Thursday, May 8, 2008

இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டிவிபத்து - எல்காட் உமாசங்கர் போலிஸில் புகார்

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளவேடு கிராமத்தில் கடந்த 22.03.2008 அன்றைய நிகழ்வொன்றில் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி ஒன்றினால் விபத்து ஏற்பட்டு 11 வயது சிறுமி ஒருவர் பலியானதாக காவல் துறை தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதேபோல் 15.04.2008 அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள நலகுண்டா என்கிற ஊரிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.

இதுதொடர்பாக காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கைக்கு முன் தீர விசாரிக்கவில்லை என எல்காட் மேலான்மை இயக்குனர் திரு உமாசங்கர் காவல் துறை டிஐஜிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அதில் முதல் சம்பவத்தின் போது, சிறுமியின் அருகில் தற்கொலை அல்லது கொலை நடந்ததற்கான புகைப்பட ஆதாரம் இருப்பதாகவும், (அதனை டிஐஜிக்கு அனுப்பியுள்ளார்) இறந்த உடலுக்கருகில் மண்ணெண்ணெய் மற்றும் மூன்று தீக்குச்சிகள் அருகில் இருந்ததற்கான அடையாளம் அதில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலவச தொலைக்காட்சி பெறும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற தீய எண்ணத்துடன் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சம்பவம் ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தொலைக்காட்சியில் உள்ள சிஆர்டி மானிட்டர் இதுவரை இதுபோன்று வெடித்தாக தகவல் இல்லை. அரசின் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில் வீடியோகான், மற்றும் சாம்டெல் நிறுவனங்களின் சிஆர்டி மானிட்டர்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன, அத்துடன் 290வோல்ட்கள் வரை மின்சாரம் செலுத்தலாமென்றாலும் இந்த சம்பவத்திற்குப் பிறகு சென்னை ஐஐடியில் நடத்திய சோதனையின் போது 5000 வோல்ட்கள் வரை மின்சாரம் செலுத்தி சோதிக்கப்பட்டது. ஆனால் தொலைக்காட்சி பெட்டி வெடிக்கவில்லை. மாறாக பியூஸ் மட்டுமே போனது. ஆகையால் அந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும்.

காவல்துறை ஐஜி திரு ஜெயினுக்கு அனுப்பிய மனுவில் இவ்வாறு திரு உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Free Blog CounterLG