Tuesday, April 22, 2008

சிறிலங்காவுக்கு 1.5 மில்லியன் டொலர் ஈரான் உதவி

கிழக்கு மாகாணத்தில் புதிய வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கப் போவதாகக் கூறி ஈரானிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுள்ளது.
மகிந்த ராஜபக்ச அண்மையில் ஈரானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அந்நாட்டு அரச தலைவரால் இந்த நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.


(நன்றி புதினம்)

இதற்கிடையே இரான் அதிபர் அஹமது நிஜாத் அடுத்த வாரம் இந்தியா வழியாக இலங்கை வருகிறார்.

0 comments:

Free Blog CounterLG