுவாய்ங்கலோ?

பங்குச்சந்தையில் தீவிரவாதிகள் முதலீடு - ஜெயலலிதா

சென்னை, மே 29: பயங்கரவாதச் செயல்களுக்குப் பணம் ஈட்டும் சந்தையாக தீவிரவாதிகள் இந்திய பங்குச் சந்தையை பயன்படுத்துகின்றனர் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

பங்குச் சந்தையில் நடப்பவற்றைத் தெரிந்துகொண்டும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மௌனம் காக்கிறார். இதனால், இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பேராபத்தை நிதி அமைச்சர் ஏற்படுத்துகிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய குடிமகன் ஒருவன் சாதாரண வங்கிக் கணக்கை தொடங்குவதற்கே முகவரி, புகைப்படச் சான்று மற்றும் வருமானவரி கணக்கு எண் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமைப்பு வழங்கும் பங்கேற்பு சான்றிதழைக் (பி-நோட்) கொண்டு இந்திய சந்தையில் மிக எளிதாக முதலீடு செய்கின்றனர் அன்னிய முதலீட்டாளர்கள்.

உண்மையான முதலீட்டாளருக்குத்தான் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படுகிறதா என்று தெரியாது. இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் பெரும் தொகையை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர். ‘செபி'யில் பதிவு செய்யாமலேயே பங்கேற்பு சான்றிதழைப் பெறுகின்றனர்.

பங்கேற்பு சான்றிதழ் பெற்றவர்களின் விவரங்களை வெளியிடுமாறு அன்னிய முதலீட்டாளர்கள் அமைப்பிடம் ‘செபி' கேட்டும், விவரங்கள் கிடைக்கவில்லை. மத்திய நிதி அமைச்சகத்துக்கும் இதுகுறித்துத் தெரியவில்லை.

பங்கேற்பு சான்றிதழைக் கொண்டு செய்யும் முதலீடுதான் பங்குச் சந்தையின் திடீர் ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம். பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவால் தற்கொலைகளும் நடந்துள்ளன.

‘செபி' தலைவர் எம். தாமோதரன் கடந்த ஆண்டு அளித்த பேட்டியில் கூட, ‘‘பங்குச் சந்தையில் புழங்கும் பணத்தில் நான்கில் ஒரு பங்கு வெளிநாட்டு முதலீடு. அதுவும் பினாமி பெயர்களில் பெறப்பட்ட பங்கேற்பு சான்றிதழ்களைக் கொண்டு முதலீடு செய்யப்பட்டவை'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்த தொகை உண்மையான அன்னிய முதலீடா? உள்ளூர் கருப்புப் பணத்தை பங்கேற்பு சான்றிதழ் மூலம் முதலீடு செய்துள்ளனரா? அல்லது, தீவிரவாதிகள் முதலீடு செய்ததா? என்ற கேள்விகள் எழுகின்றன.

''தீவிரவாதிகள் தங்களது செயல்பாட்டுக்கு பணத்தை ஈட்ட இந்திய பங்குச் சந்தையைப் பயன்படுத்துகின்றனர். மும்பை, சென்னை பங்குச் சந்தையில் சில நிறுவனங்கள் பெயரில் செய்த முதலீடு, தீவிரவாத அமைப்புகள் செய்தவை என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது‘‘ என்று 2007-ல் மூனிச் நகரில் நடந்த பாதுகாப்பு கொள்கை பற்றிய கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.

பினாமி பெயர்களில் பங்கேற்பு சான்றிதழைப் பெற்று, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதற்கிடையே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வந்த பின் மாலத்தீவு அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதன்மூலம், மாலத்தீவிலிருந்து இந்திய மூலதனச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு அன்னிய முதலீட்டாளர்கள், மாலத்தீவு வழியாக இந்தியாவில் முதலீடு செய்கின்றனர். இதனால், சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வருவாய், மாலத்தீவு வழியாக வெளிநாடுகளுக்குச் செல்கிறது என ரிசர்வ் வங்கியும் கவலை அடைந்துள்ளது.

ஆனால், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இந்த இழப்பீடுகளுக்கு பலத்த மௌனம் காக்கிறார். இப் பிரச்னையைத் தடுக்க கடும் நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுக்கவில்லை என்றால், இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பேராபத்தை அவர் தெரிந்தே ஏற்படுத்துகிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது என அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Thursday, May 29, 2008

சர்வதேச விண்வெளிதளம் நாறுது!!

அமெரிக்கா, இரஷ்யா வின் கூட்டு முயற்சியில் இயங்கிவரும் சர்வதேச விண்வெளி தளத்தில் உள்ள கழிப்பறை தற்பொழுது பழுதடைந்துள்ளது. இதனால் அங்கு பணியிலிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள கழிப்பறை 7 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மாற்றாக வேறொரு கழிப்பறையை வரும் சனிக்கிழமை அமெரிக்கா அனுப்புகிறது. அது திங்கட்கிழமை சென்றடையும்.

Wednesday, May 28, 2008

குஜராத் கலவரம்: 21 குற்றவாளிகள் விடுவிப்பு

2002 குஜராத் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிற்கு கலவரம் மூண்டது. அதன் தொடர்ச்சியாக குஜராத் முழுவதும் நடந்த கலவரத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதில் பாபுநகர் பகுதியில் இரண்டு சமூகத்திற்கிடையே நடைபெற்ற கலவரத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை விடுவித்து நீதிபதி தீர்பளித்தார்.

நேபாளம் குடியரசாக அறிவிப்பு

நேபாளில் மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் கடுமையாக போராடி வருகின்றனர். இதுதொடர்பான உள்நாட்டுப்போரில் இதுவரை 13000 பேர் இறந்திருக்கின்றனர். பின்னர் மாவோயிஸ்டுகளுக்கும் அரசிற்கும் கடந்த 2006ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதனையொட்டி, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் 220 பரதிநிதிகளை பெற்றனர்.

இன்று புதன்கிழமை கூடிய பாராளுமன்றம் மன்னராட்சிக்கு முடிவுகட்டி நேபாளத்தை குடியரசு நாடாக அறிவித்தது. கடந்த 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்துள்ளது.

குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னரின் மாளிகையை காலி செய்ய மன்னர் ஞானேந்திராவிற்கு 15 நாட்கள் கெடு விதித்துள்ளது. மன்னர் இதுபற்றி இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், 'அதற்கு அவர் சம்மதிக்கவில்லையாயின், அப்புறப்படுத்தப்படுவார், அது அவருக்கு நல்லதல்ல ' என்று அமைதி மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் கூறினார்.

நம்பிக்கை

நேபாளம் இந்து நாடாக இருந்து வருகிறது. இந்நாட்டின் மன்னரை கடவுளின் வாரிசாக அந்நாட்டு மக்கள் நம்பிவந்தனர். ஆனால் 2001 ஆம் ஆண்டு இளவரசர் திபேந்திரா மன்னர் பிரேந்திராவையும் இன்னும் அவருடைய குடும்பத்தினர் எட்டு பேரையும் சுற்றுக்கொண்டார். பின்னர் தம்மைத்தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் ஞானேந்திரா மன்னராக அறிவிக்கப்பட்டார். 2005 அரசாங்கத்தை கலைத்து மன்னர் தன்கீழ் எடுத்துக்கொண்டார்.

Friday, May 23, 2008

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு மே 30ல் இந்திய அணி தேர்வு.

வங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் தொடர், பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி வரும் 30ம் தேதி தேர்வு செய்யப்படுகிறது.இதற்காக இந்திய அணியின் தேர்வுக் குழுவினர் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் நிரஞ்சன் ஷா தெரிவித்தார்.ஐ.பி.எல். போட்டிகளில் அபாரமாக விளையாடும் வீரர்களு‌க்கு நிச்சயமாக ஒரு நாள் அணியில் தேர்வாக வாய்ப்பிருக்கிறது என்று தேர்வாளர் புபீந்தர் சிங் தெரிவித்தார்.ஆனால் அனைத்துத் தேர்வுக் குழு உறுப்பினர்களும் இதனை ஏற்கவில்லை. ஏற்கனவே இந்திய ஒரு நாள் அணி பலமாகவே உள்ளது, இதனால் ஐ.பி.எல். போட்டிகளில் திறமையை நிரூபித்துள்ள புது வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று மத்திய மண்டல தேர்வாளர் ஜக்தாலே கூறியுள்ளார்.

குஜராத் கலவர நஷ்ட ஈடு அதிகரிப்பு

குஜராத் கலவர நஷ்ட ஈடு அதிகரிப்பு


குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க ரூ.330 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை தில்லியில் நடந்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதலாக நிவாரணத் தொகை வழங்கவும், சேதமான வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவும், காப்பீடு செய்யப்படாத கடைகளுக்கு (கலவரத்தில் சேதமானவை) இழப்பீடு வழங்கவும், இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுக்கு இணையாக, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீடு வழங்கப்படும்.

குஜராத் கலவரத்தில் 1169 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தாருக்கு தலா ரூ. 3.5 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். குஜராத் மாநில அரசு வழங்கிய தொகையைத் தவிர மத்திய அரசின் இந்தத் தொகையும் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு தெரிவித்தார்.

கலவரத்தில் காயமடைந்த 2548 பேருக்கு தலா ரூ.1.25 லட்சம் வழங்கப்படும். கலவரக்காரர்களால் சேதமாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு, மாநில அரசு கொடுத்தத் தொகையைப் போல 10 மடங்கு இழப்பீட்டுத் தொகை தரப்படும் என்றார் சிதம்பரம்.

கல்வி நிறுவனங்களுக்கு ரூ.10,328 கோடி

உயர் கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10,328 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால் இந்த கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் அதிகரிக்கும். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றும் முயற்சியாக மத்திய அரசு இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இதை முடிவு செய்தது. மத்திய பல்கலைக்கழகங்கள், நிர்வாகவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்காக ரூ.10,328 கோடியை ஒதுக்க கொள்கை அளவில் அரசு இந்த கூட்டத்தில் முடிவு செய்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதால், பொதுப்பட்டியல் மாணவர்களுக்கான இடங்கள் குறையாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
லோக்பால் மசோதா

அரசு அதிகாரிகள், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்கும் அதிகாரியை (ஆம்புட்ஸ்மேன்) நியமிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா பற்றி முடிவு ஏதும் எடுக்காமல் அதுபற்றிய முடிவை அமைச்சரவை ஒத்தி வைத்தது.

இதில் சில சட்டப்பிரச்னைகள் எழுப்பப்பட்டதால் இந்த மசோதாவை மீண்டும் பரிசீலிக்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த மசோதா பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

பிரதமர் பதவியையும் இந்த லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இருவேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

பிறந்த நாள் கொண்டாட கருணாநிதி சம்மதம்

பிறந்த நாள் கொண்டாட கருணாநிதி சம்மதம்


தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாட முதல்வர் கருணாநிதி சம்மதம் தெரிவித்துள்ளார்.

பிறந்த நாளன்று என்னைக் காண வருவது, வாழ்த்த வருவது, நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் நான் சென்னையில் இருக்க மாட்டேன் என்று மே 13-ம் தேதி முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

என் மனநிலை, உடல்நிலை கருதி வாழ்த்துகளை ஏற்றிடும் பணியிலிருந்து எனக்கு விலக்கும் ஓய்வும் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனாலும் திமுகவினர் கருணாநிதியின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்படுகள் செய்து வந்தனர். திமுகவில் எத்தனை விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதுதான் திமுக தொண்டர்கள் மிகுந்த எழுச்சி பெறுகிறார்கள். எனவே நாடே வியக்கும் வண்ணம் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளரும் நிதி அமைச்சருமான க. அன்பழகன் திமுகவினரை கேட்டுக் கொண்டார்.

தாய் கழகம் என்ற முறையில் கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடும் உரிமை திராவிடர் கழகத்துக்கு உண்டு. அதனை மறுக்கக் கூடாது என்று திக தலைவர் கி. வீரமணி கேட்டுக் கொண்டிருந்தார்.

கவிதை மூலம் சம்மதம்: இந்நிலையில் முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட கவிதையில் தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாட சம்மதம் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் அன்பழகனின் ஆணையை ஏற்றும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் வேண்டுகோளை ஏற்றும், பல லட்சம் உடன்பிறப்புகளின் அன்புக்கு பணிந்தும் ""தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண ஒப்பிவிட்டேன்!, உன் வாழ்த்தினையேற்று என் வணக்கமும் வாழ்த்தும், வட்டியும் முதலுமாய் வழங்குவதற்கே!'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Thursday, May 15, 2008

'மன்னிச்சுக்க செல்லமே' - ஒபாமா

அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஹிலாரி கிளின்டனும் ஒபாமாவும் அக்கட்சியின் வேட்பாளர் தேர்விற்கு போட்டியில் உள்ளனர்.



டெடராய்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் அகார் என்கிற பெண்மணி வாகனத் தொழிலாளர்கள் தொடர்பாக கேள்வியொன்றை எழுப்பினார். அவரை இடைமறித்த ஒபாமா 'நிறுத்து செல்லமே, நாங்கள் செய்வோம், பத்திரிக்கைகளுக்கு பிறகு செய்தி தருவோம்' என்று தெரிவித்திருந்தார்.

செல்லமே என்கிற வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு அப்பெண்மணியின் கைப்பேசிக்கு இரண்டு ஒலி மின்னஞ்சல்களை (voice mails) அனுப்பியுள்ளார். அதில் ஒன்று அவருக்கு பதில் அளிக்காததற்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

அடுத்ததில் 'செல்லமே என்கிற வார்த்தை தன்னிடம் ஒட்டிக்கொண்டுள்ள தீய செயல் என்றும் கூறியுள்ளார். தான் எல்லோரிடத்திலும் அத்தகைய சொல்லை பயன்படுத்துவதாகவும் டெடராய்டிற்கு பிறிதொரு சமயம் வரும்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தங்களை சந்திப்பேன், தன்னுடைய கைப்பேசிக்குத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

ஜிம்பாப்வேயின் 500 மில்லியன் டொலர் நோட்டு


உணவகத்தில் சாப்பிடுவதற்காக பணத்தை கட்டு கட்டாக எடுத்துச்செல்கிறார் அந்நாட்டு குடிமகன் ஒருவர்
ஆப்ரிக்கா கண்டத்தின் ஒரு நாடான ஜிம்பாப்வே கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டின் பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் 165000 சதவீதம் அதிகரித்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியை அந்நாடு சந்தித்து வருகிறது. விலைவாசியும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது.

இதன் காரணமாக பணத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதனை சமாளிக்க கடந்த ஜனவரியில் 10 மில்லியன் ஜிம்பாப்வே டொலரை அந்நாடு அறிமுகப்படுத்தியது. கடந்த ஏப்ரலில் 50 மில்லியன் டொலரும் மே 10 அன்று 100 மில்லியன் மற்றும் 250 மில்லியன் டாலர்களை அந்நாடு அறிமுகப்படுத்தியது.

இன்று அந்நாட்டின் ரிசர்வ் வங்கி 500 மில்லியன் ஜிம்பாப்வே டொலரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கான அறிவிப்பு அந்நாட்டின் பத்திரிக்கைகளில் வந்துள்ளது.

1980 ஆண்டு சுதந்திரம் அடைந்தப் பிறகு அந்நாட்டின் ஒரு ஜிம்பாப்வே டொலர் ஒரு அமெரிக்க டொலருக்கு நிகராக இருந்தது. தற்போது உணவு மற்றும் எண்ணெய் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

ஜிம்பாப்வேயின் ஒரு 500 மில்லியன் டொலர் இரண்டு அமெரிக்க டொலருக்கு ஒப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தசாவதாரம் பிரச்சினை

கே.எஸ்.ரவிக்குமார் விளக்கம்
தசாவதாரம் படத்தின் சில காட்சிகளை நீக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷணா என்ற அமைப்பின் தலைவர் கோவிந்த ராமானுஜ தாசா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பதில் மனு அளித்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பின்வருமாறு அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
படத்தின் மொத்த கதையின் பின்னணி தெரியாமல் டிரெய்லரில் வரும் ஒன்றிரண்டு காட்சிகளை பார்த்துவிட்டு மனுதாரர் இவ்வாறு கூறுகிறார். சைவ வைணவர்களுக்கு இடையே மோதல் வருவதாக எந்த காட்சியும் இதில் இல்லை. சிலையோடு ராமானுஜரை சேர்த்து கட்டுவதாக கூறுவது தவறு. கடலில் விடுவதற்கு முன்பாக சிலையோடு கதாநாயகனை சேர்த்து கட்டுவது என்பது படத்திற்காக சேர்க்கப்பட்ட கற்பனைதான்.

வைணவர்கள் உள்ளிட்ட எவரையும் புண்படுத்தும் விதத்தில் படத்தில் எந்த காட்சியும் இல்லை. தீவிர வைணவ பாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். கடவுள் விஷ்ணுவுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்கிறார்.

ஓம் மந்திரத்தின் மீதோ, பகவத் கீதை மீதோ யாரும் கால் வைப்பது போல் காட்சி இல்லை. ராமானுஜர் பாத்திரத்தில் கமல் நடிக்கவில்லை. வன்முறையை சித்தரிக்கும் விதத்தில் காட்சிகளும் இல்லை. படத்தின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தசாவதாரம் பெயரை கேலி செய்யும் விதத்தில் படம் இல்லை.

நானும் விஷ்ணுவின் தீவிர பக்தன்தான். மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் நான் செயல்பட மாட்டேன். எனவே காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே சென்சார் போர்டு இதை பரிசீலித்து சான்றிதழ் வழங்கிவிட்டது.
இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமாரின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.சென்சார் போர்டின் மண்டல அதிகாரி பாபு ராமசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், படத்தின் பெயர் சினிமா பட சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை மீறியதாக இல்லை. எனவே பெயருக்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டிய காரணம் இல்லை.

நவராத்திரி என்கிற படத்தில் நடிகர் சிவாஜி நடித்தார். மக்கள் இதை தவறாக பார்க்கவில்லை. அவதாரம், கல்கி ஆகிய படங்களின் பெயர்களுக்கும் சான்றிதழ் அளித்துள்ளோம். 30 ஆண்டுகளுக்கு முன்பாக தசாவதாரம் என்கிற பெயருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஓம் மந்திரத்தின் மீதோ, பகவத் கீதையின் மீதோ கால் வைப்பதாக எந்த காட்சியும் இல்லை. ராமானுஜரின் சீடரான ரங்கராஜன் நம்பி என்கிற பாத்திரத்தில் கமல் நடிக்கிறார். தனது குருபக்தி காரணமாக அவர் தியாகம் செய்கிறார்.

சிதம்பரம் கோவிலில் இருந்து கோவிந்தராஜ சிலையை அகற்ற முற்படும்போது வீரர்களுடன் ரங்கராஜன் நம்பி சண்டை போடுகிறார். இன்னும் படம் வெளியிடப்படவில்லை.

படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த காட்சிகளின் தாக்கம் என்ன என்பதை படம் பார்த்த பிறகே ஆராய முடியும். யூகத்தின் அடிப்படையிலேயே இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, May 14, 2008

BCCI ஹர்பஜனுக்கு பளார்


ஸ்ரி சாந்தை கண்ணத்தில் அறைந்த குற்றத்திற்காக ஹர்பஜனுக்கு ஐந்து சர்வதேச போட்டிகளில் விளையாட இந்திய கிர்க்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இனி இதுபோன்ற ஒழுங்கீனத்தில் நடந்துகொண்டால் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஹர்பஜன் ஒப்புக்கொண்டார். தற்போதுள்ள தடையின் படி அவர் ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதே குற்றச்சாட்டிற்காக ஐபிஎல் கிரிக்கெடில் 11 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை பற்றி கருத்து தெரிவித்த ஹர்பஜனின் பயிற்சியாளர் இந்த சம்பவத்தின் காரணமாக ஹர்பஜன் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தடை அநியாயமானது என்றும் கூறியுள்ளார்.

இந்த தடையால் அடுத்த மாதம் பங்களாதேஷில் நடைபெறும் ஒடிஐ போட்டியிலும், பாகிஸ்தானில் நடக்கவுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஹர்பஜன் விளையாட முடியாது.

ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு!

டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு மேலும் 23 பைசா குறைந்து, மே 14 அன்று காலை 42 ரூபாய் 33 பைசாவாக இருந்தது. இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பொருளாதார வேகம் குறைந்து வருவதை அடுத்து, ரூபாய் நாணயத்தின் மதிப்பும் குறைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இன்றைய போட்டிக்கு சச்சின் கேப்டன்.

ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை காயம் காரணமாக விளையாடாத நட்சத்திர வீரர் சச்சின் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக களமிறங்குகிறார். தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும், சனத் ஜெயசூர்யாவுடன் துவக்க வீரராக களமிறங்குவேன் என்றும் டெண்டுல்கர் தெரிவித்தார். மும்பை இந்தியன் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளது.

நாள் குறிப்பிடப்படாமல் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத் தொடர், மே 14 அன்று, மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பாலிடெக்னிக் கட்டணம் ரத்து.

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டுக் கல்விக் கட்டணம் 2,500 ரூபாயை ரத்து செய்ய முதலமைச்சர் அனுமதி வழங்கியிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

வரும் கல்வியாண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார். தமிழகச் சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதலமைச்சருடன் கலந்து பேசி இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அமைச்சர் கூறினார்

மீண்டும் சிம்ரன்.

ஹரி இயக்கத்தில் உருவாகும் சேவல் படத்தில் நாயகன் பரத்துடன் கடுமையாகப் போட்டிபோடும் வேடத்தில் நடிக்கிறார் சிம்ரன்.


தமிழ்த் திரையுலகில் ஒருவிதத்தில் சிம்ரனுக்கு இது மறுபிரவேசம் மாதிரிதான். திருமணத்துக்குப் பிறகு ஒரு சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்த சிம்ரனுக்கு இது பொருத்தமான படமாக அமையும் என்கிறார் இயக்குநர் ஹரி. இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடி பூனம் பாஜ்வா என்றாலும், கதாநாயகிக்கு சற்றும் குறையாத கனமான வேடமாம் சிம்ரனுக்கு. இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு வடிவேலு. இடைவேளைக்கு முன்பு வரை அவரும் பரத்தும் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும் என்கிறார் ஹரி. ஜின்னா கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ஏ.ஜின்னா தயாரிக்கும் முதல் படம் இது. ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஹரியுடன் பிரகாஷ் இணையும் முதல் படம் சேவல் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம்.

Tuesday, May 13, 2008

EDS ஐ விலைக்கு வாங்கியது HP நிறுவனம்


மேலே HP சிஇஒ மார்க் ஹர்ட்

டெக்ஸாஸ் மாகாணத்தில் பிளானோவை தலைமையிடமாகக் கொண்ட Electronics Data Systems (EDS) கார்பரேஷனை 13 பில்லியன் டொலருக்கு கலிபோர்னியா மாகாணத்தின் பாலொ அல்டோ நகரில் தலைமையிடமாக கொண்டு இயங்கும் கணினி உற்பத்தி நிறுவனமான ஹாவ்லட் பேக்கார்ட் (Hewlett-Packard - HP) நிறுவனம் திங்கட்கிழமை வாங்கியது.

ஐபிஎம் மின் ஊழியராக இருந்த H. Ross Perot என்பவர் தனியே வந்து 1962 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர் முதலீட்டில் EDS நிறுவனத்தை ஆரம்பித்தார்.
1984 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை GM ஜெனரல் மோட்டார்ஸ் நிறுனத்திற்கு 2.5 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்தார். தன்னுடைய பெயரில் (Perot Systems ?) தனியே வேறொரு நிறுவனத்தை தொடங்க எண்ணி முற்றிலுமாக (all shares) கார் தயாரிப்பு நிறுவனமான ஜிஎம்மிற்கு விற்றார்.

பீரட்டின் கை வெள்ளை மாளிகை வரை நீண்டது. 1992, 1996 களில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

தற்போது இந்நிறுவனத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் 65 நாடுகளில் பணிபுரிகிறார்கள். மென்பொருள் சேவை நிறுவனமான இது உலகின் முதல் மூன்று பெரிய நிறுவனங்களில் HP, IBM க்கு அடுத்ததாக இருந்து வந்தது. சென்ற ஜனவரியில் அமெரிக்காவின் எம்பஸிஸ் (Mphasis) என்னும் BPO நிறுவனத்தை EDS வாங்கியிருந்தது. அப்போது அதில் 20,000 பேர் பணியிலிருந்தார்கள்.

இந்தியாவில் மட்டும் தற்போது EDS நிறுவனத்தில் 30,000 பேர் பணியில் உள்ளார்கள்.

EDS ன் ஒரு பங்குக்கு 25$ என்று நிர்ணயித்திருக்கிறது, இது 33 சதவீத விலை அதிகமாகும். EDS ஐ விலைக்கு வாங்குவதன் மூலம முன்னணியில் உள்ள IBM நிறுவனத்தை வீழ்த்த முடியும் என HP யின் கணக்காகும்.

கடந்த ஜனவரியின் போது HP யின் சந்தை விலை 115 பில்லியன் டொலராகும். அப்போது அதன் கையிருப்பு மட்டும் 10 பில்லியன் டொலர் இருந்தது. அதனால் EDS க்கு தன்னுடைய கையிருப்பிலிருந்தே அது கொடுக்கலாம். EDS ஐ வாங்குவதன் மூலம் இரண்டாவது இடத்துக்கு HP வந்துள்ளது. முதலாவதாய் ஐபிஎம்.

2002 ஆம் ஆண்டில் காம்பாக் நிறுவனத்தை HP 20 பில்லியன் டொலருக்கு பிறகு வாங்கும் இரண்டாவதாக மிகப்பெரிய நிறுவனமாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் மாற்றம் காரணமாக அமெரிக்க பங்கு வணிகத்தில் ஹெச் பி நிறுனத்தின் பங்குகள் 5.8 சதவீதம் அளவிற்கு குறைந்து 43.75 டொலர் வரை சென்றன. EDS நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன 36 சதவீதம் ஏறி 24.44 டொலருக்கு வந்தது.

முன்னதாக டாட்காம் சரிவுகளின் போது 2002-2003 ஆம் ஆண்டுகளில் 1.7 பில்லியன் டொலர் அளவிற்கு நட்டத்தை EDS கண்டிருந்தது. பின்னர் இந்தியா போன்ற நாடுகளுக்கு வேலைகளை அனுப்பி சரிவுகளிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

மலேசியா‌வி‌ல் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும்: திருமாவளவன் அறிக்கை.

மலேசியாவில் ஓட்டல் ஒன்றில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கும் தமிழர்களை விடுவிக்க முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தாமண் துன் டாக்டர் இஸ்மாயில் என்ற இடத்தில் அமைந்துள்ள மக்புல் ரெஸ்டராண்ட் என்னும் உணவு விடுதியில் ஏறத்தாழ 37 தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று வேலை செய்கின்றனர்.பினாங்கு மாநிலத்தை சேர்ந்த இந்த உணவகத்தின் அதிபர் சமிக் பரதோஷ் என்பவருக்கு கோலாம்பூரில் உள்ள 6 கிளைகளில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த உணவகத்தின் தொழிலாளர்கள் விடுப்பு கேட்டாலோ, உரிய ஊதியம் கேட்டாலோ உள்ளூர் அடியாட்களை வைத்து அடித்து, உதைத்து துன்புறுத்துவது தொடர்ந்து நடக்கும் கொடுமையாகும்.
கடுமையான பணிச்சுமையுடன், ஓய்வும், ஊதியமும், விடுப்பும் இன்றித் தவிக்கும் இந்த தொழிலாளர்கள் கடுமையான தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.இந்த நிலையில், உணவக அதிபரின் இத்தகைய கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், சில நாட்களுக்கு முன் உயிருக்கு அஞ்சி, கோலாப்பூர்- பத்துமலை கோ‌யிலில் தஞ்சமடைந்த 37 பேரையு‌ம் காவல்துறையினர் மீண்டும் உணவு விடுதியிலேயே ஒப்படைத்து இருக்கின்றனர்.இந்த நிலையில் 6 பேர் மீது உணவு விடுதி உரிமையாளர் திருட்டு பழி சுமர்த்தி காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்திய தூதரகமோ, மலேசிய தூதரகமோ இதை தட்டிக்கேட்கவில்லை. இந்திய அரசு, இந்த ‌விடயத்தில் தலையிட்டு மக்புல் உணவு விடுதியில், பணிபுரியும் தமிழர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.தமிழகம் திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறோம் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

Monday, May 12, 2008

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகள், அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அவற்றை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் வலியுறுத்தி உள்ளார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று காவல்துறை, தீயணைப்புத் துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று டி.சுதர்சனம் பேசுகை‌யி‌ல், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் சில கட்சிகளும், அமைப்புகளும் பேரணி மற்றும் கூட்டங்களை நடத்துகின்றன. அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அத்தகைய அமைப்புகளையும், கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

மனிதநேயத்தோடும், அறநெறியோடும் காவல்துறை செயல்பட வேண்டும். காவிஉடை தெய்வபக்திக்கு அடையாளம். கதர் உடை தேசபக்திக்கு அடையாளம். அதேபோல காக்கி உடை கடமைக்கு அடையாளம். காவல்துறை தவறு செய்தால் அது முதலமைச்சரை தான் பாதிக்கும். எனவே இந்த துறை கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும் என் சுதர்சனம் கேட்டுக்கொண்டார்.

குருவி - விமர்சனம்!

வைர சுரங்கத்துக்காக ஒரு கூட்டம் மக்களை அடிமையாக்கி வைத்திருக்கும் வில்லன். வில்லனிடமிருந்து தனது அப்பாவையும், அப்பாவி ஜனங்களையும் காப்பாற்றும் ஹீரோ. காப்பாற்றும் வேலைகளுக்கு நடுவில் வில்லனின் அழகான தங்கையுடன் காதல். முடிவில் எல்லோரும் எதிர்பார்த்த சுபம்!பழைய பிளாக் அண்டு ஒயிட் ஜெய்சங்கரின் கெளபாய் ஸ்டைல் கதைதான் குருவி. விஜயின் அப்பா மணிவண்ணன் தனது மூன்று மனைவிகளையும், ஒரு டஜன் பிள்ளைகளையும் அம்போவென விட்டுவிட்டு தலைமறைவாகிறார். கடன் தொல்லைக்குப் பயந்து ஓடிப்போனார் என்று நினைத்திருக்க, மலேசியாவில் தான் சந்தித்த தாதா கோச்சாதான் (சுமன்) தனது அப்பாவை அடிமையாக்கி வைத்திருக்கிறான் என்ற விவரம் விஜய்க்கு தெரிய வருகிறது. அப்பாவை காப்பாற்ற வைரச் சுரங்கம் இருக்கும் ஆந்திரா கடப்பாவுக்கு வரும் விஜய் வில்லன்களை அழித்து அடிமைகளை மீட்கிறார்.

ஆட்டத்திலும், அடிதடியிலும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் விஜய். அடிக்கடி பஞ்ச் டயலாக்கும் பேசுகிறார். என்னதான் சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் பல நூறு மீட்டர் பறந்து ரயிலைப் பிடிப்பதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா. விவேக்கிற்கு டபுள் மீனிங் இல்லாமல் டயலாக் பேசவே தெரியவில்லை. த்ரிஷா? நாலே பாட்டோடு ஒதுங்கி விடுகிறார். சுமன் குழந்தையை கையில் வைத்து துப்பாக்கியால் மிரட்டுவதெல்லாம் நம்பியார் காலத்திலேயே பார்த்தாயிற்று. கொண்டா ரெட்டியாக வரும் ஆசிஷ் வித்யார்த்தி சுமனைவிட தேவலை. கல்குவாரி எ·பெக்டில் இருக்கும் கடப்பா லொகேஷனும் அந்த கடப்பா வில்லனும் பக்கா தெலுங்கு ஸ்டைல். குருவியில் குறிப்பிட்டு சொல்லும்படி இருப்பவை வித்யாசாகரின் இசையும், கோபிநாத்தின் கேமராவும். ஒவ்வொரு ஃபிரேமும் அற்புதம். படம் நெடுக பத்தடி தூரத்தில் நின்று விஜயை சுடுகிறார்கள். ஏ.கே.47-ம் உண்டு. ஆனால் ஒரு குண்டு அவர் மீது பட வேண்டுமே? ம்ஹூம்...!ஹைடெக் டெக்னீஷியன்களின் உழைப்பை கந்தலான திரைக்கதை காலி செய்து விடுகிறது. விஜயை நம்பியதில் பாதி கதையையும் நம்பியிருக்கலாம் தரணி.

Sunday, May 11, 2008

வேலை தருவதாக மோசடி; மாலைப் பத்திரிக்கைகளுக்கு திருவிழா

அம்பத்தூர், மே. 11-

சென்னை அண்ணா நகர் மேற்கு, 18-வது மெயின் ரோட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு `விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ்' என்ற பெயரில் கம்ப்யுட்டர் கம்பெனி ஆரம்பிக்கப்பட் டது. இதன் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்த சிவக்குமார்.

இங்கு பல்வேறு நிறுவனங் களின் திட்டப்பணிகளை (புராஜக்ட் ஒர்க்) ஆர்டர் எடுத்து வாங்கி, அதை முடித்து கொடுக்கும் வேலை வழங்கப்பட்டு வந்தது. புரா ஜக்ட் வேலைகளை செய்ய கம்ப்யுட்டர் படித்த இளைஞர்கள்-இளம்பெண் களை வேலைக்கு சேர்த்தனர்.

read more


நன்றி மாலை மலர்

//சுமார் 1600-க்கும் மேற் பட்டவர்கள் திரண்டு புகார் செய்ததால் திருமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது.//

திருவிழா என்றால் கரகாட்டம் ஒயிலாட்டம் நடைபெற்றதா, குத்து டான்ஸ் இருந்ததா?, பஞ்சு மிட்டாய், கடலை மிட்டாய் வித்தார்களா?

பணத்தையும் வாழ்வையும் தொலைத்தவர்கள் பற்றிய செய்தி ஜனரஞ்சக பத்திரிக்கைக்கு திருவிழா போன்றுள்ளது. ஆம் சில நாட்களுக்கு மாலைப் பத்திரிக்கைகளுக்கு திருவிழா தான்....

புஷ்ஷின் மகள் ஜென்னாவின் திருமணம்


அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மகள் ஜென்னாவின் திருமணம் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள புஷ்ஷிற்கு சொந்தமான 1600 ஹெக்டர் பரப்பளவில் உள்ள கிராபோர்ட் பண்ணை வீட்டில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் புஷ்ஷிற்கு நெருங்கிய 200 குடும்ப நண்பர்கள் கலந்து கொள்கின்றனர். ஜென்னாவின் காதலர் ஹென்றி சேஸ் ஹேகர் முன்னாள் விர்ஜீனியா ஆளுநரின் மகனாவார். ஜென்னாவின் வயது 26, மணமகனுக்கு வயது 30.

2004 தந்தையின் தேர்தல் பிரசாரத்தின் போது ஹென்றியுடன் காதல் வயப்பட்டார் ஜென்னா புஷ். மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய புஷ் தம்பதி திருமணத்தை எளிமையாக நடத்தத் திட்டமிட்டது. அமெரிக்க அதிபர்கள் பதவியில் இருக்கும்போது அவர்களது பிள்ளைகளுக்கு நடைபெறும் 22வது திருமணம் இதுவாகும்.

அமெரிக்க ஜனாதிபதி பதவியின் பதவிக்காலம் வருகிற ஜனவரியுடன் முடிவுறுகின்ற நிலையில் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி, இராக் போர் எதிர்ப்பு போன்ற காரணங்களால் திருமணம் எளிமையாக நடைபெறுவதாக புஷ்ஷின் வட்டாரங்கள் தெரிவித்தன.

விருந்தின் போது ஸ்மிது குழுவின் 'You Are So Beautiful' பாட்டுக்கு மகளுடன் புஷ் டான்ஸ் ஆடுவார். தாஜ்மஹால் வாத்தியக் குழுவினரின் Lovin' in My Baby's Eyes பாட்டுக்கு புது தம்பதியினரின் ஆட்டம் (டான்ஸ்) நடைபெறும். திருமண உடையாக Oscar de la Renta நிறுவனம் தயாரிக்கும் கவுனை மணமகள் அனிந்திருப்பார்.

முன்னதாக தன்னுடைய பண்ணைவீட்டில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற லாரா புஷ் தயக்கம் காட்டியதாக தெரிகிறது. அங்கு கோழி (சிக்கன்) சமைக்க சரியான சமையற்காரர் கிடைப்பாரா என்ற கவலையில்.

இவ்விருந்தில் இந்தியர்கள்
எவராவது கலந்து கொள்கிறார்களா என்பது பற்றி தகவலில்லை.

தலைநகர் பெய்ரூட்டை சியா பிரிவினரின் ஹிஸ்புல்லா கைப்பற்றியது

அமெரிக்காவின் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் எல்லைகளையொட்டியுள்ள பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது.

ஹிஸ்புல்லா அமைப்பு இரான், சிரியாவின் உதவியுடன் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஹிஸ்புல்லாவின் ஒரு பிரிவு அரசியலில் ஈடுபட்டுள்ளதோடு தற்போதைய அரசில் அங்கமும் வகிக்கிறது. சியா பிரிவைச் சார்ந்த நஸ்ரல்லா என்பவர் ஹிஸ்புல்லாவின் தலைவராக உள்ளார்.

ஹிஸ்புல்லாவின் ஆயுத, திறமைகளை அந்நாட்டின் இரானுவத்தை விட வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று பிரதமர் சினாரியோ, ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்று தெரிவித்தார்.

தருணம் பார்த்துக்கொண்டிருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் இந்த அறிவிப்பு ஹிஸ்புல்லா மீதான அரசின் நேரடிப்போருக்கான அறிவிப்பு என்று அறிவித்தார். அதனால் ஹிஸ்புல்லாவின் ஆயுத தாரிகள் கடந்த வியாழன் அன்று தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளை மறித்தனர். இதனால் பல்வேறு நாடுகளின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து பெய்ரூட்டின் பெரும் பகுதிகளை அவர்கள் கைப்பற்றினர். சுன்னிப் பிரிவைச்சார்ந்த புயூச்சர் மூவ்மென்ட் அமைப்பினரின் சொத்துக்களுக்கு தீவைத்தனர். முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி க்குச் சொந்தமான தொலைக்காட்சி நிலைய்யத்திற்கும் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் தீவைத்தனர்.

இந்த சம்பவத்தில் 30 பேர் இறந்துள்ளனர். அதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சவ ஊர்வலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சம்பவத்தில் சியா பிரிவைச்சாரந்த ஒருவர் சுட்டதில் இருவர் பலியாயினர்.

இதுபற்றி தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் சினாரியோ ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற ஹிஸ்புல்லா சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவத்தை சவூதி அரேபியா கடுமையாக கண்டித்துள்ளது. அவசர கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தது. அமெரிக்கா, சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் லெபனான், சவூதி அரேபியாவின் அதிகப்படியான பண உதவி பெற்று வருகிறது.


கடைசியாக கிடைத்த தகவலின்படி, இரானுவம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஹிஸ்புல்லா அமைப்பு தங்களுடைய ஆயுததாரிகளை சனிக்கிழமையிலிருந்து பெய்ரூட்டிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் தொலைத்தொடர்பு இரானுவ கண்கானிப்பின் கீழ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, May 10, 2008

பாஸ் (நீங்க) பாஸ் (BOSS PASS)

தா. கிருட்டினன் கொலை வழக்கிலிருந்து விடுதலையான மு.க அழகிரியின் மதுரை கோர்டின் நேற்றைய தீர்ப்பின் இன்றைய வெளியீடு தான் பாஸ் நீங்க 100/100 பாஸ்.

சென்னை நகரின் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்டுள்ள ஆளுயர சுவரொட்டிகள்.



(இன்று பள்ளி இறுதித்தேர்வுகளின் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.)

Friday, May 9, 2008

முன்னர் அறிவித்தபடி வேலூ‌ர் கோ‌ட்டை‌யி‌ல் தொழுகை: ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் விடுத்துள்ள அறிக்கையில் திட்டமிட்டபடி வேலூர் கோட்டையில் உள்ள நவாப் பள்ளி வாசலில் 9ஆ‌ம் தேதி (இன்று) தொழுகை நடக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமான வேலூர் கோட்டையில் 48 அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய அலுவலகங்களும் அங்கு தொடங்கப்படுகின்றன. ஆனால் தொல்பொருள்துறை அதனை மவுனமாக வேடிக்கை பார்க்கிறது.

மசூதியை தபால் அலுவலகமாக மாற்றுவதற்கும் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதனையும் தொல்பொருள் துறை கண்டுகொள்ளவே இல்லை. வேலூர் கோட்டை பள்ளி வாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தொல்பொருள் துறையின் நிலைப்பாடு அதன் பாரபட்ச போக்கை வெளிக்காட்டுகின்றது. இக்கோட்டைக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில், புதிதாக கட்டப்பட்டுள்ள இரு சிறு கோயில்களில் வழிபாடு நடப்பதற்கும், 48 அரசு அலுவலகங்கள் முழுவீச்சில் இயங்குவதற்கும் தொல் பொருள் துறை அனுமதித்திருக்கும் போது, பள்ளி வாசலில் தொழுகை நடத்துவது மட்டும் பழம்பெரும் நினைவு சின்னத்துக்கு ஊறுவிளைவிக்கும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?

சென்னையில் நட‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் மே 5ஆ‌ம் தேதி முதல் வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகைக்கு திறந்து விட ஒப்பு கொள்ளப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கொடுத்த இந்த வாக்குறுதியை மீறிவிட்டார்கள். இதனால் 9ஆ‌ம் தேதி (இன்று) எனது தலைமையில் வேலூர் கோட்டை பள்ளி வாசலில் நண்பகல் தொழுகை நடத்த இருக்கிறோம். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்‌கிறார்கள் எ‌ன்று ஜவாஹிருல்லாஹ் கூ‌றினா‌ர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாயின : 84.4 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி

‌‌‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வு முடிவ‌ி‌ல் 84.4 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர். இ‌தி‌ல் கட‌ந்த ஆ‌ண்டை ‌விட இ‌ந்த ஆ‌ண்டு தே‌ர்‌ச்‌சி வ‌ி‌கித‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.
பிள‌ஸ் 2 தே‌ர்வு இ‌ன்று காலை 9 ம‌ணி‌‌க்கு அரசு ப‌ள்‌ளி‌த் தே‌ர்வுக‌ள் துறை இய‌‌க்க‌க‌ம் வெ‌ளி‌யி‌ட்டது. இ‌தி‌ல் அரசு ம‌ற்று‌ம் த‌னியா‌ர் ப‌ள்‌ளிக‌‌ள் மூ‌ல‌ம் தே‌ர்வுக‌ள் எழு‌தியவ‌ர்க‌ள் மொ‌த்த‌ம் 6,41,230 பே‌ர். ப‌ள்‌ளிக‌‌ள் மூலமாக தே‌ர்வு எழு‌திய‌வ‌ர்க‌ள் 5,87,994 பே‌ர்.

ப‌ள்‌ளிக‌ள் மூல‌ம் தே‌ர்வு எழு‌திய மாணவ‌ர்க‌ள் 2,79,025, மாண‌விக‌ள் 2,70,371.
தே‌‌ர்‌ச்‌சி பெ‌ற்ற மாணவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை கட‌ந்த ஆ‌ண்டை ‌விட இ‌ந்த ஆ‌ண்டு 3 வ‌ிழு‌க்காடு அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. கட‌ந்த ஆ‌ண்டு 81 ‌விழு‌க்காடாக இரு‌ந்தது. ‌இ‌ந்த ஆ‌ண்டு 84.4 ‌விழு‌க்காடாக உய‌ர்‌ந்து‌ள்ளது. மொ‌த்த‌ம் 4,96,494 பே‌ர் தே‌ர்‌‌ச்சி பெ‌ற்று‌ள்ளன‌ர்.

60 ‌விழு‌க்கா‌ட்டு‌க்கு மே‌ல் எடு‌த்தவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை கட‌ந்த ஆ‌ண்டை ‌விட இ‌ந்த ஆ‌ண்டு அ‌திக‌ரி‌த்து‌‌ள்ளது. கட‌ந்த ஆ‌ண்டு 3,29,091பே‌ர். இ‌ந்த ஆ‌ண்டு 3,60,722 பே‌ர். வழ‌க்க‌ம்போ‌ல் இ‌ந்த ஆ‌ண்டு‌ம் மாண‌விகளே அ‌திக‌ம் தே‌ர்‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர். கட‌ந்த ஆ‌ண்டு மாணவ‌ர்க‌ள் 77.4 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர். இ‌ந்த ஆ‌ண்டு 81.3 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர்.
கட‌ந்த ஆ‌ண்டு மாண‌விக‌ள் 84.6 ‌விழு‌க்காடு தே‌ர்‌‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர். இந்த ஆ‌ண்டு 87.3 வ‌ிழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர்.

ஒ‌வ்வொரு பாட‌த்‌திலு‌ம் இ‌ந்த ஆ‌ண்டு 200‌க்கு 200 ம‌தி‌ப்பெ‌ண்க‌ள் பெ‌ற்றவ‌ர்க‌ள் விவர‌‌ம் வருமாறு: இய‌ற்‌‌பிய‌ல் 282 பே‌ர், வே‌தி‌யி‌ய‌ல் 306 பே‌ர், உ‌யி‌ரி‌ய‌ல் 153 பே‌ர், தாவர‌விய‌ல் 19 பே‌ர், ‌வில‌ங்‌கிய‌ல் 1, க‌ணித‌ம் 3,852 பே‌ர், க‌ணி‌‌னி அ‌‌றி‌விய‌ல் 60 பே‌ர், வ‌ணிக‌விய‌ல் 148 பே‌ர், கண‌க்குப‌தி‌விய‌ல் 739, வ‌ணிக க‌ணித‌ம் 291 பே‌ர்.

விலையேற்றத்தால் அல்லல்படும்இலங்கை தமிழ் குடும்பங்கள் ராமேசுவரம் வந்த அகதிகள் தகவல்

விலையேற்றத்தால் அல்லல்படும்இலங்கை தமிழ் குடும்பங்கள் ராமேசுவரம் வந்த அகதிகள் தகவல்

இலங்கையில் அத்தியா வசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் தமிழ் குடும்பங்கள் அல்லல் பட்டு வருவதாக ராமேசு வரம் வந்த அகதிகள் தெரி வித்தனர்.

அகதிகள் வருகை

இலங்கையில் இருந்து 4 குடும்பத்தை சேர்ந்த 5 ஆண் கள், 6 பெண்கள், 3 ஆண் குழந் தைகள், 5 பெண் குழந்தைகள் என 19 பேர் ஒரு பிளாஸ்டிக் படகில் அகதியாக தமிழகம் புறப்பட்டார்கள். இவர்கள் நேற்று நள்ளிரவில் தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரை வந்தி றங்கினார்கள்.
அவர்கள் நேற்று காலையில் விசாரணைக்காக தனுஷ்கோடி காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் மண்டபம் அகதி கள் முகாமுக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.

விலையேற்றம்

இவர்களில் மன்னாரை சேர்ந்த மீனவர் இருதயதாசன் புரூஸ்(46), நிருபர்களிடம் கூறியதாவது:- பாதுகாப்பு நட வடிக்கை என்று கூறி இலங்கை கடற்படையினர் எங்களை கடல் செல்ல அனுமதிப்ப தில்லை. அனுமதி தந்தாலும் குறுகிய நேரத்தில் கரைக்கு திரும்புமாறு வற்புறுத்துகிறார் கள். மீன்பிடித்துவிட்டு வர தாமதமானால் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்பு றுத்துகிறார்கள்.

இதனால் என் குடும்பம் வருமானமின்றி தவித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் அத்தியாவசதிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்து விட் டது. ஒரு தேங்காய் 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ அரிசி 90 ரூபாய்க்கும், காய்கறிகள் 200 ரூபாய்க்கும், மண்எண்ணை ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின் றன.
சுட்டுக்கொலை

விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளும், தமிழ் அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார் கள். ஆனால் அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளா மல் இலங்கை அரசு ராணு வத்தை கொண்டு போராட் டத்தை ஒடுக்க நினைக்கிறது.

மன்னார் அச்சங்குளம் பகு தியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்து சென்ற 2 இளை ஞர்களை மோட்டார் சைக்கி ளில் வந்த இலங்கை ராணுவத் தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு சென்றுவிட்ட னர். உணவும் கிடைக்கவில்லை, உயிருக்கும் பாதுகாப்பில்லை என்பதால், எனது மனைவியின் நகைகளை விற்று படகு கட்ட ணமாக ரூ.40 ஆயிரம் கொடுத்து அகதியாக வந்தேன். என் மனைவி அருள்மேரி(47), மகன் தேவராஜ் புரூஸ்(24), மகள்கள் சூசையம்மாள்(16), சகபரா(15) ஆகியோரையும் அகதியாக அழைத்து வந்துள் ளேன். எனது மகள்கள் இரு வரும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ளார் கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

புரோட்டா இல்லையென்று கூறியதால் இரு கோஷ்டியினர் மோதல் 9 பேர் படுகாயம்

புரோட்டா இல்லையென்று கூறியதால் இரு கோஷ்டியினர் மோதல் 9 பேர் படுகாயம்

திண்டுக்கல் அருகே ஹோட்டலில் புரோட்டா இல்லையென்று கூறியதால் ஏற்பட்ட தகராறில் இரு கோஷ்டியினர் மோதிக் கொண்டனர். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர் பாலாஜி(47). இங்கு சம்பவத்தன்று சின்னாளபட்டியைச் சேர்ந்த குமரேசன், செந்தில், குமார், மயில்சாமி ஆகியோர் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் புரோட்டா கேட்டுள்ளனர். பாலாஜி புரோட்டா இல்லையென்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கும், பாலாஜிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

தகராறு முற்றிய நிலையில் பாலாஜியை அடித்து கழுத்தைப் பிடித்து நெரித்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதைப் பார்த்த பாலாஜியின் மகன் சண்முகம், சரவணன், உறவினர் மணிகண்டன், முத்து ஆகியோரும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் அனைவருக்கும் காயம் ஏற்பட்டு திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மக்கள் டி.வி.யின் புதிய நிகழ்ச்சிகள்

மக்கள் டி.வி.யின் புதிய நிகழ்ச்சிகள்


மக்கள் தொலைக்காட்சியில் நேயர்களுக்குப் பயனுள்ள வகையில் மேலும் சில புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அவற்றுள் சில...

கற்போம் கணினி: அலுவலகங்கள் மட்டுமல்லாமல் இல்லங்களும் கம்ப்யூட்டர்மயமாகி வரும் இன்றைய சூழ்நிலையில் இல்லத்தரசிகளுக்கு கம்யூட்டரைப் பயன்படுத்தக் கற்றுத் தரும் இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

முக்கூடல்: இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. தமிழ் எண்களையும் தமிழ்ச் சொற்களையும் அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் நேயர்களுக்கு ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆர்த்தி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது

புத்தக ஆர்வலர்களுக்கு... புத்தகங்களை மட்டுமே பரிசாக வழங்கும் கேள்வி-பதில் பாணியிலான இந்த அறிவார்ந்த விளையாட்டு நிகழ்ச்சி, நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பார்வைகள்: அன்றாட சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் அலசும் இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

திரைகடல் ஓடி: ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான துறையில் ஈடுபட்டிருக்கும், ஈடபட விரும்பும் வணிகர்களுக்கு திசைகாட்டி விசையூட்டும் இந்த நிகழ்ச்சி, வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கும்பகோணத்தில் ஒரே நேரத்தில் 12 கருட சேவை

கும்பகோணத்தில் ஒரே நேரத்தில் 12 கருட சேவை


கும்பகோணத்தில் அட்சய திருதியையொட்டி 12 வைணவக் கோயில்களின் பெருமாள் எழுந்தருளி வியாழக்கிழமை ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 12 கருட சேவை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கருடசேவையில் வழிபட்டனர்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து மூன்றாம் நாளான அட்சய திருதியை அன்று ஸ்ரீ மகாலெட்சுமி, ஸ்ரீ மகாவிஷ்ணுவை தரிசனம் செய்து வழிபட்டால் குபேரனுக்கு இணையான பொன்னும், புகழும் வந்து சேரும் என பார்வதி தேவியிடம் சிவபெருமான் கூறியதாக ஐதீகம்.
நாட்டில் வறட்சி, வறுமைகள் ஒழியவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் செழிப்புடன் விளங்கவும் அட்சய திருதியை அன்று முன்னோர்கள் தொன்றுதொட்டு பெருமாளை வழிபடுவது மரபு.

அந்த வகையில் கோயில் நகரம், பாஸ்கர சேத்திரம், தென்னக அயோத்தி, பூலோகவைகுந்தம் என்றெல்லாம் போற்றப்படும் இத்தலத்தில் மட்டுமே பல நூற்றாண்டுகளாக 12 கருட சேவை நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் கருடசேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீ சக்கரபாணி சுவாமி, ஸ்ரீ ராமஸ்வாமி, ஸ்ரீ ஆதிவராக பெருமாள், ஸ்ரீ ராஜகோபால சுவாமி, ஸ்ரீபட்டாபிராமர், சோலையப்பன்தெரு ஸ்ரீ ராமசுவாமி, ஸ்ரீ சந்தான கோபால சுவாமி, ஸ்ரீ வேணுகோபால சுவாமி, ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ வரதராஜபெருமாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகிய 12 கோயில்களின் உத்சவ பெருமாள்களும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனத்தில் அந்தந்த கோயிலிலிருந்து புறப்பட்டு பெரிய கடைத்தெருவில் ஒரே இடத்தில் எழுநதருளி 12 கருட சேவை ஒரே நேரத்தில் நடைபெற்றது.

பெரிய தெரு ஆஞ்சநேயர் கருட வாகனத்திற்கு முன்
எழுந்தருளி பெருமாள்களை வழிபட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் சுமார் 12 மணியளவில் மகாதீபாரதனை நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

மின் இணைப்பு இல்லாத கிராம மக்களுக்கு மின் கட்டண பில்

மின் இணைப்பு இல்லாத கிராம மக்களுக்கு மின் கட்டண பில்


மின் இணைப்பு இல்லாத கிராம மக்களுக்கு, மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று பில் அனுப்பப்பட்டுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் ஹர்தோய் கிராம மக்களுக்கு இதுபோல மின்சார கட்டண பில் அனுப்பப்பட்டுள்ளது.


இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தலித்துகள். இதுபோல மின்சார பில் அனுப்பப்பட்டது பற்றி, மின்துறை அமைச்சர் ராம் வீர் உபாத்யாவிடம் குன்வர் சாஹே என்பவர் புகார் கூறினார். உடனே இதுபற்றி விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவிட்டார். அப்போதுதான் இந்த விஷயம் அரசுக்குத் தெரிந்தது.


சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு மின்சார இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாம். அப்போது சில மின்கம்பங்களை மின்சார வாரிய ஊழியர்கள் அமைத்தார்களாம்.


நம் ஊருக்கு மின்சாரம் வரப்போகிறது என்று ஆவலாக இருந்தார்கள் கிராமத்தினர். ஆனால் இதுவரை அவர்களது கனவு கனவாகவே உள்ளது.
மின்சார இணைப்பு கொடுத்துவிட்டதாக அதிகாரிகள் கணக்குக் காட்டியிருப்பார்கள் போலும். அதனால்தான் இப்போது எங்களுக்கு பில் அனுப்பப்படுகிறது என்று வேடிக்கையாகக் (வேதனையப்பா) கூறுகிறார்கள் அந்த கிராம மக்கள்.

அரவானிகளுக்கு கணினிப் பயிற்சி

அரவானிகளுக்கு கணினிப் பயிற்சி

தமிழக அரசு சார்பில் அரவானிகளுக்கு எல்காட் நிறுவனம் கணினிப் பயிற்சி அளித்து வருகிறது.

அரசுத் துறை ஊழியர்களுக்கு கணினிப் பயிற்சியை எல்காட் நிறுவனம் ஜூன் 2007 முதல் வழங்கி வருகிறது. இதில் அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் ஆகியவையும் அடங்கும்.

3 நாள்கள் முதல் 5 நாள்கள் வரை நடைபெறும் இந்த பயிற்சியில் இதுவரை 442 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இன்னும் அதிகம் கற்க நினைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தொடக்கத்தில் தலைமைச் செயலகம், மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவசமாக இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது பல்வேறு துறை
சார்ந்த ஊழியர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், வணிக வரித் துறை ஊழியர்கள் 7 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க சுமார் ரூ.1.50 கோடி கட்டணம் வசூலித்து இருப்பதாகக் கூறுகிறார் எல்காட் துணை மேலாளர் வி.கிரிஜாஸ்ரீ.

இதன் தொடர்ச்சியாக, முதன் முறையாக 25 அரவானிகளுக்கு இம்மாதம் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் குறைந்தது 8-ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்தவர்களாக உள்ளனர். பயிற்சி முடிந்த பின்பு அவர்கள் விரும்பினால் கூடுதல் பயிற்சியையும் பெறலாம்.

பயிற்சி குறித்து இளம்கலை மனோதத்துவ இயல் தேர்ச்சி பெற்ற ஷில்பா என்ற அரவானி கூறும் போது, எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் சுயமரியாதையோடு வாழ்வதற்கான தன்னம்பிக்கை பிறக்கும்.

இங்கு 8-வது படித்தவருக்கும் புரியும் வகையில் சொல்லித் தருகிறார்கள். பயிற்சியை சரியாக பயன்படுத்தி எங்களிடம் உள்ள திறமைகளை வெளிக் கொணர்வோம் என்றார்.

அறிவுக் கூர்மை உள்ள இவர்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்படும். திறமை வாய்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

மற்றவர்களைப் போல, அரவானிகளும் பொது நீரோடையில் கலக்க வேண்டும் என்று கூறுகிறார் எல்காட் நிர்வாக இயக்குநர் சி.உமாசங்கர்.
பயிற்சியில் பங்கேற்றுள்ள சேலம், கோவை, மதுரை, சென்னை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரவானிகளுடன் விப்ரோ, இன்போசிஸ் போன்ற பெரிய கணினி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
இவர்களுக்கு, தகுதி அடிப்படையில் வேலை வழங்கவும் அந் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. இது, அரவானிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி விடுதலை

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி விடுதலை

முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கில் தமிழக முதல்வரின் மகன் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக சித்தூர் செஷன்ஸ் நீதிபதி டி.துர்காபிரசாத் வியாழக்கிழமை தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் 20.5.2003-ல் மதுரையில் வாக்கிங் சென்றபோது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர்.

அழகிரி உள்ளிட்ட 13 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை செய்தல்), 120 பி (கூட்டு சதி செய்தல்) மற்றும் 201 (தடயங்களை மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றபோது, இந்த வழக்கு மதுரையில் நடந்தால் அழகிரி ஆதரவாளர்கள் மிரட்டுவார்கள் என்றும் இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து கடந்த டிசம்பரில் இந்த வழக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த மார்ச் முதல் சித்தூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் முத்துராமலிங்கம், வழக்கை விசாரணை செய்த டி.எஸ்.பி. முருகேசன் உள்ளிட்ட 82 பேர் சாட்சியம் அளித்தனர்.

தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் வழக்கறிஞர் ஜின்னா மொழிபெயர்த்தார்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம். மன்னன் என்கிற மதுரை மன்னன், பி.ஈஸ்வர் கோபி, சிவகுமார் என்கிற கராத்தே சிவா, கார்த்திக், ஈஸ்வரன், மணி, பாலகுரு, பாண்டி என்கிற உதால பாண்டி, சீனி என்கிற சீனிவாசன், ராஜா, முபாரக் மந்திரி, சேட் என்கிற இப்ராகிம் சேட் ஆகிய 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அரசு தரப்பில் ராஜேந்திர ரெட்டி ஆஜரானார். அழகிரி உள்ளிட்டோர் சார்பில் வழக்கறிஞர்கள் விவி சந்திரசேகரன், பி. விஜயகிருஷ்ண ரெட்டி, சி. சுப்பிரமணியன், வேலூர் வரதராஜன், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள்.
5 நிமிடத்தில் தீர்ப்பு: மாலை 3.50 மணிக்கு அழகிரியும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மாலை 4.15 மணிக்கு நீதிபதி துர்காபிரசாத் இருக்கையில் அமர்ந்தார். தீர்ப்பை ஆங்கிலத்தில் நீதிபதி படித்தார். 5 நிமிடத்தில் தீர்ப்பை படித்துவிட்டு நீதிபதி தனது அறைக்கு திரும்பினார்.
சித்தூர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டவுடன் சுமார் 55 நாள்களில் இந்த வழக்கை விசாரணை செய்து சித்தூர் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

முதல்வரின் மகன் மீதான வழக்கு என்பதால் சென்னை மற்றும் வேலூரில் இருந்து செய்திகளை சேகரிக்க பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சியினரும் திமுகவினரும் வந்திருந்தனர்.

Thursday, May 8, 2008

tamilnadu +2 results websites

Govt sites:
http://tnresults.nic.in/
http://dge3.tn.nic.in/
http://results.nic.in/

Private websites:
http://results.sify.com/
http://squarebrothers.com/
http://chennaionline.com/


SMS 'HSC' Rollno´ to 54545
for Tamil Nadu +2 Results 2008
(warning: people may steal your mobile no for spamming)

We also arranged to publish tamil nadu +2 results from this blog at http://udanadi.blogspot.com

இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டிவிபத்து - எல்காட் உமாசங்கர் போலிஸில் புகார்

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளவேடு கிராமத்தில் கடந்த 22.03.2008 அன்றைய நிகழ்வொன்றில் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி ஒன்றினால் விபத்து ஏற்பட்டு 11 வயது சிறுமி ஒருவர் பலியானதாக காவல் துறை தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதேபோல் 15.04.2008 அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள நலகுண்டா என்கிற ஊரிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.

இதுதொடர்பாக காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கைக்கு முன் தீர விசாரிக்கவில்லை என எல்காட் மேலான்மை இயக்குனர் திரு உமாசங்கர் காவல் துறை டிஐஜிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அதில் முதல் சம்பவத்தின் போது, சிறுமியின் அருகில் தற்கொலை அல்லது கொலை நடந்ததற்கான புகைப்பட ஆதாரம் இருப்பதாகவும், (அதனை டிஐஜிக்கு அனுப்பியுள்ளார்) இறந்த உடலுக்கருகில் மண்ணெண்ணெய் மற்றும் மூன்று தீக்குச்சிகள் அருகில் இருந்ததற்கான அடையாளம் அதில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலவச தொலைக்காட்சி பெறும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற தீய எண்ணத்துடன் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சம்பவம் ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தொலைக்காட்சியில் உள்ள சிஆர்டி மானிட்டர் இதுவரை இதுபோன்று வெடித்தாக தகவல் இல்லை. அரசின் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில் வீடியோகான், மற்றும் சாம்டெல் நிறுவனங்களின் சிஆர்டி மானிட்டர்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன, அத்துடன் 290வோல்ட்கள் வரை மின்சாரம் செலுத்தலாமென்றாலும் இந்த சம்பவத்திற்குப் பிறகு சென்னை ஐஐடியில் நடத்திய சோதனையின் போது 5000 வோல்ட்கள் வரை மின்சாரம் செலுத்தி சோதிக்கப்பட்டது. ஆனால் தொலைக்காட்சி பெட்டி வெடிக்கவில்லை. மாறாக பியூஸ் மட்டுமே போனது. ஆகையால் அந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும்.

காவல்துறை ஐஜி திரு ஜெயினுக்கு அனுப்பிய மனுவில் இவ்வாறு திரு உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

ஷோயப் அக்தர் IPL போட்டிகளில் விளையாட அனுமதி.

ஷோயப் அக்தர் மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டதன் மூலம் அக்தர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட அனுமதி கிடைத்துள்ளது.


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரஃப் தன்னிடம் தொகை ஒன்றை கேட்டதாக அக்தர் கூறியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் முன்னணி அரசியல் தலைவர் ஒருவர் வீட்டில் நடந்த விருந்து ஒன்றில் ஷோயப் அக்தருக்கும், பாகிஸ்தான் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரஃபிற்கும் சமரசம் ஏற்பட்டது. இதனையடுத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார் நஸீம் . இந்த சந்திப்பின் போது அக்தர் தன் செயலுக்காக நஸீம் அஷ்ரஃபிடம் மன்னிப்பு கேட்டார்.

5 ஆண்டுகால தடை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாட ஷோயப் அக்தர் டெல்லி வந்து சேர்ந்துள்ளார். இருப்பினும் ஷோயப் அக்தர் மீதான 5 ஆண்டுகால தடை வழக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலம்பிட்டி பாலத்தைக் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு.

இலங்கையின் வட மேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பாலம்பிட்டியில் உள்ள பாலம் ஒன்றினை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இந்தப் பகுதியில், விடுதலைப் புலிகளுடன் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற மோதல்களின்போது, முன்னேறிச் சென்ற படையினருக்கு ஆதரவாக, இலங்கை விமானப்படையினர் பாலம்பிட்டி பாலத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் தளம் ஒன்றின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.

நன்றி : பிபிசி.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

பிளஸ் 2 தே‌ர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.தமிழக‌ம், புதுச்சேரியில் கட‌ந்த மா‌ர்‌ச் 3ஆ‌ம் தே‌தி பிளஸ் 2 தேர்வுக‌ள் தொட‌ங்‌கி மார்ச் 24ஆ‌ம் தேதி முடிவடைந்தது. 1,600 தேர்வு மையங்களில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 245 மாணவ‌ர்க‌ள் தே‌ர்வு எழுதின‌ர்.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 135 தேர்வு மையங்களில் 45,891 மாணவ‌ர்க‌ள் தேர்வு எழுதினா‌ர். இந்த ஆ‌ண்டு பு‌திதாக வினாக்களை படித்துப் பார்க்க தனியாக 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 9ஆ‌ம் தேதி காலை வெளியிடப்படும்' என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆ‌ண்டை ‌பிளஸ்2 தேர்வு முடிவு மே 14ஆ‌ம் தேதி வெளியிடப்பட்டது. ஆன‌ா‌ல் இ‌ந்த 5 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நாளை காலை 9 ம‌ணி‌க்கு தேர்வு முடிவு வெளியிடப்படும் அதே நேரத்தில் பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
.

Wednesday, May 7, 2008

தமிழ்மணத்திற்கு வேண்டுகோள்!!!

தமிழ் இணைய வாசகர்களுக்காக உலகின் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக உடனடி வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மிகவும் நேரிடையாக சொல்வதானால், முற்றிலும் தமிழ்மண வாசகர்களினூடே உடனடி செய்திகள் சென்றடைய வேண்டும், அல்லது அதனூடே(தமிழ்மணம்) எளிதாக சென்றடைய முடியும் என்றெண்ணி இந்த வலைப்பதிவு முயற்சியை மேற்கொண்டோம்.

இப்படியிருக்க தமிழ்மணம் தற்போது தன்னுடைய புதிய பதிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் செய்திக்கென்று தனிப்பிரிவை உறுவாக்கியிருக்கிறது. அதற்கு தமிழ்மணத்திற்கு நன்றிசொல்லும் அதேவேளையில் செய்தி வலைப்பதிவுகளிலிருந்து வரும் புதிய இடுகைகள் எல்லாப்பதிவுகளும் தெரியும் இடத்தில் (முகப்புப் பக்கத்தில்) செய்தி இடுகைகளும் தெரியும் வண்ணம் செய்திடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
உடனடி

கத்தோலிக்க இளைஞர்களை தொடர்பு கொள்ள போப்பின் புதிய அனுகுமுறை


வரும் ஜூலையில் உலக இளைஞர்கள் தினத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் போப் பெனிடிக் கத்தோலிக்க இளைஞர்களை கைப்பேசிகளின் குறுஞ்செய்திகளினூடே தொடர்புகொள்ள இருக்கிறார்.

இதற்கான ஏற்பாட்டை அவுஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான Telstra வழங்க இருக்கிறது இதற்காக ஏராளமான தன்னார்வ சேவையாளர்களை நியமித்து வருகிறது. சிட்னியில் ஆறு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வின் போது போப் இரண்டு இலட்சம் கத்தோலிக்க இளைஞர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிளில் இப்போது ஆங்கிலம்-இந்தி மொழி்பெயர்ப்புச் சேவை


உலகில் அதிகமானோர் உபயோகிக்கும் தேடுபொறிகளில் ஒன்றான கூகிள், பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச்சேவையை வழங்கி வருகிறது.

அண்மையில் கூகிளின் நிர்வனங்களில் ஒன்றான பிளாகர் தளத்தில் பல்வேறு இந்திய மொழிகளுக்கு ஆங்கிலத்திலிருந்து ஒலிபெயர்ப்புச் சேவையை (transliteration) வழங்கியது.

தற்போது இந்தி மொழிக்கு மொழிபெயர்ப்புச் சேவையை (translation) கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆங்கிலம் தட்டச்சிட்டு அதன் மொழியாக்கத்தை இந்தியில் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியைக்கொண்டு முழு இணையபக்கத்தையும் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கலத்திருக்கும் மாற்றிக்கொள்ளலாம்.

தமிழுக்கும் இத்தகைய சேவையை கூகிளிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

http://www.google.com/translate_t

இந்தியாவின் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி


ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிபூர் என்னும் இடத்திலிருந்து இன்று காலை 9.55 மணிக்கு அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சீனாவின் உள்ளே சென்று தாக்கும் சக்தி கொண்ட அக்னி-3 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடாத்தியது.

48 டன் எடையும், 16 மீட்டர் உயரமும் கொண்டதுமான அக்னி-3 ஏவுகணை, 1.5 டன் எடைகொண்ட அணுஆயுதங்களை தாங்கிக் கொண்டு தரையில் இருந்து புறப்பட்டு, 3000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தரையிலக்கைத் தாக்கக்கூடிய திறன் கொண்டதாகும்.

கடந்த 2006-ல் மேற்கொள்ளப்பட்ட அக்னி ஏவுகணை சோதனை தோ ல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தே தி நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை வெற்றி பெற்றது. இப்போது மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த அக்னி-3 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

DRDO வின் தனது ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் முகமாக இந்த சோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

5000 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய அக்னி 4 வகை ஏவுகனையையும் இந்தியா தயாரித்து வருகிறது. மேலும் நீர்மூழ்கி கப்பலிருந்து செல்லக்கூடிய அக்னி SL ஏவுகணையையும் விரைவில் இந்தியா சோதிக்க உள்ளது.

சேப்பாக்கத்தில் நமீதா.

சென்னையில் நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியை காண வந்த அரேபிய குதிரை நமீதா.

வாரணம் ஆயிரத்தில் சூர்யாவின் தோற்றம்.




வாரணம் ஆயிரம் திரைப்படத்துக்காக கட்டுடல் கொண்ட ஆணழகனாக தன்னை மாற்றிக்கொண்டு காட்சியளிக்கும் சூர்யா.

மியான்மரில் சாவு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

சமீபத்தில் மியான்மாரில் அடித்த நர்கீஸ் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22,000 பேர்களையும் கடந்து விட்டது என்றும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 41,000 பேர்கள் என்றும் அரசு தரப்பு செய்திகள் கூறுகின்றன. பெருத்த சேதத்திற்கு உள்ளான இர்ராவட்டி டெல்டா பகுதிக்கு உதவிப் பொருட்கள் விரைந்தவண்ணம் உள்ளன.வயல்கக‌ளி‌ல் பிணங்கள் நிறைந்து காணப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தப் புயல் தாக்குவதற்கு 48 மணி நேரம் முன்பு மியான்மாரை எச்சரிக்கை செய்ததாக இந்திய வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் குறித்த நேரத்தில் பலர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியவில்லை.இந்த புயல் நிவாரண உதவியில் ஈடுபட்டு வரும் ஒரு அமைப்பு, சாவு எண்ணிக்கை 50,000த்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்துள்ளது.

மியான்மாரின் ராணுவ ஆட்சி சர்வதேச உதவிகளை விரைவில் நாட்டிற்குள் அனுமதிக்குமாறும் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீட்புப் பணிகளுக்காக கப்பற்படை கப்பல்களை அனுப்பவும் தயார் என்று கூறியுள்ளார். முன்னதாக இந்தியா 2 போர்க்கப்பல்களில் அனுப்பிய மருத்துவ, உணவு மற்றும் உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இன்று மியான்மாரை சென்றடைந்து விடும் என்று தெரிகிறது.

Tuesday, May 6, 2008

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மதிப்பெண் குறைப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சட்டசபையில் உயர்கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது வெளியிட்ட புதிய அறிவிப்பு வருமாறு:-

என்ஜினீயரிங் கல்லூரி களில் மாணவர்களுக்கு நன்மை ஏற்படுவதற்காக ஏற்கனவே நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு ஏற்பட் டுள்ளது.

ஆனாலும் 2006-07-ல் மாணவர்கள் சேராமல் 19,652 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தன. 2007-08-ல் 14,721 இடங்கள் காலியாக இருந்தது. இந்த ஆண்டு அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கை யும் அதிகாரிக்கும் என தெரி கிறது. எனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதை கருத் தில் கொண்டு அதில் சேருவ தற்காக இந்த ஆண்டு முதல் மதிப்பெண்களை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

பொதுப் பிரிவினர் மேல்நிலை கல்வியில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவிகிதத்தில் இருந்து 55 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 55 சதவிகிதத்தில் இருந்து 50 ஆகவும் மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கு 50 சதவிகிதத்தில் இருந்து 45 சதவிகதமாகவும் குறைக்கப்படுகிறது.

பட்டியல் இனத்தவர்- மலைவாழ், பழங்குடியின மாணவர்கள் மேல்நிலை கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும்.இதன் மூலம் அதிக அளவில் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி மாலை மலர்

தங்கக் காசு மோசடி, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வந்த "கொஸ்ட் நெஸ்ட் இண்டர்நேஷனல்'' என்ற நிறுவனம் தங்க காசு மோசடியில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனத்தை சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந் நிறுவனத்தில் சேர்ந்தனர். பின்னர் நடுத்தர மக்கள் பலரும் லட்சாதிபதியாகும் ஆசையில் அதிக அளவில் இந்நிறுவனத்தில் சேரத் தொடங்கினர்.

இதன் மூலம் தங்க காசு மோசடி திட்டத்தில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இதையடுத்து ஏமாந்தவர்கள் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் இதில் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஓட்டேரி மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பலர் தங்க காசு நிறுவனத்தில் சேர்ந்து ஏமாந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டதால் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் செம்பியம் போலீசில் புகார் செய்தனர்.

வடசென்னை இணை கமிஷனர் ரவி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சம்பத்தங்க காசு மோசடி குறித்து நேரடி விசாரணையில் இறங்கினார்.

அப்போது தங்க காசு மோசடி பெரிய அளவில் நடந்திருப்பது தெரிய வந்தது. அந்நிறுவனத்தின் சென்னை மேலாளர் புஷ்பம் உள்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஹாங்காங்கில் உள்ள தங்க காசு நிறுவன உரிமையாளர் விஜய ஈஸ்வரனை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்காக சர்வதேச போலீஸ் உதவியை நாட உள்ளனர்.

தங்க காசு நிறுவன மோசடி வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை சேத்துப்பட் டில் உள்ள "கொஸ்ட் நெஸ்ட்'' நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 2 முறை சோதனை நடத்தியுள்ள போலீசார் 87 கிலோ தங்க நாணயங்கள், 900 கிலோ வெள்ளி நாணயங்கள் உள்பட ரூ. 50 கோடி மதிப்பி லான சொத்துக்களை பறி முதல் செய்தனர்.

இச் சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கோர்ட்டு உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ரிசர்வ் பாங்கியிடம் ஒப்படைத்து பின்னர் படிப்படியாக அதனை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்போம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இம்மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து சென்று ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, கோவை, ஊட்டி, நீலகிரி ஆகிய பகுதிகளிலும் மோசடி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி பலர் ஏமாந்துள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க காசு மோசடி நிறுவனத்தால் நடுத்தெருவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ. 100 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உளவு பிரிவு போலீசார் இந்த மோசடி குறித்து ரகசிய விசாரணையில் இறங்கி யுள்ளனர்.

சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஒரு பெண் தலைமையிலான கும்பல் சென்றுள்ளது. இக்கும்பலை சேர்ந்தவர்கள் கிராமப்புற மக்களை குறி வைத்து மூளைச்சலவை செய்துள்ளனர். இதன் மூலம் கடையநல்லூர் பகுதியில் 50 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளனர்.


இப்படி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்ற மோசடிக் கும்பல் குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகின் உயரமான குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்க ளில் கலக்கி வரும் நடிகர் ஒருவர் தங்க காசு மோசடி நிறுவனத்தில் சேர்ந்து பொதுமக்கள் பலரை தனது பேச்சால் மயக்கி சங்கிலி தொடர் திட்டத்தில் சேர்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது தவிர முன்னணி நடிகர்-நடிகைகள் பலரும் இம்மோசடி நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இவர்கள் யார்-யார் என்ற பட்டியலும் தயாராகி வருகிறது.

முன்னணி நடிகைகளில் சிலர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்களது பெயர் வெளியில் வராமல் பார்த்துக் கொள் ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் தங்க காசு மோசடியில் முக்கிய பிரமுகர்கள் பலர் பின்னணியில் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டி வருகிறார்கள்.

`கோல்டு கொஸ்ட்' நிறுவனம் ஆந்திராவிலும் தங்க காசு மோசடியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள கடப்பா மாவட்டத்தில் மட்டும் 500 பேரிடம் மோசடி நடந்துள்ளது. ஏமாந்தவர்கள் கூறும்போது, "எங்களிடம் கடப்பாவைச் சேர்ந்த 4 போலீஸ்காரர்கள்தான் கோல்டு கொஸ்ட் நிறு வனத்தின் தங்க காசுகளை விற்றனர். ஒரு தங்க காசு மற்றும் 3 வெள்ளி நாணயங் களுக்கு ரூ. 30 ஆயிரம் வாங்கினார்கள். தங்க காசில் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, விநாயகர், வெங்கடாசலபதி, சீரடி சாய் பாபா ஆகியோரின் உருவங் கள் இருந்தன.

போலீஸ்காரர்கள் எங்களிடம் நாணயத்தை தந்த போது, "இந்த தங்க நாணயம் வெளிநாடுகளில் ரூ. 2 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஆனால் நாங்கள் இதை குறைந்த விலைக்கு தருகி றோம். அபூர்வமான இந்த தங்க நாணயத்தை நீங்கள் அடிக்கடி திறந்து பார்த்தாலோ அல்லது தொட்டு பார்த்தாலோ சீக்கிரம் நாசமாகி விடும்'' என்றனர்.

இதனால் நாங்கள் கண்ணாடி பெட்டியில் இருந்த நாணயத்தை திறந்து பார்க்க வில்லை.

இப்போது மோசடி நடந்த தாக தகவல் பரவியதால் நாணயத்தை ஆய்வு செய் தோம். அது வெறும் 3 கிராம் எடைதான் உள்ளது. அதிலும் அந்த நாணயத்தில் 70 சதவீதம் செம்பு சேர்க்கப் பட்டிருக்கிறது.

எங்களிடம் மோசடி செய்த கோல்டு கொஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த நிர் வாகிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும். அவர்களிடம் இருந்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறினார்கள்.

இதுபற்றி அவர்கள் அங்குள்ள போலீசிலும் புகார் செய்துள்ளனர்.

ஆந்திராவில் கடப்பா தவிர மற்ற பகுதிகளிலும் தங்க காசு மோசடி நடந் திருக்கலாம் என்று சந்தேகிக் கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், வனத்துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம், மின்வாரிய துறை அலவல கங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

பணம் கட்டியவர்களில் பெரும் பாலானோர் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் கட்டியுள்ளனர். இந்த மோசடி வெளியே தெரியவந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் அரசு, தனியார் ஊழியர்களும் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். தற்போது மோசடி வெளியானதும் பணம் கட்டியவர்கள் புலம்பி வருகின்றனர்.

திருச்சியிலும் தங்ககாசு மோசடி நடந்து உள்ளது. இதில் போலீஸ்காரர்களும், ஏஜெண்டுகள் போல செயல்பட்டு உள்ளனர். மொத்தம் 50 ஏஜெண்டுகள் இருந்து உள்ளனர்.

மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல், கே.கே.நகரில் அலுவலகங்கள் செயல்பட்டு வந்து உள்ளது. தற்போது சென்னையில் மோசடி வெளியானதை தொடர்ந்து திருச்சியில் பணம் கட்டி ஏமாந்தவர்கள், ஏஜெண்டு களிடம் பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர்.

சேலம் 5 ரோடு உள்பட 3 இடங்களில் இதன் ஏஜெண்டுகள் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களிடம் ஏராளமான பேர் ரூ.30 ஆயிரம் கட்டி தங்க காசுகள் பெற்று ஏமாந்துள்ளனர்.

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த பலர் ரூ. 28 ஆயிரம் கட்டி தங்க காசு பெற்று வந்துள்ளனர்.

இந்த திட்டத்தில் டாக்டர் கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொழில் அதிபர்களும் பணத்தை இழந்துள்ளனர்.

நன்றி மாலைமலர்

தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்துறை‌யி‌ல் கூடுதலாக 30 ல‌ட்ச‌ம் வேலைவா‌ய்‌ப்புக‌ள் உருவா‌க்க‌ப்படு‌ம் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் தா‌க்க‌ல் செ‌ய்த தொழில்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்‌பி‌ல், தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றத்தை பதித்து வருகிறது. 2006- 2007ல் 20ஆயிரத்து 700 கோடியாக இருந்த மின்பொருள் ஏற்றுமதி 2007-2008ல் ரூ.28,000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது. இதனால் தகவல் தொழில் நுட்பவியல் துறை நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. அடு‌த்த மூ‌‌ன்று ‌ஆ‌ண்டுக‌ளி‌ல் தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்துறை‌யி‌ல் கூடுதலாக 30 ல‌ட்ச‌ம் வேலைவா‌ய்‌ப்புக‌ள் உருவா‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் 2011 ஆ‌ண்டி‌ல் இ‌ந்த துறை‌யி‌ல் 11 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் இரு‌ந்து 25 ‌விழு‌க்காடாக உ‌ற்ப‌த்‌தி‌ அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.


சென்னை தரமணியில் 2-வது டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் 3-வது டைடல் பூங்காவும் 2009-ல் ஆண்டில் செயல்பட தொடங்கும். இதன் மூலம் 40,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 15,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.நாட்டிலேயே அதிக கம்பி வட தொலைக்காட்சி சேவை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதில் பல புகார்கள் வந்ததால் அரசே ஏற்று நடத்தும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது. அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 6-8 நகரங்கள், பேரூராட்சிகளில் அதிநவீன உபகரணங்களை கொண்டு டிஜிட்டல் ஹெட் நிறுவ உத்தேசித்துள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் 80 அலை வரிசைகளை கொண்ட தொலைக்காட்சி குறிப் பு களை 100 கிலோமீட் டர் தூரத்தில் உள்ளூர் கேபிள் இயக்குபவர்களுக்கு எடுத்து செல்லும். மேற்பட்ட தலைமுனைகள் கோவை, நெல்லை, திருவண்ணாமலை, தஞ்சாவூரில் முதல் கட்டமாக நிறுவ உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டுள்ளது.சென்னையில் தலை முனையை அமைக்க உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை செப்டம்பர் முதல் இயங்கத் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. கேபிள், தொலைக்காட்சி தொழிலாளர்களுக்கான நலவாரியம் ஒன்றையும் அரசு அமைத்துள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Monday, May 5, 2008

மைக்ரோசாப்டின் பின்வாங்கலுக்குப் பிறகு யாகூவின் பங்கு 16 சதவீதம் சரிந்தது

யாகூவை வாங்கும் எண்ணத்தை கடந்த வெள்ளிக்கிழமை மைக்ரோசாப்ட் பின்வாங்கியதைத் தொடர்ந்து யாகூவின் பங்குச்சரிவு எவ்வளவு இருக்கும் என்கிற கணிப்புக்கு திங்கட்கிழமை காலை முடிவு தெரிந்திருக்கிறது.

யாகூவின் பங்கு ஒன்றுக்கு 33$ வீதம் மைக்ரோசாப்ட் நிர்ணயித்திருந்தது. விடாகொண்டனாக இருந்த யாகூ அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கடந்த வெள்ளியன்று 28.67$ ஆக இருந்த அதன் மதிப்பு இன்று 16 சதவீதம் குறைந்து 23.92$ க்கு வந்துள்ளது.

இதனிடையே யாகூவின் பங்குக்குஅதிக விலை கொடுப்பதிலிருந்து மைக்ரோசாப்ட் பின்வாங்கியதால் அதன் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர் இதன் காரணமாக அதன் மதிப்பு 2 சதவீதம் உயர்ந்து கடந்த வெள்ளியன்று 29.24 டாலராக இருந்ததிலிருந்து 30 டாலருக்கு உயர்ந்துள்ளது.

அதே போல் கூகிளின் மதிப்பும் 2 சதவீதம் உயர்ந்து 595 டாலர்களை அடைந்தது.

முன்னதாக, கடந்த ஜனவரி 31 அன்று மைக்ரோசாப்ட் தன்னிச்சையாக யாகூவை வாங்குவதைப் பற்றி அறிந்ததும் யாகூவின் பங்கின் விலை 19.18 டாலர் அளவிற்கு நான்கு ஆண்டுகால வீழ்ச்சியை சந்தித்தது.

மைக்ரோசாப்டின் முடிவு பற்றி அறிந்த யாகூவின் முக்கிய நபர்கள் ஐவர் தங்கள் கருத்துக்களை பறிமாறிக்கொண்டனர். இதுபற்றி கருத்து தெரிவித்த ஜெரி யாங் (CEO) கூறுகையில் தங்கள் நிறுவன பங்கின் விலை ஒன்றிற்கு 37 டாலர் வரை மதிப்பிட்டிருப்பதாக முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்தார்.

தசாவதாரம் படத்திற்க்கு எச்சரிக்கை!

கம‌ல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் வெளியிட விட மாட்டோம்'' என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கூ‌றியு‌ள்ளா‌ர்.
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல்,
K.S. ரவிக்குமார் இயக்கத்தில் கம‌ல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. ச‌ர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம். தியேட்டர் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நர்கீஸ் தாக்கியதில் 350 பேர் பலி!






நர்கீஸ் என்று பெயர் சூட்டப்பட்ட சூறாவளி பர்மாவைத் தாக்கியதில் அங்கு 350 பேர் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 90 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஐராவதி பாசனப் பகுதியில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் நிர்மூலமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான வீடுகள் சேதமடைந்தோ, அல்லது முழுமையாக நிர்மூலமாகியோ உள்ளன.
முக்கிய நகரான ரங்கூன் நகருக்கான மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் இன்னமும் துண்டிக்கப்பட்டே இருக்கின்றன. அந்த நகருக்கான நீர் விநியோகமும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ரங்கூன் உட்பட 4 பிராந்தியங்களில் பர்மிய அரசு அனர்த்த நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.பாலங்கள் இடிந்து வீழ்ந்துவிட்டதாலும், எரிபொருட் தட்டுப்பாடு காரணமாகவும் போக்குவரத்தும் அங்கு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முழுமையான அழிவின் தகவல்கள் தெரியவர இன்னும் பல நாட்கள் ஆகும் என்று அங்கிருந்து வரும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹிலாரியின் பேச்சுக்கு ஐ.நா.வில் ஈரான் புகார்!

அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளி‌ண்டன், பேட்டி ஒன்றில் இஸ்ரேல் மீது ஈரான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் ஈரானை முற்றிலும் அழிப்போம் என்று கூறியதையடுத்து ஐ.நா.வில் ஈரான் புகார் செய்துள்ளது.இது குறித்து ஐ.நா.விற்கான ஈரான் உதவி தூதுவர் மெஹ்தி தனேஷ்-யஸ்தி ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி மூனிற்கு எழுதிய கடிதத்தில், ஹிலாரியின் அம்மாதிரியான பேச்சு தேவையற்றது என்றும் பொறுப்பற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஹிலாரியின் கூற்று ஐ.நா. விதிமுறைகளை மீறியது என்றும், பிற நாடுகளின் உரிமைகள் மீதான சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்று யாஸ்தி வலியுறுத்தியுள்ளார். எனினும் ஈரான் மீது எந்த நாடு தாக்குதல் நடத்த முயற்சித்தாலும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஈரானும் செயல்படும் என்று கூறியுள்ளர்.

8 ‌வி‌க்க‌ெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் சென்னை அணி தோல்வி!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ‌வி‌க்க‌ெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் சென்னை அணி தோல்வி அடைந்தது. த‌ன்‌வீர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதினது.

டாஸ் வென்ற சென்னை அணி தலைவ‌ர் தோ‌னி முதலில் பேட்டி‌ங் செய்வதாக அறிவித்தார்.தொட‌க்க ‌வீர‌‌ர்களாக பார்த்தீவ் பட்டேலும், ஸ்டீபன் பிளமிங்கும் கள‌ம் இற‌ங்‌கின‌ர். த‌ன்‌வீ‌ர் ‌வீ‌சிய முதல் பந்திலேயே பார்த்தீவ் பட்டேல் எல்.பி.டபிள்யூ. ஆகி ஆ‌‌ட்ட‌‌‌ம் இழ‌ந்தா‌ர். அதே ஓவ‌ரி‌ல் 5-வது பந்தில் பிளமிங்கும் எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழ‌ந்தா‌ர். ரன் எடு‌ப்பத‌ற்கு‌ள் செ‌ன்னை அ‌ணி இர‌ண்டு ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து த‌வி‌த்தது.இ‌தை‌த் தொட‌ர்‌ந்து தன்‌வீரின் 3-வது ஓவரில் வித்யுத்தும் 5 ரன்‌னி‌ல் ஆட்டம் இழந்தார். பத்ரிநாத் 15 ரன்னிலும், தோ‌னி 1 ரன்னிலும் அவு‌ட்டான‌ா‌ர்க‌ள். 44 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து த‌வி‌த்த செ‌ன்னை அ‌ணி, 6-வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் ரெய்னா, அல்பி மோர்கல் இணை அணி‌யி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை ச‌ற்று உய‌ர்‌த்‌‌தின‌ர்.அ‌ணி‌‌யி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 88ஆக இரு‌ந்தபோது ரெய்னா 27 ரன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் வ‌ந்த ஜோகிந்தர் ஷர்மா ரன் எடு‌க்காம‌ல் அவு‌ட்டானா‌ர். மோர்கல் 42 ரன்னிலும், முரளிதரன் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பின‌ர். அப்போது சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழ‌ந்து 96 ரன்கள் எடுத்திருந்தது.‌பி‌ன்ன‌ர் வ‌ந்த ‌நி‌ட்‌னி 11 ர‌‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌‌ம் இழ‌ந்தா‌ர். 19 ஓவர்களில் சென்னை அணி 109 ரன்களுக்கு சுருண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இது 2-வது குறைந்த பட்ச ஸ்கோராகும். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் அணி 82 ரன்களில் ஆட்டமிழந்தது இதுவரை குறைந்தப‌ட்ச எ‌ண்‌ணி‌க்கையாக உள்ளது.4 ஓவ‌ர்களை ‌‌வீ‌சி 14 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினா‌ர் த‌ன்‌வீ‌ர். 20 ஓவர் கிரிக்கெட்டில் இது தான் ஓர் வீரரின் சிறந்த பந்து வீச்சு ஆகு‌ம்.

110 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குட‌ன் ராஜஸ்தான் அணி கள‌ம் இற‌ங்‌கியது. 6 ர‌ன் ‌ஸ்‌மி‌த் எடு‌த்‌திரு‌ந்தபோது அவ‌ர் கொடு‌த்த எ‌ளிதான கேட்ச்சை ஜோகிந்தர் ஷர்மா நழுவ விட்டார். முதல் விக்கெட்டு‌க்கு ‌ஸ்‌மி‌த்- அ‌ஸ்னோ‌ட்க‌ர் இணை 78 ரன்கள் சேர்த்தது. அஸ்னோட்கர் 32 ரன்னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அடுத்து வந்த யூசுப்பதான் 8 ரன்னிலும் அவுட் ஆனா‌ர்.‌ஸ்‌மி‌‌த் 35 ர‌ன்‌னிலு‌ம், வா‌ட்ச‌ன் 14 ர‌ன்‌னிலு‌ம் கடை‌சி வரை ஆ‌ட்ட‌ம் ‌இழ‌க்காம‌ல் இரு‌ந்தன‌ர். 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜ‌ஸ்தா‌ன் அ‌ணி வெற்றி பெ‌ற்றது.ஆ‌ட்ட நாயகனாக தன்‌வீர் தே‌ர்‌ந்தெடு‌க்‌க‌ப்ப‌ட்டா‌ர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றியாகும். செ‌ன்னை அ‌ணி‌க்கு இது 2வது தோ‌ல்‌வியாகு‌ம்.

Sunday, May 4, 2008

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கருணாநிதி முடிவு?

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கருணாநிதி முடிவு?

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நடைபெறலாம் என பரபரப்பு எழுந்துள்ளது.தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் கருணாநிதி தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.ஐந்து அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதல்வருக்கு திருப்தி இல்ைல எனவும், எனவே அவர்களுக்கு கல்தா கொடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்குப் பதில் ஐந்து பேர் புதிதாக சேர்க்கப்படக் கூடும்.

மேலும் முக்கிய முடிவாக முதல்வர் கருணாநிதி வசம் உள்ள காவல்துறையை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தரவும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. காவல்துறை வழக்கமாக முதல்வர் பதவி வகிப்பவர்கள் கையில்தான் இருந்து வருகிறது. கடந்த 1967ம் ஆண்டுக்குப் பின்னர் இதுதான் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் அந்த வழக்கத்தை மாற்றி ஸ்டாலினுக்கு காவல்துறையைத் தர முதல்வர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

நீக்கப்படும் அமைச்சர்கள் பட்டியலில் மொய்தீன் கான், என்.கே.கே.பி. ராஜா, சுப.தங்கவேலன், பெரியகருப்பன் ஆகியோர் இருப்பதாக தெரிகிறது. மூத்த அமைச்சர் கோ.சி.மணி உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு மீண்டு மறுபடியும் பணியாற்றி வருகிறார். இருப்பினும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவைப் பளுவிலிருந்து அவரை விடுவிக்க முதல்வர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளவர்கள் பட்டியலில் மதுரை மத்திய தொகுதி கவுஸ் பாட்ஷா, நெல்லை கருப்பசாமி பாண்டியன், ராஜ.கண்ணப்பன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.வருகிற 13ம் தேதியுடன் திமுக அமைச்சரவை ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது என்பது நினைவிருக்கலாம்.

இந்த சமயத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தி வெளியாகியிருப்பதால் எம்.எல்.ஏக்கள் மத்தியில் அமைச்சர் கனவு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கருணாநிதிக்கு பகுத்தறிவாளர் கழக விருது

கருணாநிதிக்கு பகுத்தறிவாளர் கழக விருது

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் "வீரமணி சமூக நீதி விருது' வழங்கப்படுகிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

திருச்சியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

சிகாகோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் "வீரமணி சமூக நீதி' விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

சென்னையில் செப்டம்பர் 2 - வது வாரத்தில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படும். இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் பங்கேற்கின்றனர்.

4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது

4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது


சென்னை, மே 3: சென்னையைச் சேர்ந்த இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் உள்பட நான்கு டாக்டர்களுக்கு மருத்துவ உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருது கிடைத்துள்ளது.

இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக மனநல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரை, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவர் டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப் ஆகியோர் டாக்டர் பி. சி. ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) இவர்களைத் தேர்வு செய்து ள்ளது.

டாக்டர் மீர் முஸ்தபா உசேன்டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்
டாக்டர் என். ரங்கபாஷ்யம் டாக்டர் ஆர். பொன்னுதுரை டாக்டர் ஆர். பொன்னுதுரை

டாக்டர் ஆர். ரங்கபாஷ்யம்:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். பத்ம விபூஷண் விருது பெற்றவர். ஏராளமான இரைப்பை - குடல் மருத்துவ - அறுவைச் சிகிச்சை நிபுணர்களை உருவாக்கிய பேராசிரியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

டாக்டர் மீர் முஸ்தபா உசேன்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்புத் துறையின் துறைத் தலைவராக ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். "சிறந்த மருத்துவ ஆசிரியர்' என்ற பிரிவில் இவரது பெயர், பி. சி. ராய் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் ஆர். பொன்னுதுரை: சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரைக்கு, துறை சார்ந்த மருத்துவ முதுநிலை படிப்புப் பிரிவுகளை ஏற்படுத்தியதற்காக பி. சி. ராய் விருது வழங்கப்படுகிறது. மன நல மருத்துவத் துறையில் 35 ஆண்டுக்கால அனுபவம் பெற்றவர். சென்னை அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவமனையின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மன நல மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றியபோது, எம்.டி. மனநலப் படிப்பை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்: திருச்சியைச் சேர்ந்த பொது மருத்துவ நிபுணரான இவர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவராக உள்ளார். மருத்துவ சமூக சேவைக்காக அவருக்கு பி.சி. ராய் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தென் மாநிலப் பிரிவின் தலைவராக இருந்தபோது, கிராம மருத்துவ சேவைத் திட்டத்தை வெற்றிகரமாக இவர் செயல்படுத்தினார்.

Free Blog CounterLG