Wednesday, April 30, 2008

`ஏர்கண்டிஷன்' மிஷினில் தீ - நடிகை நமீதா இரவு முழுவதும் தூங்காமல் அவதி

நடிகை நமீதா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பர பங்களாவில், வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அந்த வீட்டில் நமீதாவும், வேலைக்காரர்களும் மட்டுமே வசித்து வருகிறார்கள். நமீதாவின் தாய்-தந்தை மற்றும் உறவினர்கள், சொந்த ஊரான குஜராத்தில் வசிக்கிறார்கள்.

நமீதா தனது பாதுகாப்புக்காக, ராட்சத உயரத்தில் மூன்று வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். இவை தவிர, வீட்டு வாசலில் கூர்க்காவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்.

நமீதா, காலையில் படப்பிடிப்புக்கு சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவார். அவர் இப்போது, `இந்திர விழா' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய நமீதா, படுக்கை அறையில் உள்ள `ஏர்கண்டிஷன்' மிஷினை `ஆன்' செய்தார். சீராக ஓடிக்கொண்டிருந்த `ஏர்கண்டிஷன்' மிஷினில், திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. படுக்கை அறை முழுவதும் ஒரே புகையாக இருந்தது.நமீதா, ``தீ...தீ...'' என்று அலற ஆரம்பித்தார். வேலைக்காரர்கள் ஓடிவந்து, மின்சார இணைப்பை முதலில் துண்டித்தார்கள்.

பின்னர் ஏர்கண்டிஷன் மிஷின் மீது தண்ணீரை கொட்டி, தீயை அணைத்தார்கள். அதிர்ஷ்டவசமாக, ஒரு பெரும் தீ விபத்தில் இருந்து நமீதா தப்பினார்

'ஏர்கண்டிஷன்' இல்லாததால், நமீதாவினால் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டதாக, அவர் கூறினார்.

(நன்றி-தினத்தந்தி)

http://www.dailythanthi.com/article.asp?NewsID=409791&disdate=4/30/2008

IPL கிரிக்கெட் : மும்பை அணிக்கு முதல் வெற்றி.

IPL கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அ‌ணியை 7 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றியை கண்டது. IPL 20 ஓவர் கிரிக்கெட்டில் 16-வது ஆட்டம் நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி‌த் தலைவ‌ர் கங்கூலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மெக்கல்லமும், கங்கூலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக கள‌ம் இற‌ங்‌கின‌ர். முதல் ஓவரிலேயே கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொல்லாக் வீசிய 3-வது பந்தில் கங்குலி 4 ரன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். இவரது ‌வி‌க்கெ‌ட்டை பொ‌ல்லா‌க் கை‌ப்ப‌ற்‌றினா‌ர். அடுத்த 2வது பந்தில் அதிரடி ‌வீர‌ர் மெக்கல்லம் 1 ரன்‌னி‌ல் பெ‌வி‌லிய‌ன் ‌திரு‌ம்‌பினா‌ர். இ‌ந்த ‌வி‌க்கெ‌ட்டையு‌ம் பொ‌ல்லா‌க் எல்.பி.டபிள்யூ முறை‌யி‌ல் கை‌ப்ப‌ற்‌றினா‌ர்.

‌பி‌ன்ன‌ர் வ‌ந்த தாஸ் (29), டேவிட் ஹஸ்ஸி (17) டி‌க்‌கி பா‌ண்டி‌ங் (19) ஆ‌கியோ‌ர் சொ‌ற் ர‌ன்‌க‌ளி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் சரிந்தாலும், லட்சுமி ரத்தன் சுக்லா கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியதால் கொல்கத்தா அணி 100 ரன்களை கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. சுக்லா 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஜெயசூ‌ர்யா அபாரமாக ப‌ந்து ‌‌வீ‌‌சி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌ற்‌றினா‌ர். இவ‌ர் 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 14 ரன்கள் விட்டு கொடுத்தா‌ர்.

138 ர‌ன்க‌‌ள் எடு‌த்தா‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குடன‌் மு‌ம்பை அ‌ணி கள‌ம் இற‌ங்‌கியது. ஆனா‌ல் அ‌ந்த அ‌ணி‌க்கு அ‌தி‌ர்‌ச்‌சி கா‌த்‌திரு‌ந்தது. 25 ரன்களுக்குள் 3 பேர் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர். 4-வது விக்கெட்டுக்கு உத்தப்பாவும், பிராவோவும் இணை சே‌ர்‌ந்து அ‌ணியை வெ‌ற்‌றி பாதை‌க்கு அழை‌த்து செ‌ன்றன‌ர். 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மு‌ம்பை அ‌ணி அபார வெற்றி பெற்றது.

பிராவோ 53 ப‌ந்துக‌ளி‌ல் 64 ரன்க‌ளுடனு‌ம், உத்தப்பா 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆ‌ட்ட நாயகனாக ஜெயசூர்யா தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

தொடர்ச்சியாக 4 தோல்விக‌ள் அடைந்த மும்பை அணிக்கு இது முத‌ல் வெற்றியாகும். கொல்கத்தா அணி‌க்கு இது 2-வது தோல்வியாகும்.

பாசுமதி அரிசிக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு.

நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பாசுமதி அரிசிக்கு வரி விதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.ஒரு டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இனி நூறு டாலர் வரி கட்ட வேண்டும்.

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது கருத்தப்படுகிறது

மத்திய அரசு, பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்யவும், பருப்புக்களை ஏற்றுமதி செய்யவும் ஏற்கனவே தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியட்நாமில் ஒலிம்பிக் ஜோதி

பலத்த பாதுகாப்புக்கு இடையே ஒலிம்பிக் ஜோதி வியட்நாம் தலைநகர் வந்தடைந்தது. பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக் ஜோதி வடகொரியாவிலிருந்து இன்று வியட்நாம் வந்தடைந்தது. பலத்த பாதுகாப்புக்கு இடையே வியட்நாம் தலைநகரை ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது. ஏராளமான பொதுமக்கள், வியட்நாம் மற்றும் சீன தேசியக் கொடிகளை கையில் ஏந்தியபடி விமான நிலையத்தில் ஒலிம்பிக் ஜோதியை வரவேற்றனர். தலைநகரில் இன்று ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. ஒலிம்பிக் ஜோதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Free Blog CounterLG