Saturday, May 3, 2008

பனி மழை தூதரானார் நமீதா

நமீதாவை பார்த்தவுடனே நமக்குள் ஒரு பனிமழை பெய்யும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு பனிமழை அரங்கத்துக்கு தூதராகியிருக்கிறார் நமீதா என்பதுதான் நாம் சொல்ல வரும் தகவல். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையும், 'ஸ்பைல்பவுண்ட்' பொழுதுபோக்கு நிறுவனமும் இணைந்து சென்னை தீவுத்திடலில் பனிமழை பொழியும் ஒரு பிரமாண்ட அரங்கை அமைத்துள்ளன. கோடை விடுமுறையை முன்னிட்டு, குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில் பனிச்சறுக்கு, செயற்கை பனிப்பொழிவு, பனிக்கட்டி விளையாட்டு என ஜில்லிட வைக்கும் அம்சங்கள் நிறைய இருக்கிறதாம்.

இந்த நிகழ்ச்சிக்கு தூதராக நியமிக்கப்பட்டுள்ள நமீதா, பார்வையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்த உள்ளாராம்.

பணவீக்கம் 7.57 விழுக்காடாக உயர்வு!

பணவீக்கம் கடந்த 42 மாதங்களாக (மூன்றரை வருடங்களாக) இல்லாத அளவிற்கு 7.57 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

அரிசி, பால், தேயிலை, காய்கறி மற்றும் சில உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில், பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 7.57 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

மொத்த விலை அட்டவணையின் அடிப்படையில் வெளியிடப்படும் பணவீக்க விகிதம், சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 6.07 விழுக்காடாக இருந்தது.

இதற்கு முன் 2004ஆம் ஆண்டு நம்பர் மாதம் 2ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அதிகபட்சமாக பணவீக்கம் 7.76 விழுக்காடாக இருந்தது.

ஏப்ரல் 19ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தேயிலை விலை 17 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதே மாதிரி பால், அரிசி, காய்கறி, இறைச்சி ஆகிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதே போல் டீசல் விலை 2 விழுக்காடு, உலை எரி எண்ணெய் 1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வார்ப்பட இரும்பு குழாய்களின் விலை 51 விழுக்காடு, தேனிரும்பு 8 விழுக்காடு, உருக்குத் தகடு 2 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மத்திய அரசு விலைவாசி உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பாஸ்மதி அல்லாத மற்ற ரக அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

அத்துடன் சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாதத்தில், வஙகிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை முக்கால் விழுக்காடுவரை அதிகரித்துள்ளது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தும், கடந்த 42 மாதங்களாக இல்லாத அளவாக, பணவீக்கம் 7.57 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வார்னே, கங்குலி 10% தண்டம் கட்டவேண்டும்

கொல்கத்தா அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் கடந்த வியாழக்கிழமை ஆட்டம் நடைபெற்றது. அதில் விக்கெட் தொடர்பாக திருப்தியடையாத கங்குலி நடுவர் பிரதாப் குமாரிடம் மூன்றாவது நடுவரிடம் முறையீடு செய்ய தலையிட்டார். பிறகு மூன்றாவது நடுவர் அசாத் ரவ்ப் கங்குலிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.

இதுபற்றி எரிச்சலடைந்த ராஜஸ்தான் காப்டன் வார்னே, கங்குலி மீது பாய்ந்தார். கங்குலி ஐபிஎல் உடன்படிக்கையின் படி செயல்படவில்லை என்று கருத்து தெரிவித்தார்.

விளையாட்டின் போது நடுவரை குறிக்கீடுது செய்த கங்குலிக்கு ஐசிசி சட்டத்தின் படி லெவல் 1 குற்றமிழைக்கப்பட்டவராக கருதப்பட்டு, ஆட்ட நடுவர் பரூக் இன்ஞினியர் ஒழுங்கு நடவடிக்கையாக 10% சதவீத தண்டம் கட்ட உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஆட்டம் தொடர்பான வற்றை பொது இடத்தில் விமர்சித்ததற்காக வார்னே செக்சன் 1.7 ன் கீழ் குற்றமிழைத்தவராக கருதப்பட்டு அவருக்கும் 10% தண்டம் விதித்துள்ளார். நடுவர் குமார் ஒரு ஆட்டத்திற்கு நடுவர் தகுதியை இழந்துள்ளார்.

பிரியங்கா- நளினி சந்திப்பு, தவறான தகவல் தந்த சிறை அதிகாரி

வேலூர் சிறையில் மார்ச் 19 தேதி நளினியை பிரியங்கா சந்தித்து பேசினார். ஆனால் அத்தகைய சந்திப்பு நிகழவில்லை என சிறை அதிகாரி ராஜசௌந்தரியின் கடிதம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி பொற்கோவிலில் வழிபடுவதற்காக பிரியங்கா வந்துள்ளார் என்கிற செய்தி அறிந்த ராஜ்குமார் (வக்கீல்), பிரியங்கா வேறு விசயமாகத்தான் வந்திருக்கலாம் என்று எண்ணியவராக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் கடந்த 8 தியதி தபால் வழியே சந்திப்பு பற்றிய தகவல் தேவை என்று வேலூர் சிறைதுறையிடம் விண்ணப்பித்தார்.

ஏப்ரல் 10 தியதி சிறைத்துறை அதிகாரிகளுக்கு அக்கடிதம் கிடைக்கப்பெற்றது. ஆனால் பொறுப்பு அதிகாரி ராஜசௌந்தரி மார்ச் 19 (நளினி-பிரியங்கா) சந்திப்பு நிகழவில்லை என ஒற்றை வரியில் பதில் அனுப்பினார்.

இந்த சந்திப்பு பற்றி பிரியங்கா 'தான் அமைதி வேண்டி நளினியை சந்தித்ததாக' அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இப்படியிருக்க சிறை அதிகாரி தவறான தகவல் தந்ததற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 20(2) ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி மாநில தகவல் ஆணையத்திற்கு (State Information Commission (SIC)) கடிதம் அனுப்பியிருக்கிறார் ராஜ்குமார்.

இத்தகவலை ரைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

Free Blog CounterLG