Tuesday, May 6, 2008

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மதிப்பெண் குறைப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சட்டசபையில் உயர்கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது வெளியிட்ட புதிய அறிவிப்பு வருமாறு:-

என்ஜினீயரிங் கல்லூரி களில் மாணவர்களுக்கு நன்மை ஏற்படுவதற்காக ஏற்கனவே நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு ஏற்பட் டுள்ளது.

ஆனாலும் 2006-07-ல் மாணவர்கள் சேராமல் 19,652 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தன. 2007-08-ல் 14,721 இடங்கள் காலியாக இருந்தது. இந்த ஆண்டு அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கை யும் அதிகாரிக்கும் என தெரி கிறது. எனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதை கருத் தில் கொண்டு அதில் சேருவ தற்காக இந்த ஆண்டு முதல் மதிப்பெண்களை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

பொதுப் பிரிவினர் மேல்நிலை கல்வியில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவிகிதத்தில் இருந்து 55 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 55 சதவிகிதத்தில் இருந்து 50 ஆகவும் மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கு 50 சதவிகிதத்தில் இருந்து 45 சதவிகதமாகவும் குறைக்கப்படுகிறது.

பட்டியல் இனத்தவர்- மலைவாழ், பழங்குடியின மாணவர்கள் மேல்நிலை கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும்.இதன் மூலம் அதிக அளவில் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி மாலை மலர்

0 comments:

Free Blog CounterLG