சென்னை,ஏப்.11- பால் பவுடர் பாக்கெட்டில் மறைத்து கடத்த முயன்ற ரூ.1 கோடி போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது.சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் இந்தியா அய்.சி. 955 விமானம், அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.ராயபுரத்தைச் சேர்ந்த கசாஞ்மொய்தீன் சாகுல் அமீது (34), சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த சேக் முகைதீன் சவுகார் (50) ஆகியோரின் பைகளில் ஏராளமான பால்பவுடர் பாக்கெட்டுகள் இருந்தன. சந்தேகம் அடைந்த வித்தியாசமாக இருந்த 13 பாக்கெட்டுகளை உடைத்தனர். அவற்றில் கேட்டமைன் ஹைட்ரோபுளோரைடு என்ற போதை பொருள் இருந்தது. இப்படி 13 பாக்கெட்டுகளில் இருந்த 13 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப் பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடியே 34 லட்சம். இதுதொடர்பாக, காதர்மொய்தீன் சாகுல் அமீது, சேக் முகை தீன் சவுகார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மீனம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Friday, April 11, 2008
பால் பவுடர் பாக்கெட்டில் ரூ.1 கோடி போதைபொருள்-2 பேர் கைது
Posted by udanadi at 4/11/2008 10:33:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment