கனடாவின் தயாரிப்பான ப்ளேக்பரி கைப்பேசியை இந்தியாவில் அறிமுகப்படுத்த தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.
ப்ளேக்பரியுனுடைய செர்வர் கனடாவில் இருப்பதனால் மின்னஞ்சல் பறிமாற்றத்தை இந்தியாவிலிருந்து கண்கானிக்க இயலாது. பாதுகாப்பு காரணங்களை காரணங்காட்டி இந்திய தொலைத்தொடர்பகம் இதனை தற்காலிகமாக தடை செய்துள்ளது.
ஆனால் தங்களுடைய வணிக வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக டாடா தொலைபேசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ப்ளேக்பரியுனுடைய Research In Motion (RIM) ம் இந்திய தொலைபேசி துறையும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
Tuesday, April 22, 2008
தொடரும் ப்ளேக்பரி கைப்பேசி குழப்பம்
Posted by udanadi at 4/22/2008 09:43:00 PM 0 comments
சிறிலங்காவுக்கு 1.5 மில்லியன் டொலர் ஈரான் உதவி
கிழக்கு மாகாணத்தில் புதிய வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கப் போவதாகக் கூறி ஈரானிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுள்ளது.
மகிந்த ராஜபக்ச அண்மையில் ஈரானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அந்நாட்டு அரச தலைவரால் இந்த நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
(நன்றி புதினம்)
இதற்கிடையே இரான் அதிபர் அஹமது நிஜாத் அடுத்த வாரம் இந்தியா வழியாக இலங்கை வருகிறார்.
Posted by udanadi at 4/22/2008 08:21:00 PM 0 comments
துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஜார்ஜ் புஷ் கைது.
கொடைக்கானல் அருகே உள்ள அருங்கனாரு மலைப்பகுதியில் அதிரடி படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஜார்ஜ் புஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வாங்கி கொடுத்ததாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு
மாலைமலர்
Posted by udanady at 4/22/2008 11:09:00 AM 0 comments
Labels: ஜார்ஜ் புஷ்
அனைத்து ஊர்களிலும் நூலகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அனைத்து ஊர்களிலும் நூலகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்து ஊர்களிலும் மக்கள் தொகை அடிப்படையில் படிப்படியாக நூலகங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் வேல்முருகன் (பா.ம.க.), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்), அப்பாவு (தி.மு.க.) ஆகியோர் நூலகம் திறப்பது, ஊழியர் நிரந்தரம் தொடர்பாக பேசியவற்றுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் விவரம்:-
""மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே பகுதி நேர நூலகம் திறக்க அரசு முடிவு செய்கிறது. நூலகம் செயல்பட வாடகையில்லா இலவசக் கட்டடம், தலா ரூ.1,000 செலுத்தி இரண்டு பேர் புரவலர்களாகச் சேருதல், நூலக உறுப்பினர் காப்புத் தொகை ரூ.15-ம், ஆண்டு சந்தா ரூ.5 என மொத்தம் 200 பேர் நூலக உறுப்பினர்களாகச் சேர வேண்டும். சுமார் ரூ.2,000 மதிப்புள்ள தளவாடங்களை இலவசமாக வழங்க வேண்டும்.
இவற்றை மக்கள் பூர்த்தி செய்யும் நிலையில், பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமம், திருப்பூர் அருகே உள்ள பகுதிகளில் பகுதி நேர நூலகம் திறக்க ஆவன செய்யப்படும்.
450 பேர் பணி நிரந்தரம் எப்போது? தமிழகம் முழுவதும் நூலகங்களில் தினக் கூலிகளாக, பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றிய 1,000 பேரை தி.மு.க. அரசு ஏற்கெனவே பணி நிரந்தரம் செய்துள்ளது. இன்னும் தகுதியுள்ள 450 பேரை பணி நிரந்தரம் செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து, வரும் 24-ம் தேதி நடைபெறும் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியாகும்'' என்றார் அமைச்சர்.
Posted by udanadi at 4/22/2008 09:04:00 AM 0 comments