Saturday, April 19, 2008

விஜயகாந்த் புகார் - பேருந்து கட்டணம் குறைப்பு.


சென்னை: ட்ரிபிள் எஸ் (S.S.S) பேருந்துகள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியதை தொடர்ந்து, கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ட்ரிபிள் எஸ் பஸ்கள் சாதாரண எக்ஸ்பிரஸ் பஸ்களாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளன. தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 16ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சி தலைவர் விஜயகாந்த் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறினார்.

தமிழகத்தில் ட்ரிபிள் எஸ்', நான்ஸ்டாப்' என்ற பெயரில் மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய வழித்தடங்களை குறிப்பிடுகிறேன். உதாரணமாக சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு ரூ.20ம், கடலூருக்கு ரூ.10ம், புதுவைக்கு ரூ.11ம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று பேசினார். இதையடுத்து மறுநாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அளித்த பேட்டியில், அரசாங்கத்தின் சார்பில் பேருந்து கட்டணங்களை உயர்த்தும் போது ரகசியமாக செய்ய முடியாது.

அவர் (விஜயகாந்த்) சில ஊர்களை குறிப்பிட்டு அந்த ஊருக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டதாக சொல்லியிருப்பது 'எஸ்.எஸ்.எஸ்.' பேருந்துகள் என்ற சிறப்பு பேருந்துகளுக்கான கட்டணம். அத்தகைய சிறப்பு பேருந்துக்களுக்கான கட்டணம் கூட அதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்டதே தவிர, தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து விஜயகாந்த் மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அறிக்கை விடுத்தார். இதையடுத்து, சட்டசபையிலும் பொதுவிவாதத்தின் போது இந்த பஸ் கட்டணம் குறித்து கூறினார். அத்துடன் ஏப்ரல் 2ந் தேதி அன்று சட்டசபையில் பேசிய விஜயகாந்த், மறைமுக பஸ் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே முதலமைச்சர் இதனை கருணையுடன் பரிசீலித்து அனைத்து பஸ்களையும் குறைந்த கட்டணத்தில் இயக்க வேண்டும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ட்ரிபிள் எஸ் பேருந்துகள், எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இயக்கப்படுகிறது. மறைமுகமாக வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணமும் தற்போது வசூலிக்கப்படவில்லை. எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கான பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டு பழைய கட்டணம் வசூலிக்கப்படுவதை வரவேற்றுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நடிகர் விக்ரம் பிறந்த நாள்- கண் தானம்.

சீயான் விக்ரம் தனது பிறந்த நாளையொட்டி கண் தானம் செய்துள்ளார்.

விக்ரமுக்கு நேற்று 42வது பிறந்தநாளாகும். இதையொட்டி அர்த்தபூர்வமாக தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் விக்ரம்.

தனது பிறந்த நாளையொட்டி கண்தானம் செய்தார் விக்ரம். இதுதொடர்பான ஆவணங்களை அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிடம் அளித்தார். மேலும், விக்ரம் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 1332 பேரும் கண்தானம் செய்தனர்.

இதுதவிர தனது பெயரில் புதிய இணையதளம் ஒன்றையும் நேற்று தொடங்கினார் விக்ரம்.

இந்த இணையதளம் குறித்து விக்ரம் கூறுகையில், எனது ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள். நான் ஆண்டுக்கு 3 படங்கள் தந்தாலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு படம் தந்தாலும் காத்திருந்து, அதை ரசிக்க தயாராக இருப்பவர்கள் அவர்கள்.

இப்படிப்பட்ட பெருந்தன்மையான, விசுவாசம் மிக்க ரசிகர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும். எனக்கு அவர்கள் தருவதை அவர்களுக்கு நான் முறையாக திருப்பித் தர வேண்டும். அதற்குத்தான் இந்த இணையதளம்.

தாங்கள் நினைக்கும் விஷயங்களை இந்த இணையதளம் மூலம் அவர்கள் என்னிடம் தெரிவிக்கலாம். தங்களது யோசனைகளை இதன் மூலம் தெரிவிக்கலாம் என்றார் விக்ரம்.

மேலும், தனது விக்ரம் பவுன்டேஷன் நிறுவனம், வரும் ஆண்டுகளில் மக்களுக்கு உபயோகரமான பணிகளில் ஈடுபடவுள்ளதாவும் தெரிவித்தார் விக்ரம்.

15 அடி ஆழத்தில் பாதாள அறை ராசிபுரம் அருகே பரபரப்பு

ராசிபுரம், ஏப். 19- ராசிபுரம் அருகில் உள்ள நாமகிரிப் பேட்டையில் 15 அடி ஆழத்தில் இருந்த பாதாள அறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதைக் காண மக்கள் திரள் திரளாக வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போயர் தெருவில் பழனிச்சாமி என்பவரின் வீட்டிற்கு எதிரில் நீண்ட காலமாக திட்டு ஒன்று இருந்து வந்துள்ளது. 17 ஆம் தேதியன்று அந்தத் திட்டின் மீது விறகை வைத்து பழனிச்சாமி வெட்டியுள்ளார். அப்போது அந்த இடத்தில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. தன் தந்தையை அழைத்து வந்து அந்தப் பள்ளத்தைப் பெரிதாக்கி பார்த்த போது, அந்த இடத்தில் 15 அடி ஆழத்தில் பாதாள அறை ஒன்று இருப்பது தெரிய வந்தது. 10 அடி அகல நீளத்தில் செங்கற்களால் கட்டப்பட்டு, சுண்ணாம்பால் பூசப்பட்டி ருந்தது. அதன் தென்புறத்தில் மேலும் ஒரு சிறிய அறையும் தெரிந்தது. அதில் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன்மேல் ஒரு மனித எலும் புக்கூடு இருந்தது.

தகவலறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு பாதாள அறையை வியப்புடன் பார்த் துச் சென்றனர். இது பற்றி ஊர் மக்கள், இந்தப் பகுதியில் ஜங்கம சமூகத்தை (பண்டாரம்) சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந் தனர். இவர்கள் துறவியாக கோயில்களில் இறந்தவர்களை பாதாள அறைகள் கட்டி புதைப்பார்கள். அவ்வாறு புதைக்கப்பட்ட சமாதி யாக இது இருக்கலாம் என்று கூறினார்.
இந்த பாதாள அறை சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று சேலம் பாரமஹால் நாணயவியல் சங்க துணைத் தலைவர் சுல்தான் கூறினார்

11 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

சென்னை, ஏப். 19- மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட 11 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை டில்லி சர் கங்காராம் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இம்மருத் துவமனையின் குழந்தை கல்லீரல் மருத்துவ வல்லுநர் நீலம் மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தை சித்தார்த்துக்கு பிறந்த 2 ஆவது நாளிலேயே மஞ்சள் காமாலை ஏற்பட்டது இதையடுத்து குழந்தைக்கு பைலரி அட்ரீஸியா என்ற கல்லீரல் கோளாறு இருப்பது அய்ந்தாவது மாதத்தில் உறுதி செய்யப்பட்டது. அதாவது கல்லீரலில் உற் பத்தியாகும் பித்த நீரை செரி மானத்துக்காக குடலுக்கு எடுத் துச் செல்லும் பித்த நாளங்கள் இல்லாத நிலையே பைலரி அட்ரீஸியா எனப்படும். இத்தகைய கோளாறு காரணமாக நாளடைவில் கல்லீரல் செயலி ழந்து உயிர்போகும் ஆபத்து ஏற்படும்.

கல்லீரல் பாதிப்பு காரண மாக சித்தார்த்தின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்தது. குழந் தைக்கு மறு வாழ்வு அளிக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வு என குழந்தையின் பெற்றோரிடம் சென்னை மருத்துவர்கள் கூறி விட்டனர்.

இதையடுத்து டில்லி சர்கங்காராம் மருத்துவமனையில் சித்தார்த்தனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

குழந்தை சித்தார்த்தின் அத்தை சரோஜாவின் கல்லீரலிலிருந்து 20 சதவிகிதப் பகுதி தானமாக எடுக்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டது.

சித்தார்த் மற்ற குழந்தை களைப்போன்று ஆரோக்கியமாக உள்ளான் என மருத்துவர் நீலம்மோகன் தெரிவித்தார்.

திருச்சி பேராசிரியர் அயோத்திக்கு சாகித்ய அகாதமி இலக்கிய விருது

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வி.அயோத்திக்கு சாகித்ய அகாதமியின், மொழிபெயர்ப்பு படைப்பிலக்கியத்துக்கான விருது கிடைத்துள்ளது.

சாகித்ய அகாதமி பொன்விழாவையொட்டி கடந்த 2007ம் ஆண்டு இறுதியில் அகில இந்திய அளவில் மொழிபெயர்ப்புத் திறன் போட்டி நடத்தப்பட்டது.

30 இந்திய மொழிகளில் இருந்து பல்வேறு முக்கிய இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் இதில் சமர்ப்பிக்கப்பட்டன.
போட்டி முடிவில் பெரும்பாலான பரிசுகளை வங்காள மொழி இலக்கிய படைப்புகள் அள்ளிச் சென்றன.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் டாக்டர் வி. அயோத்திக்கு மொழிபெயர்ப்பு படைப்பிலக்கியத்துக்கான விருது கிடைத்துள்ளது.

ஏராளமான தமிழ் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் செவிவழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் பேராசிரியர் அயோத்தி நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார்.

தென்னிந்தியாவில் 2 பேருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. இதில் அயோத்தி ஒருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுக்கான ரொக்கப் பரிசும், பாராட்டுப் பட்டயமும் அயோதிக்கு வழங்கப்படும்.




மும்பை இரயிலில் அடிபட்டு இதுவரை 20,000 பேர் சாவு

தினமும் 70 இலட்சம் மக்கள் பயணிக்கும் மும்பை இரயில்களில் விபத்துக்களில் சிக்கி கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 20,706 பேர் இறந்துள்ளனர். சேதன் கோதாரி என்கிற தன்னார்வலர் ஓருவரால் Right to Information Act. சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களிலிருந்து இது கிடைக்கப்பெற்றது. இரயில்வே கமிஷனர் A.k. சர்மா கூறுகையில் நாட்டில் அதிகம் பேர் பயணிக்கும் மும்பை இரயிலில் தினமும் 10 பேர் விபத்துக்கள்ளாகின்றனர் என்று தெரிவித்தார்.

அதிக விபத்துக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுவதில் தான் ஏற்படுகிறது.சில சமயம் மின்சாரம் தாக்கியும் இரயில் பெட்டி வாசலில் தொங்கி வருகையில் தோலில் போட்டிருக்கும் பை மின்கம்பம் போன்றவற்றில் பட்டு கீழே விழுந்தும் விபத்துக்கள் நடக்கின்றன.



விலைவாசி உயர்வை கட்டுபடுத்த முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டம்


இடது சாரிகள், பாஜக போன்ற கட்சிகள் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்ற நிலையில் இன்று முதலமைச்சர் திரு கருணாநிதி தலைமையில் கோட்டையில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தலைமைச் செயலாளர் திரிபாதி , நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



திரைப்பட நடிகையும், நாட்டுபுற பாடகியுமான தேனி குஞ்சரம்மா மாரடைப்பால் மரணம்.

சென்னை: பிரபல நாட்டுபுற பாடகியும், நடிகையுமான தேனி குஞ்சரம்மா சென்னையில் நேற்று மாராடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் பாரதிராஜாவின் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தேனி குஞ்சரம்மா. இவர், பதினாறு வயதினிலே, கருத்தம்மா, ஜில்லுனு ஒரு காதல், விசில் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நாட்டுபுற பாடகியான இவர், தனது வெண்கல குரலில் பாடிய பாட்டுக்கள் பிரபலமானவை. இந்நிலையில், 75 வயதான குஞ்சரம்மா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அங்கு, அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் மரணம் அடைந்தார். தேனி குஞ்சரம்மாவுக்கு 3 மகள்களும், பேரன், பேத்திகளும் உள்ளனர். அவரது உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட ஏராளமான திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

(நன்றி -குமுதம்)

உண்ணாவிரதத்தில் பங்கேற்காதது ஏன்?,நூற்றுக் கணக்கில் கடிதங்கள் வந்து குவிந்தன.

உடம்பு சரியில்லை-வழுக்கி விழுந்துவிட்டேன், என்று விளக்கம்
சென்னை, ஏப்.19- தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? என்று விளக்கம் அளித்து பல நடிகைகள், நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

அதில் பெரும்பாலானவர்கள், ``உடம்பு சரியில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு நடிகை, பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக எழுதியிருக்கிறார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தமிழ் அமைப்புகள் மீதும், தியேட்டர்கள் மீதும் கன்னட வெறியர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். இதை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ரஜினிகாந்த்-கமலஹாசன் உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்துகொண்டார்கள். முன்னணி கதாநாயகிகள் மற்றும் நடிகர்-நடிகைகள் பலர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை.

உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? என்று விளக்கம் கேட்டு, அந்த நடிகர்-நடிகைகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

அதற்கு விளக்கம் அளித்து, நூற்றுக் கணக்கான நடிகர்-நடிகைகள், நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

அவர்களில், நடிகர்கள் கார்த்திக், மணிவண்ணன், நடிகைகள் ரேவதி, சிம்ரன், நிலா, பத்மப்ரியா, ரீமாசென் ஆகியோர், ``உடம்பு சரியில்லாததால், உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை'' என்று விளக்கம் எழுதியிருக்கிறார்கள்.

`அழகி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை மோனிகா, ``பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதால், உண்ணாவிரதத்துக்கு வர முடியவில்லை'' என்று எழுதியிருக்கிறார்.

நடிகை நவ்யா நாயரும், நடிகர் ரகுமானும், ``வெளிநாட்டில் இருந்ததால் வரமுடியவில்லை'' என்று விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

நடிகர் நெப்போலியன், வெளிநாட்டில் இருப்பதால் கலந்துகொள்ள இயலாது என்று முன்கூட்டியே கடிதம் அனுப்பி விட்டார். இதேபோல் நடிகை ராதிகா சரத்குமாரும் வெளிநாட்டில் இருப்பதால் வர முடியவில்லை என்று முன்கூட்டியே கடிதம் அனுப்பி இருக்கிறார்.

முன்னணி கதாநாயகிகளான அசின், கோபிகா ஆகிய இருவரிடம் இருந்தும் இன்னும் கடிதங்கள் வரவில்லை என்றும், விளக்க கடிதத்துக்கான `கெடு' முடிவடைய இன்னும் 7 நாட்கள் இருக்கிறது என்றும் நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

(நன்றி-தினத்தந்தி)

சென்னையில் நள்ளிரவில் ரவுடிகள் வேட்டை; 50 பேர் சிக்கினர்

சென்னை, ஏப். 18- சில மாதங்களுக்கு முன் அரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த மதுரையைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் சிக்கியது. போலீசார் அவர்களது சதிதிட்டத்தை முறியடித்தனர்.

கடந்த வாரம் அயனாவரத்தில் பதுங்கி இருந்த ரவுடிகள் செந்தில்குமார், சுடலை மணி ஆகியோர் போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் சென்னையில் பதுங்கி இருந்து கொண்டு தூத்துக்குடியை மிரட்டிய தாதாக்கள் ஆவார்கள்.

இதற்கிடையே சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க கபாலீசுவரர் கோவிலில் நடந்த கொள்ளையை தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் சித்ரா பவுர்ணமி விழாக்களும், சித்திரை திருவிழா என தொடர்ந்து பண்டிகை விடுமுறை வருவதால் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள அனைத்து போலீசாரும் கூட்டாக சேர்ந்து `ஷாமிங் ஆபரேஷன்' என்ற பெயரில் நள்ளிரவில் சோதனை நடத்துகிறார்கள். போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் தலைமையில் இணை கமிஷனர்கள் ரவி, பால சுப்பிரமணியம், துரை ராஜ் ஆகியோர் மேற்பார் வையில் அனைத்து துறை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 ஆயிரம் பேர் இந்த சோதனையில் ஈடுபட் டனர்.

இவர்கள் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 440 குழுக்களாக தனித்தனியாக பிரிந்து சென்று சோதனை நடத்தினார்கள். லாட்ஜுக்கள், மேன்சன்கள் மற்றும் சந்தேகப்படும் இடங்களில் புகுந்து சோதனை நடத்தப்பட்டது. வாகனங்களில் செல்வோரையும் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது போலீஸ் தேடிய பயங்கர ரவுடிகள் 50 பேர் பிடிபட்டனர். மேலும் 150 பழைய குற்றவாளிகள், 50 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 800 பேரும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 100 பேரும், நடுரோட்டில் கலாட்டா செய்த 50 பேரும் சிக்கினார்கள். மொத்தம் 1200 பேர் பிடிபட்டனர். இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து போலீஸ் நிலை யங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் போலீசார் உஷாராக இருக்கிறார்களாப என்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வடசென்னை பகுதியில் பாதுகாப்பு பணியில் விழிப்புடன் செயல் படாமல் அசட்டையாக இருந்த 4 பெண் போலீசார் உள்பட 9 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

மகாவீர் ஜெயந்தியையொட்டி இன்று மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டு இருந்தது. மதுக்கடைகளையும் போலீசார் நேற்று இரவு முதல் கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய தாவது, "சித்திரை திருவிழா விடுமுறை தொடர்ந்து வருவதால் கொள்ளை, வழிப்பறியை தடுக்க இரவு ரோந்து பணி தீவிரப்படுத் தப்பட்டு உள்ளது சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து அனுப்புகிறோம். சந்தேகப் படும் வகையில் கும்பலாக யாராவது வீடு பிடித்து தங்கி இருக்கிறார்களா என்றும் விசாரித்து பொதுமக்களை உஷார்படுத்தி உள்ளோம். அவ்வாறு யாராவது தங்கி இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்''

தாதாக்கள் போல் செயல்படும் உள்ளூர் ரவுடிகள், வெளி மாவட்ட, வெளி மாநில ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள் என பட்டியல் தயாரித்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

(நன்றி-மாலைமலர்)

10 மடங்கு சம்பள உயர்வு கேட்கும் நீதிபதிகள்: மாதம் ரூ.3 லட்சம் வேண்டும்.


புதுடெல்லி, ஏப். 18-மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை கணிசமாக உயர்த்த 6-வது சம்பளக்கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதை பார்த்ததும் அரசின் மற்ற பல்வேறு அமைப்பு களும், தங்களுக்கும் சம்பளத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவம், ரெயில்வே துறைகளில் சம்பள உயர்வு போதாது என்ற அதிருப்தி நிலவுகிறது.

இந்த நிலையில் நீதிபதிகளும் தங்கள் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்தபட்சம் 10 மடங்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கூறி உள்ளனர். டெல்லியில் நேற்று தொடங்கிய நீதிபதிகள் மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மத்திய அரசிடம் முறைப்படி பரிந்துரைக்கப்படும் என்று மாநாட்டுக்கு தலைமை தாங்கிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் கூறினார்.

சம்பளம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் "செபி, டிராய், சிஇஆர்சி, சிசிஐ மற்றும் ஐஆர்டிஏ போன்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கு மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வழங்க 6-வது சம்பளக் கமிஷனில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நீதிபதிகளாக இருப்பவர்கள் நாட்டுக்காக நீதியை நிலை நாட்டும் மிகப்பெரும் சேவையை செய்து வருகிறார் கள். அவர்களது தியாகத்தை கவுரவிக்கும் வகையில் மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வழங்கப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

(நன்றி-மாலைமலர்)

ஆறு நாளில் நூறு பதிவுகள்

தமிழ் வலைப்பதிவுகள் வரலாற்றில் முதன்முறையாக ஆறு நாட்களில் நூறு பதிவுகளிட்டு 'உடனடி' சாதனை படைத்துள்ளது. வாசகர்கள், செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.

உடனடி.காம்



Free Blog CounterLG