யாகூவை வாங்கும் எண்ணத்தை கடந்த வெள்ளிக்கிழமை மைக்ரோசாப்ட் பின்வாங்கியதைத் தொடர்ந்து யாகூவின் பங்குச்சரிவு எவ்வளவு இருக்கும் என்கிற கணிப்புக்கு திங்கட்கிழமை காலை முடிவு தெரிந்திருக்கிறது.
யாகூவின் பங்கு ஒன்றுக்கு 33$ வீதம் மைக்ரோசாப்ட் நிர்ணயித்திருந்தது. விடாகொண்டனாக இருந்த யாகூ அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கடந்த வெள்ளியன்று 28.67$ ஆக இருந்த அதன் மதிப்பு இன்று 16 சதவீதம் குறைந்து 23.92$ க்கு வந்துள்ளது.
இதனிடையே யாகூவின் பங்குக்குஅதிக விலை கொடுப்பதிலிருந்து மைக்ரோசாப்ட் பின்வாங்கியதால் அதன் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர் இதன் காரணமாக அதன் மதிப்பு 2 சதவீதம் உயர்ந்து கடந்த வெள்ளியன்று 29.24 டாலராக இருந்ததிலிருந்து 30 டாலருக்கு உயர்ந்துள்ளது.
அதே போல் கூகிளின் மதிப்பும் 2 சதவீதம் உயர்ந்து 595 டாலர்களை அடைந்தது.
முன்னதாக, கடந்த ஜனவரி 31 அன்று மைக்ரோசாப்ட் தன்னிச்சையாக யாகூவை வாங்குவதைப் பற்றி அறிந்ததும் யாகூவின் பங்கின் விலை 19.18 டாலர் அளவிற்கு நான்கு ஆண்டுகால வீழ்ச்சியை சந்தித்தது.
மைக்ரோசாப்டின் முடிவு பற்றி அறிந்த யாகூவின் முக்கிய நபர்கள் ஐவர் தங்கள் கருத்துக்களை பறிமாறிக்கொண்டனர். இதுபற்றி கருத்து தெரிவித்த ஜெரி யாங் (CEO) கூறுகையில் தங்கள் நிறுவன பங்கின் விலை ஒன்றிற்கு 37 டாலர் வரை மதிப்பிட்டிருப்பதாக முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்தார்.
Monday, May 5, 2008
மைக்ரோசாப்டின் பின்வாங்கலுக்குப் பிறகு யாகூவின் பங்கு 16 சதவீதம் சரிந்தது
Posted by udanadi at 5/05/2008 09:21:00 PM 0 comments
Labels: Microsoft, Nasdaq, Yahoo, YHOO, நாஸ்டாக், பங்குச்சந்தை, பொருளாதாரம், மைகரோசாப்ட், யாகூ, வணிகம்
தசாவதாரம் படத்திற்க்கு எச்சரிக்கை!
கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் வெளியிட விட மாட்டோம்'' என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
K.S. ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம். தியேட்டர் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Posted by udanady at 5/05/2008 04:03:00 PM 0 comments
Labels: சினிமா.
நர்கீஸ் தாக்கியதில் 350 பேர் பலி!
குறிப்பாக ஐராவதி பாசனப் பகுதியில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் நிர்மூலமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான வீடுகள் சேதமடைந்தோ, அல்லது முழுமையாக நிர்மூலமாகியோ உள்ளன.
Posted by udanady at 5/05/2008 12:37:00 PM 0 comments
ஹிலாரியின் பேச்சுக்கு ஐ.நா.வில் ஈரான் புகார்!
அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், பேட்டி ஒன்றில் இஸ்ரேல் மீது ஈரான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் ஈரானை முற்றிலும் அழிப்போம் என்று கூறியதையடுத்து ஐ.நா.வில் ஈரான் புகார் செய்துள்ளது.இது குறித்து ஐ.நா.விற்கான ஈரான் உதவி தூதுவர் மெஹ்தி தனேஷ்-யஸ்தி ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி மூனிற்கு எழுதிய கடிதத்தில், ஹிலாரியின் அம்மாதிரியான பேச்சு தேவையற்றது என்றும் பொறுப்பற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஹிலாரியின் கூற்று ஐ.நா. விதிமுறைகளை மீறியது என்றும், பிற நாடுகளின் உரிமைகள் மீதான சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்று யாஸ்தி வலியுறுத்தியுள்ளார். எனினும் ஈரான் மீது எந்த நாடு தாக்குதல் நடத்த முயற்சித்தாலும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஈரானும் செயல்படும் என்று கூறியுள்ளர்.
Posted by udanady at 5/05/2008 12:06:00 PM 0 comments
Labels: உலகம்
8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. தன்வீர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதினது.
டாஸ் வென்ற சென்னை அணி தலைவர் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.தொடக்க வீரர்களாக பார்த்தீவ் பட்டேலும், ஸ்டீபன் பிளமிங்கும் களம் இறங்கினர். தன்வீர் வீசிய முதல் பந்திலேயே பார்த்தீவ் பட்டேல் எல்.பி.டபிள்யூ. ஆகி ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் 5-வது பந்தில் பிளமிங்கும் எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார். ரன் எடுப்பதற்குள் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.இதைத் தொடர்ந்து தன்வீரின் 3-வது ஓவரில் வித்யுத்தும் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். பத்ரிநாத் 15 ரன்னிலும், தோனி 1 ரன்னிலும் அவுட்டானார்கள். 44 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த சென்னை அணி, 6-வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் ரெய்னா, அல்பி மோர்கல் இணை அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.அணியின் எண்ணிக்கை 88ஆக இருந்தபோது ரெய்னா 27 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஜோகிந்தர் ஷர்மா ரன் எடுக்காமல் அவுட்டானார். மோர்கல் 42 ரன்னிலும், முரளிதரன் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அப்போது சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தது.பின்னர் வந்த நிட்னி 11 ரன்னில் ஆட்டம் இழந்தார். 19 ஓவர்களில் சென்னை அணி 109 ரன்களுக்கு சுருண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இது 2-வது குறைந்த பட்ச ஸ்கோராகும். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் அணி 82 ரன்களில் ஆட்டமிழந்தது இதுவரை குறைந்தபட்ச எண்ணிக்கையாக உள்ளது.4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தன்வீர். 20 ஓவர் கிரிக்கெட்டில் இது தான் ஓர் வீரரின் சிறந்த பந்து வீச்சு ஆகும்.
110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. 6 ரன் ஸ்மித் எடுத்திருந்தபோது அவர் கொடுத்த எளிதான கேட்ச்சை ஜோகிந்தர் ஷர்மா நழுவ விட்டார். முதல் விக்கெட்டுக்கு ஸ்மித்- அஸ்னோட்கர் இணை 78 ரன்கள் சேர்த்தது. அஸ்னோட்கர் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த யூசுப்பதான் 8 ரன்னிலும் அவுட் ஆனார்.ஸ்மித் 35 ரன்னிலும், வாட்சன் 14 ரன்னிலும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.ஆட்ட நாயகனாக தன்வீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றியாகும். சென்னை அணிக்கு இது 2வது தோல்வியாகும்.
Posted by udanady at 5/05/2008 10:46:00 AM 0 comments
Labels: கிரிக்கெட்