Friday, April 11, 2008

சிங்கப்பூர் தொலைக்காட்சிக்கு 10,000 டாலர் அபராதம்.

சிங்கப்பூர், ஏப் 11 - லெஸ்பியன் முத்தமிடும் விளம்பர காட்சியை ஒளிப்பரப்பியக் குற்றத்திற்காக 'சிங்கப்பூர் ஸ்டார்ஹப் கேபிள் விஷன்' தொலைகாட்சி நிறுவனத்திற்கு சிங்கப்பூர் டாலர் 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட விளம்பரம் விளம்பர விதிமுறையைப் பின்பற்றவில்லை என சிங்கப்பூர் அரசு ஒளிப்பரப்பு ஏஜென்சி 'மீடியா டெவெலப்மென் ஆதோரிட்டி' தெரிவித்தது.ஒலிவியா பாடலை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு இந்த விளம்பர ஒளிப்பரப்பப்பட்டது.

புதிதாக 3 குட்டி கிரகங்கள்!

சூரிய குடுமப்த்தில் சூரியனை மையமாக வைத்து 9 கிரகங்கள் அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. மேலும் ஏராளமான சிறுசிறு கிரகங்களும் சூரிய குடும்பத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இதில் 3 புதிய சிறு கிரகங்களை இப்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த மூன்று கிரகங்கள்தான் மிகப் பழமையானது. இவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளை கவனிக்காமல் தவிக்கவிடும் பெற்றோருக்கு சிறை!

சிட்னி, ஏப். 11-ஆஸ்திரேலியா, குவின்ஸ்லாந்தில் குழந்தைகளை கவனிக்காமல் நீண்ட நேரம் தவிக்கவிடும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. மது விடுதிகள், சூதாட்ட விடுதிகள், கடைவெளி, கார் நிறுத்துமிடம் போன்ற இடங்களில் குழந்தைகளை கவனிக்காமல் அவர்களை தனியே விட்டுவிட்டு செல்லும் பெற்றோருக்கு காவலர்கள் எச்சரிக்கை நோட்டீசை மட்டுமே அளித்து வருகின்றனர். இதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்ற புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது. புதிய சட்டத்தின் படி தகுந்த காரணமின்றி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தனியே கவனிக்காமல் விட்டுச் செல்லும் பெற்றோருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகள்மீது அக்கரை எடுத்துக்கொண்டாலும் சிலர் குழந்தைகளை தனியே தவிக்கவிட்டு, உல்லாசமாக ஊர் சுற்றுவதை கருத்தில் கொண்டு இந்த புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.

பார்க்கின்சன் நோய்க்கிருமி கண்டறியப்பட்டது-மருத்துவ அறிவியலின் முன்னேற்றம்.

லண்டன், ஏப். 11- பார்க்சின்சன் நோய் என்பது ஒரு கொடும் நோய் இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம் முழுவதும் பாதிக்கப்பட்டு, அனைத்துச் செயல்பாடுகளும் அற்றுப் போய்ப் பேசும் சக்தியும் நின்றுபோய்விடும். நடைப் பிணமாக ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படும். இந்நோய்த் தாக்குதலுக்கான மூளை செல்களை அறிவியலா ளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. புதிய செல்களையும் நரம்பு அணுக்களையும் ஆய்வகத்தில் உருவாக்கும் வாய்ப்பு களும் ஏற்பட்டு உள்ளன. ஏனைய மூளை நரம்புகளோடு தொடர்பு கொள்ளும் நரம்பு அணுக்கள் உற்பத்தி செய்யும் வேதியியல் பொருள்களை அறிந்துள்ளனர். இந்த வேதியியல் பொருள்களின் குறைபாடுகள் உடலில் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. நடுக்கம், தசை இறுகிப் போதல், மெதுவான அசைவுகள் போன்றவை உடலில் விளைகின்றன.தற்போதையக் கண்டுபிடிப்பின் விளைவாக இவற்றிற்கு மருத்துவ முறைகளைக் கண்டுபிடிக்கமுடியும் என ஆய் வாளர்கள் கருதுகின்றனர். நோய் தாக்கும் நரம்பணுக்கன் எவ்வாறு உற்பத்தி யாகின்றன என்பதைக் கண்டுபிடித்துவிட்ட காரணத்தால், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்து விடலாம் என்றும், பார்க்கின்சன் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களைக் குணப் படுத்தி விடலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் முன்னாள் அமெரிக் கக் குடியரசுத் தலைவர் ரொனால்டு ரீகன் (எனும் ஸ்டன்ட் நடிகர்) முன்னாள் உலகக் குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி ஆகியோர் அடங்குவர்.

பால் பவுடர் பாக்கெட்டில் ரூ.1 கோடி போதைபொருள்-2 பேர் கைது

சென்னை,ஏப்.11- பால் பவுடர் பாக்கெட்டில் மறைத்து கடத்த முயன்ற ரூ.1 கோடி போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது.சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் இந்தியா அய்.சி. 955 விமானம், அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.ராயபுரத்தைச் சேர்ந்த கசாஞ்மொய்தீன் சாகுல் அமீது (34), சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த சேக் முகைதீன் சவுகார் (50) ஆகியோரின் பைகளில் ஏராளமான பால்பவுடர் பாக்கெட்டுகள் இருந்தன. சந்தேகம் அடைந்த வித்தியாசமாக இருந்த 13 பாக்கெட்டுகளை உடைத்தனர். அவற்றில் கேட்டமைன் ஹைட்ரோபுளோரைடு என்ற போதை பொருள் இருந்தது. இப்படி 13 பாக்கெட்டுகளில் இருந்த 13 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப் பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடியே 34 லட்சம். இதுதொடர்பாக, காதர்மொய்தீன் சாகுல் அமீது, சேக் முகை தீன் சவுகார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மீனம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம், வசதி படைத்த பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தலைவர்களில் ஒருவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். தீர்ப்பு குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நீதியை எட்டும் பயணத்தில் இது இன்னும் ஒரு வெற்றி.இந்த வெற்றியை மாநிலம் முழுவதும் பாமகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.

இருப்பினும் இட ஒதுக்கீட்டின்போது கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்தவர்களை சேர்க்கக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளது மிகவும் அபாயகரமானது.அரசியல் சட்டத்தில் எங்குமே, வசதி படைத்த பிற்படுத்தப்பட்டோர், வசதி இல்லாத பிற்படுத்தப்பட்டோர் என்ற பாகுபாடு இல்லை. எனவே அரசியல் அனைத்தும் இந்த கருத்தை எதிர்க்க வேண்டும். இதற்கு நிவாரணம் காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கிருஷ்ணசாமி- தமிழக காங்கிரஸ் தலைவர் :
கிருஷ்ணசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் இது ஒரு திருப்புமுனையாகும்.

இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து ஓயாத ஆதரவைத் தந்து வந்த முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சு. சுவாமி கூட வரவேற்பு:
உச்சநீதிமன்றத்தை அனைவரும் சேர்ந்து ஒருமனதாக ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன் என்று கூறியுள்ளார் சுவாமி.

Free Blog CounterLG