Saturday, April 19, 2008

நடிகர் விக்ரம் பிறந்த நாள்- கண் தானம்.

சீயான் விக்ரம் தனது பிறந்த நாளையொட்டி கண் தானம் செய்துள்ளார்.

விக்ரமுக்கு நேற்று 42வது பிறந்தநாளாகும். இதையொட்டி அர்த்தபூர்வமாக தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் விக்ரம்.

தனது பிறந்த நாளையொட்டி கண்தானம் செய்தார் விக்ரம். இதுதொடர்பான ஆவணங்களை அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிடம் அளித்தார். மேலும், விக்ரம் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 1332 பேரும் கண்தானம் செய்தனர்.

இதுதவிர தனது பெயரில் புதிய இணையதளம் ஒன்றையும் நேற்று தொடங்கினார் விக்ரம்.

இந்த இணையதளம் குறித்து விக்ரம் கூறுகையில், எனது ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள். நான் ஆண்டுக்கு 3 படங்கள் தந்தாலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு படம் தந்தாலும் காத்திருந்து, அதை ரசிக்க தயாராக இருப்பவர்கள் அவர்கள்.

இப்படிப்பட்ட பெருந்தன்மையான, விசுவாசம் மிக்க ரசிகர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும். எனக்கு அவர்கள் தருவதை அவர்களுக்கு நான் முறையாக திருப்பித் தர வேண்டும். அதற்குத்தான் இந்த இணையதளம்.

தாங்கள் நினைக்கும் விஷயங்களை இந்த இணையதளம் மூலம் அவர்கள் என்னிடம் தெரிவிக்கலாம். தங்களது யோசனைகளை இதன் மூலம் தெரிவிக்கலாம் என்றார் விக்ரம்.

மேலும், தனது விக்ரம் பவுன்டேஷன் நிறுவனம், வரும் ஆண்டுகளில் மக்களுக்கு உபயோகரமான பணிகளில் ஈடுபடவுள்ளதாவும் தெரிவித்தார் விக்ரம்.

0 comments:

Free Blog CounterLG