Friday, April 11, 2008

குழந்தைகளை கவனிக்காமல் தவிக்கவிடும் பெற்றோருக்கு சிறை!

சிட்னி, ஏப். 11-ஆஸ்திரேலியா, குவின்ஸ்லாந்தில் குழந்தைகளை கவனிக்காமல் நீண்ட நேரம் தவிக்கவிடும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. மது விடுதிகள், சூதாட்ட விடுதிகள், கடைவெளி, கார் நிறுத்துமிடம் போன்ற இடங்களில் குழந்தைகளை கவனிக்காமல் அவர்களை தனியே விட்டுவிட்டு செல்லும் பெற்றோருக்கு காவலர்கள் எச்சரிக்கை நோட்டீசை மட்டுமே அளித்து வருகின்றனர். இதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்ற புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது. புதிய சட்டத்தின் படி தகுந்த காரணமின்றி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தனியே கவனிக்காமல் விட்டுச் செல்லும் பெற்றோருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகள்மீது அக்கரை எடுத்துக்கொண்டாலும் சிலர் குழந்தைகளை தனியே தவிக்கவிட்டு, உல்லாசமாக ஊர் சுற்றுவதை கருத்தில் கொண்டு இந்த புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.

0 comments:

Free Blog CounterLG