லண்டன், ஏப். 11- பார்க்சின்சன் நோய் என்பது ஒரு கொடும் நோய் இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம் முழுவதும் பாதிக்கப்பட்டு, அனைத்துச் செயல்பாடுகளும் அற்றுப் போய்ப் பேசும் சக்தியும் நின்றுபோய்விடும். நடைப் பிணமாக ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படும். இந்நோய்த் தாக்குதலுக்கான மூளை செல்களை அறிவியலா ளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. புதிய செல்களையும் நரம்பு அணுக்களையும் ஆய்வகத்தில் உருவாக்கும் வாய்ப்பு களும் ஏற்பட்டு உள்ளன. ஏனைய மூளை நரம்புகளோடு தொடர்பு கொள்ளும் நரம்பு அணுக்கள் உற்பத்தி செய்யும் வேதியியல் பொருள்களை அறிந்துள்ளனர். இந்த வேதியியல் பொருள்களின் குறைபாடுகள் உடலில் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. நடுக்கம், தசை இறுகிப் போதல், மெதுவான அசைவுகள் போன்றவை உடலில் விளைகின்றன.தற்போதையக் கண்டுபிடிப்பின் விளைவாக இவற்றிற்கு மருத்துவ முறைகளைக் கண்டுபிடிக்கமுடியும் என ஆய் வாளர்கள் கருதுகின்றனர். நோய் தாக்கும் நரம்பணுக்கன் எவ்வாறு உற்பத்தி யாகின்றன என்பதைக் கண்டுபிடித்துவிட்ட காரணத்தால், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்து விடலாம் என்றும், பார்க்கின்சன் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களைக் குணப் படுத்தி விடலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் முன்னாள் அமெரிக் கக் குடியரசுத் தலைவர் ரொனால்டு ரீகன் (எனும் ஸ்டன்ட் நடிகர்) முன்னாள் உலகக் குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி ஆகியோர் அடங்குவர்.
Friday, April 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment