தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கருணாநிதி முடிவு?
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நடைபெறலாம் என பரபரப்பு எழுந்துள்ளது.தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் கருணாநிதி தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.ஐந்து அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதல்வருக்கு திருப்தி இல்ைல எனவும், எனவே அவர்களுக்கு கல்தா கொடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்குப் பதில் ஐந்து பேர் புதிதாக சேர்க்கப்படக் கூடும்.
மேலும் முக்கிய முடிவாக முதல்வர் கருணாநிதி வசம் உள்ள காவல்துறையை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தரவும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. காவல்துறை வழக்கமாக முதல்வர் பதவி வகிப்பவர்கள் கையில்தான் இருந்து வருகிறது. கடந்த 1967ம் ஆண்டுக்குப் பின்னர் இதுதான் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் அந்த வழக்கத்தை மாற்றி ஸ்டாலினுக்கு காவல்துறையைத் தர முதல்வர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
நீக்கப்படும் அமைச்சர்கள் பட்டியலில் மொய்தீன் கான், என்.கே.கே.பி. ராஜா, சுப.தங்கவேலன், பெரியகருப்பன் ஆகியோர் இருப்பதாக தெரிகிறது. மூத்த அமைச்சர் கோ.சி.மணி உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு மீண்டு மறுபடியும் பணியாற்றி வருகிறார். இருப்பினும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவைப் பளுவிலிருந்து அவரை விடுவிக்க முதல்வர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளவர்கள் பட்டியலில் மதுரை மத்திய தொகுதி கவுஸ் பாட்ஷா, நெல்லை கருப்பசாமி பாண்டியன், ராஜ.கண்ணப்பன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.வருகிற 13ம் தேதியுடன் திமுக அமைச்சரவை ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது என்பது நினைவிருக்கலாம்.
இந்த சமயத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தி வெளியாகியிருப்பதால் எம்.எல்.ஏக்கள் மத்தியில் அமைச்சர் கனவு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Sunday, May 4, 2008
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கருணாநிதி முடிவு?
Posted by udanadi at 5/04/2008 09:56:00 PM 0 comments
கருணாநிதிக்கு பகுத்தறிவாளர் கழக விருது
கருணாநிதிக்கு பகுத்தறிவாளர் கழக விருது
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் "வீரமணி சமூக நீதி விருது' வழங்கப்படுகிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
திருச்சியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
சிகாகோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் "வீரமணி சமூக நீதி' விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
சென்னையில் செப்டம்பர் 2 - வது வாரத்தில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படும். இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் பங்கேற்கின்றனர்.
Posted by udanadi at 5/04/2008 09:52:00 PM 0 comments
Labels: கருணாநிதி, கழகம், சிகாகோ, சென்னை, பகுத்தறிவாளர், விருது
4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது
4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது
சென்னை, மே 3: சென்னையைச் சேர்ந்த இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் உள்பட நான்கு டாக்டர்களுக்கு மருத்துவ உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருது கிடைத்துள்ளது.
இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக மனநல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரை, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவர் டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப் ஆகியோர் டாக்டர் பி. சி. ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) இவர்களைத் தேர்வு செய்து ள்ளது.
டாக்டர் மீர் முஸ்தபா உசேன்டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்
டாக்டர் என். ரங்கபாஷ்யம் டாக்டர் ஆர். பொன்னுதுரை டாக்டர் ஆர். பொன்னுதுரை
டாக்டர் ஆர். ரங்கபாஷ்யம்:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். பத்ம விபூஷண் விருது பெற்றவர். ஏராளமான இரைப்பை - குடல் மருத்துவ - அறுவைச் சிகிச்சை நிபுணர்களை உருவாக்கிய பேராசிரியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
டாக்டர் மீர் முஸ்தபா உசேன்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்புத் துறையின் துறைத் தலைவராக ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். "சிறந்த மருத்துவ ஆசிரியர்' என்ற பிரிவில் இவரது பெயர், பி. சி. ராய் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் ஆர். பொன்னுதுரை: சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரைக்கு, துறை சார்ந்த மருத்துவ முதுநிலை படிப்புப் பிரிவுகளை ஏற்படுத்தியதற்காக பி. சி. ராய் விருது வழங்கப்படுகிறது. மன நல மருத்துவத் துறையில் 35 ஆண்டுக்கால அனுபவம் பெற்றவர். சென்னை அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவமனையின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மன நல மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றியபோது, எம்.டி. மனநலப் படிப்பை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்: திருச்சியைச் சேர்ந்த பொது மருத்துவ நிபுணரான இவர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவராக உள்ளார். மருத்துவ சமூக சேவைக்காக அவருக்கு பி.சி. ராய் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தென் மாநிலப் பிரிவின் தலைவராக இருந்தபோது, கிராம மருத்துவ சேவைத் திட்டத்தை வெற்றிகரமாக இவர் செயல்படுத்தினார்.
Posted by udanadi at 5/04/2008 09:46:00 PM 0 comments
Labels: எம்.ஜி.ஆர்., டாக்டர், திருச்சி, பி.சி.ராய், விருது