Wednesday, May 14, 2008

BCCI ஹர்பஜனுக்கு பளார்


ஸ்ரி சாந்தை கண்ணத்தில் அறைந்த குற்றத்திற்காக ஹர்பஜனுக்கு ஐந்து சர்வதேச போட்டிகளில் விளையாட இந்திய கிர்க்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இனி இதுபோன்ற ஒழுங்கீனத்தில் நடந்துகொண்டால் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஹர்பஜன் ஒப்புக்கொண்டார். தற்போதுள்ள தடையின் படி அவர் ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதே குற்றச்சாட்டிற்காக ஐபிஎல் கிரிக்கெடில் 11 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை பற்றி கருத்து தெரிவித்த ஹர்பஜனின் பயிற்சியாளர் இந்த சம்பவத்தின் காரணமாக ஹர்பஜன் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தடை அநியாயமானது என்றும் கூறியுள்ளார்.

இந்த தடையால் அடுத்த மாதம் பங்களாதேஷில் நடைபெறும் ஒடிஐ போட்டியிலும், பாகிஸ்தானில் நடக்கவுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஹர்பஜன் விளையாட முடியாது.

ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு!

டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு மேலும் 23 பைசா குறைந்து, மே 14 அன்று காலை 42 ரூபாய் 33 பைசாவாக இருந்தது. இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பொருளாதார வேகம் குறைந்து வருவதை அடுத்து, ரூபாய் நாணயத்தின் மதிப்பும் குறைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இன்றைய போட்டிக்கு சச்சின் கேப்டன்.

ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை காயம் காரணமாக விளையாடாத நட்சத்திர வீரர் சச்சின் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக களமிறங்குகிறார். தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும், சனத் ஜெயசூர்யாவுடன் துவக்க வீரராக களமிறங்குவேன் என்றும் டெண்டுல்கர் தெரிவித்தார். மும்பை இந்தியன் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளது.

நாள் குறிப்பிடப்படாமல் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத் தொடர், மே 14 அன்று, மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பாலிடெக்னிக் கட்டணம் ரத்து.

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டுக் கல்விக் கட்டணம் 2,500 ரூபாயை ரத்து செய்ய முதலமைச்சர் அனுமதி வழங்கியிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

வரும் கல்வியாண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார். தமிழகச் சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதலமைச்சருடன் கலந்து பேசி இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அமைச்சர் கூறினார்

மீண்டும் சிம்ரன்.

ஹரி இயக்கத்தில் உருவாகும் சேவல் படத்தில் நாயகன் பரத்துடன் கடுமையாகப் போட்டிபோடும் வேடத்தில் நடிக்கிறார் சிம்ரன்.


தமிழ்த் திரையுலகில் ஒருவிதத்தில் சிம்ரனுக்கு இது மறுபிரவேசம் மாதிரிதான். திருமணத்துக்குப் பிறகு ஒரு சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்த சிம்ரனுக்கு இது பொருத்தமான படமாக அமையும் என்கிறார் இயக்குநர் ஹரி. இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடி பூனம் பாஜ்வா என்றாலும், கதாநாயகிக்கு சற்றும் குறையாத கனமான வேடமாம் சிம்ரனுக்கு. இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு வடிவேலு. இடைவேளைக்கு முன்பு வரை அவரும் பரத்தும் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும் என்கிறார் ஹரி. ஜின்னா கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ஏ.ஜின்னா தயாரிக்கும் முதல் படம் இது. ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஹரியுடன் பிரகாஷ் இணையும் முதல் படம் சேவல் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம்.

Free Blog CounterLG