மே 2008 ல் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் உலகெங்கும் திரைக்கு வர இருக்கும் கமலின் தசாவதாரம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை பிரபல நடிகர் அமிதாப் பச்சன் பார்த்தார்.
கமலின் பத்து வேடங்களை பார்த்து பிரமித்த அவர் கமலால் மட்டுமே இதுபோன்ற பன்முக காட்சிகளில் நடிக்க இயலும் என்று கூறினார். கமல் இந்தியாவின் சினிமா துறைக்கு முன்னோடியாக திகழ்வதாக பாராட்டுத் தெரிவித்தார்.
Sunday, April 27, 2008
கமல் கலைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவல்லவர் - அமிதாப் பச்சன் புகழாரம்
Posted by udanadi at 4/27/2008 11:52:00 PM 0 comments
Labels: அமிதாப் பச்சன், கமல், சினிமா, தசாவதாரம்
24 ஆண்டுகள் தந்தையுடன் குடும்பம், 7 குழந்தைகள்
ஆஸ்திரியா நாட்டில் 24 ஆண்டுகள் வீட்டின் கீழ்பகுதியில் பூட்டி வைக்கப்பட்டு தனது மகள் எலிசபத் (வயது 42) உடன் உடலுறவு கொண்டு துன்புறுத்தினார் தந்தை ஜோசப் (வயது 73).
இவர் 11 வயதிறுக்கும் போது கைகளை கட்டி வீட்டின் பேஸ்மன்டில் அடைக்கப்பட்டார். கடந்த 24 ஆண்டுகளில் 7 குழந்தைகளை பெற்ற அவர், அதில் இரட்டை குழந்தைகளில் ஒன்று பிரசவ கோளாறு காரணமாக இறந்தது. ஐந்திலிருந்து இருபது வயதுகளில் மற்ற ஆறு குழந்தைகளில் மூவர் பெண் குழந்தைகள், மூவர் ஆண்மக்கள். இதில் மூன்று பேர் முன்பு அவரிடமிருந்து தப்பித்து விட்டனர். மற்ற மூவரும் தாயுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்குத் தேவையான உணவும், உடைகளும் மட்டும் கொடுத்து வந்தார்.
மூத்த பெண் 19 வயது உடையவருக்கு கடும் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அதில் சந்தேகத்தின் பேரில் தாய் பற்றி விசாரிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இதுபற்றிய செய்தி அறிந்ததும் ஆஸ்திரிய மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Posted by udanadi at 4/27/2008 11:06:00 PM 0 comments
Labels: ஆஸ்திரியா, உலகம், கொடுமை, வீட்டுக்காவல், ஜோசப்
மிட்டல் ஐரோப்பாவின் முதல் பணக்காரர்
இலண்டனிலிந்து வெளிவரும் சன்டே டைம்ஸ் பத்திரிக்கை ஐரோப்பாவின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்ற ஆண்டு 2007 ல் 8 பில்லியன் பவுன்ட் சொத்து மதிப்புடன் இருந்த லஷ்மி மிட்டல் குடும்பம் தற்போது 27.7 பில்லியனுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஐரோப்பாவின் முதல் பணக்காரர்களின் பட்டியலில் உள்ளது.
முதல் ஆயிரம் பேர்களில் கணக்கிடப்பட்டவற்றில் சென்ற ஆண்டு 53 பில்லியன் பவுன்ட்களிலிருந்து 412.8 பில்லியன் உயர்ந்துள்ளது.
இன்னும் முதல் 75 பேரில் 40 பேர் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு குடியேறி என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பத்து பணக்காரர்களின் பட்டியல்
Posted by udanadi at 4/27/2008 10:35:00 PM 0 comments
Labels: உலகம், ஐரோப்பா, பணக்காரர்களின் பட்டியல், லஷ்மி மிட்டல்
சவுதி வலைப்பதிவர் விடுதலை
சவுதி அரசிற்கு எதிரான கருத்துக்களை எழுதியதற்காக கைது செய்யப்பட்ட வலைப்பதிவர் சவூத் அல் பர்ஹான் நான்கு மாத சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
தண்டனைக்கான காரணம் இதுவரை சொல்லப்படவில்லை.
Posted by udanadi at 4/27/2008 09:42:00 PM 0 comments
Labels: சவுதி அரேபியா, வலைப்பதிவர்
நயன்தாரா குமுறல்
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நட்சத்திர தூதுவராக விஜய் மற்றும் நயன்தாரா நியமிக்கப்பட்டிருந்தனர்.
சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் துவக்கவிழாவில் விஜய் மட்டும் கலந்துகொண்டார். நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. இதனால் வருத்தமுற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள்அவரை நட்சத்திர தூதுவர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது.
இதுபற்றி நயன்தாரா கூறும்பொழுது, அனைத்துப்போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒப்பந்தம் செய்யவில்லை, 7 போட்டிகளில் மூன்றில் மட்டும் கலந்து கொண்டால் போதும் என்று தான் சொன்னார்கள்.
போட்டி நடைபெற்ற அதே நேரம் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கி கீழே விழுந்து விட்டேன், ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால் சென்னையில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ள இயலவில்லை. அதே சமயம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போட்டி எத்தனை மணிக்கு என்று கேட்டேன். 8 மணிக்கு என்று சொன்னார்கள். போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டுமா என்று கேட்டேன். இப்பொழுது வேண்டாம் மற்ற போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.
இப்படியிருக்க என்னுடைய மானேஜருக்கு கூட தெரிவிக்காமல் என்னை தூதுவர் பதிவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.
நான் உடல் நலக்குறைவுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படதற்கான ஆவனங்கள், மருத்துவர்களின் சான்றுகள் என்னிடம் உள்ளன, இந்த நீக்கலுக்கு பின்னனி உள்ளது என்று காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.
Posted by udanadi at 4/27/2008 03:04:00 PM 0 comments
Labels: IPL, கிரிக்கெட், சென்னை, நயன்தாரா
இரானுவ முகாம்கள் மீது புலிகள் வான்வெளித்தாக்குதல்
இலங்கையில் கடந்த ஒருவாரமாக நடைபெற்றுவரும் போரில் இலங்கை இரானுவத்திற்கு கடும் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 26 பேர் கொள்ளப்பட்டதற்கு சந்தேகத்தின் பேரில் 9 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
மணலாறு (வெளியோலா) பகுதியில் இலங்கை இரானுவம் நேற்று இரவு வான்வெளித்தாக்குதல் நடாத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலைப்புலிகளின் இரண்டு இலகு ரக வானூர்திகள் இரானுவ முகாம்கள் மீது மூன்று குண்டுகள் வீசினர். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை.
கொழும்பு பேருந்து குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மேலும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடைபெறலாம் என இரானுவம் மக்களை எச்சரித்துள்ளது.
இலங்கை இரானுவத்திற்கெதிரான விடுதலைப்புலிகளின் ஐந்தாவது வான்வெளித்தாக்குதல் இது என்பது குறிப்படத்தக்கது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போர் 1996 க்குப்பின் அதிக உயிரிழப்புகள் கொண்டதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
Posted by udanadi at 4/27/2008 01:55:00 PM 0 comments
Labels: இலங்கை, கொழும்பு, மணலாறு, விடுதலைப்புலிகள், வெளியோலா
தலிபான் தாக்குதல்: கர்சாய் உயிர் தப்பினார்
16 ஆண்டுகளுக்குமுன் ஆப்கானிலிருந்து முஜாகித்களால் ரஷ்யப்படைகள் விரட்டப்பட்டதின் நினைவுதினத்தையொட்டி இராணுவ அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த அணிவகுப்பில் ஆப்கான் ஜனாதிபதி கர்சாய், அமெரிக்க, ஐக்கிய இராஜ்ஜிய தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்பொழுது மறைந்திருந்த ஆப்கான் தீவிரவாதிகள் தேசிய கீதம் பாடும் பொழுது துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு பாராளுமன்ற உறுப்பனர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக காயங்களின்றி கர்சாய் உயிர் தப்பினார்.
இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதலில் ஆறு பேர் பங்கு பெற்றதாகவும் அதில் மூன்றுபேர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் தப்பித்ததாகவுகம் தெரிவித்துள்ளனர்.
Posted by udanadi at 4/27/2008 01:44:00 PM 0 comments
வயலார் ரவி தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்
வயலார் ரவி தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் வயலார் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
அக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் சோனியா காந்தி இதற்கான அறிவிப்பைத் தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நிறைய சிக்கல்கள் இருக்கும் நிலையில், ஒரு முறை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள அருண்குமார் போன்ற மேலிடப் பார்வையாளரால், பிரச்னைகளை திறமையாகக் கையாள முடியாது என்று ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் சோனியாவிடம் கூறிவந்தனர்.
மூத்த தலைவர் ஒருவரை பொறுப்பில் அமர்த்தினால்தான், சிக்கல்களைத் திறமையாகச் சமாளிக்க முடியும் என்ற யோசனையை ஏற்று வயலார் ரவி நியமிக்கப்பட்டிருப்பதாகக் கட்சித் தலைவர்கள் சொல்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளராக ஆந்திரத்தைச் சேர்ந்த அருண்குமார் நியமிக்கப்பட்ட பிறகு பல முறை சென்னை வந்து சென்றுள்ளார். ஆனால், தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களாக உள்ள முதல்வர் கருணாநிதியை ஒருமுறை கூட அவர் சந்திக்கவில்லை.
இந் நிலையில் கருணாநிதியை திருப்திப்படுத்தும் வகையில், அருண்குமாருக்கும் மேலே ஒரு பதவியில் வயலார் ரவி நியமிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சியினர் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கியாக வேண்டும். எனவே, வயலார் ரவியின் நியமனம் தேர்தலுக்கு ஆயத்தமாகும் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது.
Posted by udanadi at 4/27/2008 01:01:00 AM 0 comments
Labels: ஒருங்கிணைப்பாளர், கருணாநிதி, காங்கிரஸ், ரவி, வயலார்
மதுரையில் பட்ட மேற்படிப்பு வேலைவாய்ப்பு அலுவலகக் கிளை: அமைச்சர் தா. மோ. அன்பரசன்
மதுரையில் பட்ட மேற்படிப்பு வேலைவாய்ப்பு அலுவலகக் கிளை: அமைச்சர் தா. மோ. அன்பரசன்
பட்ட மேற்படிப்பு படித்தவர்களின் வசதிக்காக தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகக் கிளை மதுரையில் அமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அறிவித்தார்.
பேரவையில் தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு விவரம்:-
""பட்ட மேற்படிப்பு, தொழிற்சார் கல்வி, நிர்வாகத் தகுதிக்கான பட்டம் பெற்றவர்கள் பதிவு செய்யவும், அவர்களை வேலைக்காக பரிந்துரை செய்யவும் மாநில அளவில் தொழில் - செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் தற்போது சென்னையில் செயல்பட்டு வருகிறது.
தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களின் துயர் துடைக்கும் வகையிலும் தென் மாவட்டங்களில் உள்ள மனுதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மதுரையில் கிளை அலுவலகம் தொடங்கப்படும்.
வேலைவாய்ப்பு புதுப்பித்தல் சலுகை: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவினைப் புதுப்பிக்க வேண்டும். 2006-ம் ஆண்டு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பு புதுப்பித்தல் சலுகை அளிக்கப்பட்டது.
இப் புதுப்பித்தல் சலுகை மூலம் 35,826 பேர் பலன் அடைந்தனர். இச் சலுகை காரணமாக 2001-06-ம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் மொத்தம் 3,80,138 பேர் பலன் அடைந்தனர்.
தற்போது 2007-ம் ஆண்டுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை மீண்டும் வழங்கப்படும். இதனால் சுமார் 40,000 மனுதாரர்கள் பலன் அடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரொக்கப் பரிசு உயர்வு: அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு தற்போது நல்லாசிரியர் விருதுடன் அளிக்கப்படும் ரொக்கப் பரிசுத் தொகை ரூ.500-லிருந்து ரூ.1,000-மாக உயர்த்தப்படும்.
கட்டுமான கலைக்கழகம்: தமிழகத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கட்டுமானத் தொழிலாளர்களின் திறனை அதிகரிக்கவும் மனித வளத்தை மேம்படுத்தவும் கட்டுமான கலைக்கழகம் நிறுவப்படும்.
ஏழு இடங்களில் இஎஸ்ஐ திட்டம்: தற்போதுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருந்தகங்கள் மூலம் ஏழு புதிய பகுதிகளுக்கு இத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
கம்பம் நகராட்சி, முத்தல்லாபுரம் (தூத்துக்குடி), புதுக்கோட்டை கிராமம் (தூத்துக்குடி), சின்னமனூர் (தேனி), நாகர்கோயில் (புறநகர்), கன்னியாகுமரி (நகரம்) மற்றும் உத்தமபாளையம் நகராட்சி (தேனி).
சித்த மருத்துவப் பிரிவு: இஎஸ்ஐ நிறுவனத்தின் ஒப்புதலுடன் சிவகாசி, ஓசூர், திருச்சியில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்படும்.
கோவை, மதுரை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் யோகா பிரிவு தொடங்கப்படும்'' என்றார் அமைச்சர் தா. மோ. அன்பரசன்.
Posted by udanadi at 4/27/2008 12:57:00 AM 0 comments
Labels: அன்பரசன், ஒப்புதல், தொழிலாளர், மதுரை, வேலைவாய்ப்பு
207 தமிழ் அர்ச்சகர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்
தமிழக திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வகையில் 207 அர்ச்சகர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் கூறினார்.
இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வரும் ஜூன் மாதம் முடிந்து விடும். அதன் பிறகு அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
ஒரு கால பூஜை: தமிழகத்தில் தற்போது 10,947 திருக்கோயில்களில் ஒரு கால பூஜைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒரு கால பூஜை நடத்த நிதி தேவைப்படும் மீதி உள்ள கோயில்களின் எண்ணிக்கை 1,567 மட்டுமே. இந்த 1,567 திருக்கோயில்களும் இந்த ஆண்டிலேயே ரூ.4 கோடியில் இத் திட்டத்தில் கொண்டுவரப்படும். இதையடுத்து ஒருகால பூஜைகூட இல்லாத திருக்கோயில்கள் எதுவும் இல்லை என்ற வரலாறு உருவாக்கப்படும்'' என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.
Posted by udanadi at 4/27/2008 12:54:00 AM 0 comments
207 தமிழ் அர்ச்சகர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்
207 தமிழ் அர்ச்சகர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்
தமிழக திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வகையில் 207 அர்ச்சகர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் கூறினார்.
பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்துக்கு அமைச்சர் பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக கூறியதாவது:-
""திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏதுவாக 207 அர்ச்சகர்களுக்கு தற்போது ஆறு பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 பேர், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 பேர் இப் பயிற்சியில் அடங்குவர்.
இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வரும் ஜூன் மாதம் முடிந்து விடும். அதன் பிறகு அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
14 கோயில்களுக்கு தங்கத் தேர்: தமிழகத்தில் இந்த நிதியாண்டில் 14 கோயில்களுக்கு தங்கத் தேர் செய்யும் பணி முடிவடையும். கடந்த நிதியாண்டில் மயிலை முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில் உள்பட மொத்தம் 8 கோயில்களில் தங்கத் தேர் செய்து தங்கரத உலா நடத்தப்பட்டது.
ஒரு கால பூஜை: தமிழகத்தில் தற்போது 10,947 திருக்கோயில்களில் ஒரு கால பூஜைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒரு கால பூஜை நடத்த நிதி தேவைப்படும் மீதி உள்ள கோயில்களின் எண்ணிக்கை 1,567 மட்டுமே. இந்த 1,567 திருக்கோயில்களும் இந்த ஆண்டிலேயே ரூ.4 கோடியில் இத் திட்டத்தில் கொண்டுவரப்படும். இதையடுத்து ஒருகால பூஜைகூட இல்லாத திருக்கோயில்கள் எதுவும் இல்லை என்ற வரலாறு உருவாக்கப்படும்'' என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.
Posted by udanadi at 4/27/2008 12:54:00 AM 0 comments
முதல்வரின் பாராட்டு மழையில் ஜாக்கிசான்!
ஜாக்கிசானின் சிறப்புகளைக் கூறி முதல்வர் கருணாநிதி வெகுவாகப் பாராட்டினார்.
முதலில் ஜாக்கிசானையும், கமல்ஹாசனுக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமைகளை குறிப்பிட்டு முதல்வர் கருணாநிதி ஒப்பீடு செய்தார்.
ஜாக்கிசான் பிறந்த தேதி 7.11.1954.
கமல் தனது 6-வது வயதிலேயே "களத்தூர் கண்ணம்மா' படத்தில் நடிக்கத் தொடங்கியவர். ஜாக்கி சான் 8-ம் வயதில் "பிக் அண்ட் லிட்டில் வாக்' படத் தில் நடித்தவர்.
ஜாக்கிசான் 100 படங்களில் நடித்துள்ளார்.
கமலோ இதுவரை 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
உங்களது பெற்றோரை அவர்கள் உயிருடன் உள்ளபோதே வணங்கி விடுங்கள் என்று ஜாக்கி சான் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது என்னைக் கவர்ந்தது.
அவரை சூப்பர் ஹீரோ என்று உலகமே கூறுகின்றனர். ஆனாலும், நிஜமான ஹீரோக்களாக அவர் கருதுவது, தீயணைப்புப் படை வீரர்களைத்தான்!.
ரோட்டர்டாம் நகரில் "ஹூ ஆம் ஐ' படப்பிடிப் புக்காக 27 மாடிக் கட்டடத்தில் இருந்து குதித்து சாதனை புரிந்தவர் ஜாக்கிசான். எனது ஸ்டண்ட் குழுவினரை நான் குழந்தைகளைப் போலக் காப்பேன்.
அவர்களுக்கு எது நேர்ந்தாலும் நான்தான் பொறுப்பு. என்னால் சாதிக்க முடியாததையெல்லாம் அவர்களை செய்யுமாறு நான் ஒருபோதும் சொன் னது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறுமையில் பிறந்த ஜாக்கிசான்: ஜாக்கிசான் பிறந்தபோது, மகப்பேறுக்கான மருத்துவச் செலவைக் கூட செலுத்த முடியாத நிலையில் அவரது பெற்றோர்கள் இருந்தனர்.
மகப்பேறு சிகிச்சை அளித்த பெண் டாக்டர், ஜாக்கிசானின் பெற்றோர்களிடம், "நீங்கள் மருத்துவக் கட்டணம் செலுத்த வேண்டாம்! எனக்கு குழந்தை இல்லை. எனவே, 1500 டாலர் தருகிறேன். என்னிடம் குழந்தையைக் கொடுத்து விடுங்கள்' என்றார்.
2 நாள்களுக்குப் பின் ஜாக்கிசானின் தந்தை, டாலர் தொகையை வாங்க மறுத்துவிட்டு குழந்தையை மட்டும் கொடுத்துச் சென்றார்.
அந்தக் குழந்தைதான் ஜாக்கிசான்! எதிர்பாராத விதமாக இதுபோன்ற அதிசயங்களால் உலகத்திற்கு கிடைத்த நன்மைகளில் ஒன்றுதான் ஜாக்கி சான்! என்றார் முதல்வர்.
முதல்வரின் பாராட்டை, புன்னகை மலர ஜாக்கி சான் பணிந்து ஏற்றுக்கொண்டார்.
Posted by udanadi at 4/27/2008 12:51:00 AM 1 comments
Labels: கமல், பாராட்டு, முதல்வர், ஜாக்கிசான்