Saturday, April 19, 2008

திரைப்பட நடிகையும், நாட்டுபுற பாடகியுமான தேனி குஞ்சரம்மா மாரடைப்பால் மரணம்.

சென்னை: பிரபல நாட்டுபுற பாடகியும், நடிகையுமான தேனி குஞ்சரம்மா சென்னையில் நேற்று மாராடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் பாரதிராஜாவின் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தேனி குஞ்சரம்மா. இவர், பதினாறு வயதினிலே, கருத்தம்மா, ஜில்லுனு ஒரு காதல், விசில் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நாட்டுபுற பாடகியான இவர், தனது வெண்கல குரலில் பாடிய பாட்டுக்கள் பிரபலமானவை. இந்நிலையில், 75 வயதான குஞ்சரம்மா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அங்கு, அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் மரணம் அடைந்தார். தேனி குஞ்சரம்மாவுக்கு 3 மகள்களும், பேரன், பேத்திகளும் உள்ளனர். அவரது உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட ஏராளமான திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

(நன்றி -குமுதம்)

0 comments:

Free Blog CounterLG