Wednesday, April 16, 2008

சென்னை நகர் முழுவதும் விளம்பர் போர்டுகள் அகற்றம் !

உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து மாநகராட்ச்சி ஊழியர்கள் கவல்த்துறை பாதுகாப்புடன் விளம்பரபலகைகள் அகற்றும் காட்ச்சி
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து, சென்னையில் மட்டும் ஏராளமான விளம்பரப் பலகைககள் அகற்றப்பட்டன.தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
சென்னையில் மட்டும் 4,500 மேற்பட்ட விளம்பர பலகைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்பொழுது சென்னைநகரில் இவ்விளம்பர பலகைகள் அகற்றப்படுகின்றன விரைவில் மாநிலத்தின் இதரபகுதிகளிலும் அகற்ற உள்ளூர் நிர்வாகம் தயாராகி வருகின்றன.

உள்ளூர்காரர்களுக்கு டிக்கெட் வழங்காததைக் கண்டித்து பா.ஜனதா அலுவலகத்திற்கு பூட்டு.

ஹாசன், ஏப். 16-தேர்தலில் உள்ளூர் வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்காததைக் கண்டித்து ஹாசனில் பா.ஜனதா தொண்டர்கள் அக்கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

அதிருப்தி

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. எனவே, கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அது போல பா.ஜனதா கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

பா.ஜனதா கட்சியினர் இது வரை 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளனர். இந்த 2வேட்பாளர் பட்டியல்களும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல், புதியவர்களுக்கும், வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் டிக்கெட் வழங்கப்படுகிறது என்று கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் உள்ளூர் வேட்பாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் வர்கள் பா.ஜனதா வேட்பாளருக்கு போட்டியாக நிற்கப் போவதாக கூறி வருகின்றனர். மேலும் பா.ஜனதா மேலிடத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

அது போல ஹாசன் மாவட்டத்திலும் வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இங்கு கட்சியில் நீண்ட காலம் இருக்கும் உண்மையான தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

புதுமுகங்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறி வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடந்த திகில் படுகொலைகள், கொலைகாரன் சிக்கினான்?

சென்னை, ஏப்.16- சென்னையில் தொடர்ச்சியாக 4 பெண்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் நேரில் பார்த்த காவலாளி அடையாளம் காட்டியதன் பேரில் வேலூரை சேர்ந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்தான் 4 பெண்களை கொன்ற `சைக்கோ' கொலைகாரனாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

அடுத்தடுத்து கொலை
சென்னை நகரில் கடந்த ஆண்டு நெஞ்சை பதற வைக்கும் வகையில் நடுத்தர வயதை சேர்ந்த 4 பெண்கள் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர். மடிப்பாக்கத்தை சேர்ந்த பத்மினி, மேற்கு அண்ணாநகரை சேர்ந்த தமிழ்செல்வி, கொரட்டூரை சேர்ந்த கலையரசி, முகப்பேரை சேர்ந்த ஜெயமணி ஆகிய 4 பெண்களும்தான் கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் ஆவார்கள்.

திகில் நிறைந்த இந்த படுகொலை சம்பவங்கள் ஒரே மாதிரியாக நடந்தன. ஒரே கொலைகாரன் தான் 4 பேரையும் தீர்த்துக்கட்டியுள்ளான். கொலை சம்பவங்கள் அனைத்தும் பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் நடந்தன. 4 பெண்களிடமும் `செக்ஸ்' வன்முறை எதுவும் நடக்கவில்லை. கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலிகள் மட்டும் கொள்ளை போய் இருந்தன. கொலைகள் நடந்த வீட்டில் இருந்த வேறு எந்த பொருட்களும் கொள்ளை போகவில்லை. இந்த கொலை வழக்குகளில் போலீசாருக்கு முதலில் எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.

தமிழ்செல்வியை கொலை செய்துவிட்டு வெளியில் வரும்போது கொலைகாரனை காவலாளி ஒருவர் நேரில் பார்த்துள்ளார். இது ஒன்று மட்டும் தான் போலீசாருக்கு கிடைத்த சிறு தடயமாகும். ஆரம்பத்தில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் கொலைகாரனை பிடிக்க களத்தில் இறக்கப்பட்டனர். ஆனால், எந்த வித துப்பும் கிடைக்கவில்லை. கொலைகாரனின் படம் காவலாளி சொன்ன அடையாளத்தை வைத்து கம்ப்யுட்டரில் படம் வரையப்பட்டது. அதிலும் எந்த பலனும் இல்லை. இதனால், தனிப்படை போலீசார் சோர்ந்து போனார்கள்.

இதுவரை இந்த வழக்கில் ஆயிரம்பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். 500 பேரின் கைரேகையையும் எடுக்கப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. இருந்தாலும், எந்த வித துப்பும் கிடைக்காமல் இருந்தது.

மனம் தளராமல் தொடர்ந்து விசாரணை நடத்தி எப்படியாவது குற்றவாளியை பிடித்தே தீரவேண்டும் என்று கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், துணை கமிஷனர் ஜெயகவுரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் ரெங்கராஜன், சுகுமார், ஜான்ரோஸ் ஆகியோர் தலைமையிலான 3 தனிப்படைகள் மட்டும் தொடர்ந்து இந்த வழக்கில் விடா முயற்சியாக விசாரித்து வந்தனர்.

4 பெண்களையும் கொன்ற கொலைகாரன் `சைக்கோ' மனப்பான்மை படைத்தவன். நகை, பணத்துக்காக அவன் இந்த கொலைகளை செய்யவில்லை. பெண்கள் மீதுள்ள ஏதோ ஒரு வெறுப்பில் இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளான் என்று போலீசார் முடிவுக்கு வந்தனர். வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த 4 கொலைகளும் நடந்தன.

கம்ப்யுட்டர் மூலம் வரைந்த படத்தை வைத்து வேலூரை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரை கொலைகாரனை நேரில் பார்த்த காவலாளி அடையாளம் காட்டினார். அதன் அடிப்படையில் வேலூர் நபர் தான் `சைக்கோ' கொலைகாரனாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். வேலூர் நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடக்கிறது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, `இந்த 4 வழக்குகளிலும் குற்றவாளியை நெருங்கிவிட்டோம். இன்னும் ஓரிரு நாளில் நல்ல செய்தி சொல்கிறோம்' என்று கூறினார்கள்.

இங்கிலாந்து பவுண்டின் வெளிமதிப்பு சரிவு

(தி இக்கனாமிக் டைம்ஸ்)

புதுடெல்லி: சென்ற சில மாதங்களாக இந்திய ரூபாய்க்கு எதிரான இங்கிலாந்து நாட்டு செலா வணியான பவுண்டின் வெளிமதி�பும் சரிவடைந்து வருகிறது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிலுள்ள நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் தீர்வுகளை வழங்கி வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் ஈட்டப்படும் லாப வரம்பு குறைந்து விடும் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது.

சென்ற 2007-ஆம் ஆண்டில் ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு சரிவால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்களுக்கு குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனை எதிர்கொள்ளும் வகையில் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை இலக்காகக் கொண்டு ஒரு சில நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின.

இந்நிலையில் சோதனை மேல் சோதனை என்பது போன்று, சென்ற ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் ரூபாய்க்கு எதிரான பவுண்டின் வெளிமதிப்பு 5 சதவீதம் சரிவடைந்து தற்போது ரூ.78.66-ஆக உள்ளது.

பஹ்ரைனில் தொழிலாளர்களை லாரியில் ஏற்றிச் செல்லத் தடை

லாரி மற்றும் பாதுகாப்பு இல்லாத வாகனங்களில் தொழிலாளர்கள் ஏற்றிச் செல்வதற்கு பஹ்ரைன் அரசு தடை விதித்துள்ளது.

பஹ்ரைன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பணிக்கு அழைத்து வருவதற்காக லாரி உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சில வாகனங்கள் பாதுகாப்பு குறைபாடு உள்ளவையாக உள்ளன.

இந்நிலையில் பஹ்ரைன் அமைச்சர்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.இதில், தொழிலாளர்களை அழைத்து வரும் வாகனங்களின் பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் லாரி உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத வாகனங்களுக்கு தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.பிரதமர் ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மத மாற்றம் தடுக்கப்பட வேண்டும்: இராம கோபாலன்

தமிழ்நாட்டில் மக்கள் ஒன்றுதிரண்டு மத மாற்றத்தை தடுக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் கேட்டுக் கொண்டார்.

கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் இராம கோபாலனின் சதாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை துடியலூரில் நடத்தப்பட்டது. இராம கோபாலன் பேசியது: தமிழ்நாட்டில் மத மாற்றம் தீவிரமாக நடக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும். வீதிதோறும் மத மாற்ற தடுப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். மதம் மாறியவர்கள் தாய்மதம் திரும்ப வழிவகை செய்ய வேண்டும்.

கோயில்களை பராமரிக்கும் பணியை அரசு விட்டுவிட வேண்டும். கோவை வடமதுரை விருந்தீஸ்வர் கோயிலுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இது போன்ற நிலங்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளன. இவற்றை அரசு மீட்க வேண்டும் என்றார்.

Free Blog CounterLG