Thursday, May 8, 2008

tamilnadu +2 results websites

Govt sites:
http://tnresults.nic.in/
http://dge3.tn.nic.in/
http://results.nic.in/

Private websites:
http://results.sify.com/
http://squarebrothers.com/
http://chennaionline.com/


SMS 'HSC' Rollno´ to 54545
for Tamil Nadu +2 Results 2008
(warning: people may steal your mobile no for spamming)

We also arranged to publish tamil nadu +2 results from this blog at http://udanadi.blogspot.com

இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டிவிபத்து - எல்காட் உமாசங்கர் போலிஸில் புகார்

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளவேடு கிராமத்தில் கடந்த 22.03.2008 அன்றைய நிகழ்வொன்றில் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி ஒன்றினால் விபத்து ஏற்பட்டு 11 வயது சிறுமி ஒருவர் பலியானதாக காவல் துறை தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதேபோல் 15.04.2008 அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள நலகுண்டா என்கிற ஊரிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.

இதுதொடர்பாக காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கைக்கு முன் தீர விசாரிக்கவில்லை என எல்காட் மேலான்மை இயக்குனர் திரு உமாசங்கர் காவல் துறை டிஐஜிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அதில் முதல் சம்பவத்தின் போது, சிறுமியின் அருகில் தற்கொலை அல்லது கொலை நடந்ததற்கான புகைப்பட ஆதாரம் இருப்பதாகவும், (அதனை டிஐஜிக்கு அனுப்பியுள்ளார்) இறந்த உடலுக்கருகில் மண்ணெண்ணெய் மற்றும் மூன்று தீக்குச்சிகள் அருகில் இருந்ததற்கான அடையாளம் அதில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலவச தொலைக்காட்சி பெறும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற தீய எண்ணத்துடன் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சம்பவம் ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தொலைக்காட்சியில் உள்ள சிஆர்டி மானிட்டர் இதுவரை இதுபோன்று வெடித்தாக தகவல் இல்லை. அரசின் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில் வீடியோகான், மற்றும் சாம்டெல் நிறுவனங்களின் சிஆர்டி மானிட்டர்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன, அத்துடன் 290வோல்ட்கள் வரை மின்சாரம் செலுத்தலாமென்றாலும் இந்த சம்பவத்திற்குப் பிறகு சென்னை ஐஐடியில் நடத்திய சோதனையின் போது 5000 வோல்ட்கள் வரை மின்சாரம் செலுத்தி சோதிக்கப்பட்டது. ஆனால் தொலைக்காட்சி பெட்டி வெடிக்கவில்லை. மாறாக பியூஸ் மட்டுமே போனது. ஆகையால் அந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும்.

காவல்துறை ஐஜி திரு ஜெயினுக்கு அனுப்பிய மனுவில் இவ்வாறு திரு உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

ஷோயப் அக்தர் IPL போட்டிகளில் விளையாட அனுமதி.

ஷோயப் அக்தர் மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டதன் மூலம் அக்தர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட அனுமதி கிடைத்துள்ளது.


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரஃப் தன்னிடம் தொகை ஒன்றை கேட்டதாக அக்தர் கூறியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் முன்னணி அரசியல் தலைவர் ஒருவர் வீட்டில் நடந்த விருந்து ஒன்றில் ஷோயப் அக்தருக்கும், பாகிஸ்தான் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரஃபிற்கும் சமரசம் ஏற்பட்டது. இதனையடுத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார் நஸீம் . இந்த சந்திப்பின் போது அக்தர் தன் செயலுக்காக நஸீம் அஷ்ரஃபிடம் மன்னிப்பு கேட்டார்.

5 ஆண்டுகால தடை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாட ஷோயப் அக்தர் டெல்லி வந்து சேர்ந்துள்ளார். இருப்பினும் ஷோயப் அக்தர் மீதான 5 ஆண்டுகால தடை வழக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலம்பிட்டி பாலத்தைக் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு.

இலங்கையின் வட மேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பாலம்பிட்டியில் உள்ள பாலம் ஒன்றினை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இந்தப் பகுதியில், விடுதலைப் புலிகளுடன் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற மோதல்களின்போது, முன்னேறிச் சென்ற படையினருக்கு ஆதரவாக, இலங்கை விமானப்படையினர் பாலம்பிட்டி பாலத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் தளம் ஒன்றின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.

நன்றி : பிபிசி.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

பிளஸ் 2 தே‌ர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.தமிழக‌ம், புதுச்சேரியில் கட‌ந்த மா‌ர்‌ச் 3ஆ‌ம் தே‌தி பிளஸ் 2 தேர்வுக‌ள் தொட‌ங்‌கி மார்ச் 24ஆ‌ம் தேதி முடிவடைந்தது. 1,600 தேர்வு மையங்களில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 245 மாணவ‌ர்க‌ள் தே‌ர்வு எழுதின‌ர்.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 135 தேர்வு மையங்களில் 45,891 மாணவ‌ர்க‌ள் தேர்வு எழுதினா‌ர். இந்த ஆ‌ண்டு பு‌திதாக வினாக்களை படித்துப் பார்க்க தனியாக 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 9ஆ‌ம் தேதி காலை வெளியிடப்படும்' என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆ‌ண்டை ‌பிளஸ்2 தேர்வு முடிவு மே 14ஆ‌ம் தேதி வெளியிடப்பட்டது. ஆன‌ா‌ல் இ‌ந்த 5 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நாளை காலை 9 ம‌ணி‌க்கு தேர்வு முடிவு வெளியிடப்படும் அதே நேரத்தில் பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
.

Free Blog CounterLG