Tuesday, May 6, 2008

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மதிப்பெண் குறைப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சட்டசபையில் உயர்கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது வெளியிட்ட புதிய அறிவிப்பு வருமாறு:-

என்ஜினீயரிங் கல்லூரி களில் மாணவர்களுக்கு நன்மை ஏற்படுவதற்காக ஏற்கனவே நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு ஏற்பட் டுள்ளது.

ஆனாலும் 2006-07-ல் மாணவர்கள் சேராமல் 19,652 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தன. 2007-08-ல் 14,721 இடங்கள் காலியாக இருந்தது. இந்த ஆண்டு அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கை யும் அதிகாரிக்கும் என தெரி கிறது. எனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதை கருத் தில் கொண்டு அதில் சேருவ தற்காக இந்த ஆண்டு முதல் மதிப்பெண்களை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

பொதுப் பிரிவினர் மேல்நிலை கல்வியில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவிகிதத்தில் இருந்து 55 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 55 சதவிகிதத்தில் இருந்து 50 ஆகவும் மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கு 50 சதவிகிதத்தில் இருந்து 45 சதவிகதமாகவும் குறைக்கப்படுகிறது.

பட்டியல் இனத்தவர்- மலைவாழ், பழங்குடியின மாணவர்கள் மேல்நிலை கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும்.இதன் மூலம் அதிக அளவில் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி மாலை மலர்

தங்கக் காசு மோசடி, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வந்த "கொஸ்ட் நெஸ்ட் இண்டர்நேஷனல்'' என்ற நிறுவனம் தங்க காசு மோசடியில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனத்தை சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந் நிறுவனத்தில் சேர்ந்தனர். பின்னர் நடுத்தர மக்கள் பலரும் லட்சாதிபதியாகும் ஆசையில் அதிக அளவில் இந்நிறுவனத்தில் சேரத் தொடங்கினர்.

இதன் மூலம் தங்க காசு மோசடி திட்டத்தில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இதையடுத்து ஏமாந்தவர்கள் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் இதில் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஓட்டேரி மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பலர் தங்க காசு நிறுவனத்தில் சேர்ந்து ஏமாந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டதால் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் செம்பியம் போலீசில் புகார் செய்தனர்.

வடசென்னை இணை கமிஷனர் ரவி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சம்பத்தங்க காசு மோசடி குறித்து நேரடி விசாரணையில் இறங்கினார்.

அப்போது தங்க காசு மோசடி பெரிய அளவில் நடந்திருப்பது தெரிய வந்தது. அந்நிறுவனத்தின் சென்னை மேலாளர் புஷ்பம் உள்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஹாங்காங்கில் உள்ள தங்க காசு நிறுவன உரிமையாளர் விஜய ஈஸ்வரனை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்காக சர்வதேச போலீஸ் உதவியை நாட உள்ளனர்.

தங்க காசு நிறுவன மோசடி வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை சேத்துப்பட் டில் உள்ள "கொஸ்ட் நெஸ்ட்'' நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 2 முறை சோதனை நடத்தியுள்ள போலீசார் 87 கிலோ தங்க நாணயங்கள், 900 கிலோ வெள்ளி நாணயங்கள் உள்பட ரூ. 50 கோடி மதிப்பி லான சொத்துக்களை பறி முதல் செய்தனர்.

இச் சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கோர்ட்டு உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ரிசர்வ் பாங்கியிடம் ஒப்படைத்து பின்னர் படிப்படியாக அதனை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்போம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இம்மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து சென்று ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, கோவை, ஊட்டி, நீலகிரி ஆகிய பகுதிகளிலும் மோசடி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி பலர் ஏமாந்துள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க காசு மோசடி நிறுவனத்தால் நடுத்தெருவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ. 100 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உளவு பிரிவு போலீசார் இந்த மோசடி குறித்து ரகசிய விசாரணையில் இறங்கி யுள்ளனர்.

சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஒரு பெண் தலைமையிலான கும்பல் சென்றுள்ளது. இக்கும்பலை சேர்ந்தவர்கள் கிராமப்புற மக்களை குறி வைத்து மூளைச்சலவை செய்துள்ளனர். இதன் மூலம் கடையநல்லூர் பகுதியில் 50 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளனர்.


இப்படி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்ற மோசடிக் கும்பல் குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகின் உயரமான குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்க ளில் கலக்கி வரும் நடிகர் ஒருவர் தங்க காசு மோசடி நிறுவனத்தில் சேர்ந்து பொதுமக்கள் பலரை தனது பேச்சால் மயக்கி சங்கிலி தொடர் திட்டத்தில் சேர்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது தவிர முன்னணி நடிகர்-நடிகைகள் பலரும் இம்மோசடி நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இவர்கள் யார்-யார் என்ற பட்டியலும் தயாராகி வருகிறது.

முன்னணி நடிகைகளில் சிலர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்களது பெயர் வெளியில் வராமல் பார்த்துக் கொள் ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் தங்க காசு மோசடியில் முக்கிய பிரமுகர்கள் பலர் பின்னணியில் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டி வருகிறார்கள்.

`கோல்டு கொஸ்ட்' நிறுவனம் ஆந்திராவிலும் தங்க காசு மோசடியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள கடப்பா மாவட்டத்தில் மட்டும் 500 பேரிடம் மோசடி நடந்துள்ளது. ஏமாந்தவர்கள் கூறும்போது, "எங்களிடம் கடப்பாவைச் சேர்ந்த 4 போலீஸ்காரர்கள்தான் கோல்டு கொஸ்ட் நிறு வனத்தின் தங்க காசுகளை விற்றனர். ஒரு தங்க காசு மற்றும் 3 வெள்ளி நாணயங் களுக்கு ரூ. 30 ஆயிரம் வாங்கினார்கள். தங்க காசில் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, விநாயகர், வெங்கடாசலபதி, சீரடி சாய் பாபா ஆகியோரின் உருவங் கள் இருந்தன.

போலீஸ்காரர்கள் எங்களிடம் நாணயத்தை தந்த போது, "இந்த தங்க நாணயம் வெளிநாடுகளில் ரூ. 2 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஆனால் நாங்கள் இதை குறைந்த விலைக்கு தருகி றோம். அபூர்வமான இந்த தங்க நாணயத்தை நீங்கள் அடிக்கடி திறந்து பார்த்தாலோ அல்லது தொட்டு பார்த்தாலோ சீக்கிரம் நாசமாகி விடும்'' என்றனர்.

இதனால் நாங்கள் கண்ணாடி பெட்டியில் இருந்த நாணயத்தை திறந்து பார்க்க வில்லை.

இப்போது மோசடி நடந்த தாக தகவல் பரவியதால் நாணயத்தை ஆய்வு செய் தோம். அது வெறும் 3 கிராம் எடைதான் உள்ளது. அதிலும் அந்த நாணயத்தில் 70 சதவீதம் செம்பு சேர்க்கப் பட்டிருக்கிறது.

எங்களிடம் மோசடி செய்த கோல்டு கொஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த நிர் வாகிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும். அவர்களிடம் இருந்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறினார்கள்.

இதுபற்றி அவர்கள் அங்குள்ள போலீசிலும் புகார் செய்துள்ளனர்.

ஆந்திராவில் கடப்பா தவிர மற்ற பகுதிகளிலும் தங்க காசு மோசடி நடந் திருக்கலாம் என்று சந்தேகிக் கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், வனத்துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம், மின்வாரிய துறை அலவல கங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

பணம் கட்டியவர்களில் பெரும் பாலானோர் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் கட்டியுள்ளனர். இந்த மோசடி வெளியே தெரியவந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் அரசு, தனியார் ஊழியர்களும் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். தற்போது மோசடி வெளியானதும் பணம் கட்டியவர்கள் புலம்பி வருகின்றனர்.

திருச்சியிலும் தங்ககாசு மோசடி நடந்து உள்ளது. இதில் போலீஸ்காரர்களும், ஏஜெண்டுகள் போல செயல்பட்டு உள்ளனர். மொத்தம் 50 ஏஜெண்டுகள் இருந்து உள்ளனர்.

மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல், கே.கே.நகரில் அலுவலகங்கள் செயல்பட்டு வந்து உள்ளது. தற்போது சென்னையில் மோசடி வெளியானதை தொடர்ந்து திருச்சியில் பணம் கட்டி ஏமாந்தவர்கள், ஏஜெண்டு களிடம் பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர்.

சேலம் 5 ரோடு உள்பட 3 இடங்களில் இதன் ஏஜெண்டுகள் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களிடம் ஏராளமான பேர் ரூ.30 ஆயிரம் கட்டி தங்க காசுகள் பெற்று ஏமாந்துள்ளனர்.

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த பலர் ரூ. 28 ஆயிரம் கட்டி தங்க காசு பெற்று வந்துள்ளனர்.

இந்த திட்டத்தில் டாக்டர் கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொழில் அதிபர்களும் பணத்தை இழந்துள்ளனர்.

நன்றி மாலைமலர்

தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்துறை‌யி‌ல் கூடுதலாக 30 ல‌ட்ச‌ம் வேலைவா‌ய்‌ப்புக‌ள் உருவா‌க்க‌ப்படு‌ம் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் தா‌க்க‌ல் செ‌ய்த தொழில்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்‌பி‌ல், தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றத்தை பதித்து வருகிறது. 2006- 2007ல் 20ஆயிரத்து 700 கோடியாக இருந்த மின்பொருள் ஏற்றுமதி 2007-2008ல் ரூ.28,000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது. இதனால் தகவல் தொழில் நுட்பவியல் துறை நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. அடு‌த்த மூ‌‌ன்று ‌ஆ‌ண்டுக‌ளி‌ல் தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்துறை‌யி‌ல் கூடுதலாக 30 ல‌ட்ச‌ம் வேலைவா‌ய்‌ப்புக‌ள் உருவா‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் 2011 ஆ‌ண்டி‌ல் இ‌ந்த துறை‌யி‌ல் 11 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் இரு‌ந்து 25 ‌விழு‌க்காடாக உ‌ற்ப‌த்‌தி‌ அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.


சென்னை தரமணியில் 2-வது டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் 3-வது டைடல் பூங்காவும் 2009-ல் ஆண்டில் செயல்பட தொடங்கும். இதன் மூலம் 40,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 15,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.நாட்டிலேயே அதிக கம்பி வட தொலைக்காட்சி சேவை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதில் பல புகார்கள் வந்ததால் அரசே ஏற்று நடத்தும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது. அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 6-8 நகரங்கள், பேரூராட்சிகளில் அதிநவீன உபகரணங்களை கொண்டு டிஜிட்டல் ஹெட் நிறுவ உத்தேசித்துள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் 80 அலை வரிசைகளை கொண்ட தொலைக்காட்சி குறிப் பு களை 100 கிலோமீட் டர் தூரத்தில் உள்ளூர் கேபிள் இயக்குபவர்களுக்கு எடுத்து செல்லும். மேற்பட்ட தலைமுனைகள் கோவை, நெல்லை, திருவண்ணாமலை, தஞ்சாவூரில் முதல் கட்டமாக நிறுவ உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டுள்ளது.சென்னையில் தலை முனையை அமைக்க உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை செப்டம்பர் முதல் இயங்கத் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. கேபிள், தொலைக்காட்சி தொழிலாளர்களுக்கான நலவாரியம் ஒன்றையும் அரசு அமைத்துள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Free Blog CounterLG