Wednesday, May 7, 2008

தமிழ்மணத்திற்கு வேண்டுகோள்!!!

தமிழ் இணைய வாசகர்களுக்காக உலகின் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக உடனடி வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மிகவும் நேரிடையாக சொல்வதானால், முற்றிலும் தமிழ்மண வாசகர்களினூடே உடனடி செய்திகள் சென்றடைய வேண்டும், அல்லது அதனூடே(தமிழ்மணம்) எளிதாக சென்றடைய முடியும் என்றெண்ணி இந்த வலைப்பதிவு முயற்சியை மேற்கொண்டோம்.

இப்படியிருக்க தமிழ்மணம் தற்போது தன்னுடைய புதிய பதிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் செய்திக்கென்று தனிப்பிரிவை உறுவாக்கியிருக்கிறது. அதற்கு தமிழ்மணத்திற்கு நன்றிசொல்லும் அதேவேளையில் செய்தி வலைப்பதிவுகளிலிருந்து வரும் புதிய இடுகைகள் எல்லாப்பதிவுகளும் தெரியும் இடத்தில் (முகப்புப் பக்கத்தில்) செய்தி இடுகைகளும் தெரியும் வண்ணம் செய்திடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
உடனடி

கத்தோலிக்க இளைஞர்களை தொடர்பு கொள்ள போப்பின் புதிய அனுகுமுறை


வரும் ஜூலையில் உலக இளைஞர்கள் தினத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் போப் பெனிடிக் கத்தோலிக்க இளைஞர்களை கைப்பேசிகளின் குறுஞ்செய்திகளினூடே தொடர்புகொள்ள இருக்கிறார்.

இதற்கான ஏற்பாட்டை அவுஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான Telstra வழங்க இருக்கிறது இதற்காக ஏராளமான தன்னார்வ சேவையாளர்களை நியமித்து வருகிறது. சிட்னியில் ஆறு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வின் போது போப் இரண்டு இலட்சம் கத்தோலிக்க இளைஞர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிளில் இப்போது ஆங்கிலம்-இந்தி மொழி்பெயர்ப்புச் சேவை


உலகில் அதிகமானோர் உபயோகிக்கும் தேடுபொறிகளில் ஒன்றான கூகிள், பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச்சேவையை வழங்கி வருகிறது.

அண்மையில் கூகிளின் நிர்வனங்களில் ஒன்றான பிளாகர் தளத்தில் பல்வேறு இந்திய மொழிகளுக்கு ஆங்கிலத்திலிருந்து ஒலிபெயர்ப்புச் சேவையை (transliteration) வழங்கியது.

தற்போது இந்தி மொழிக்கு மொழிபெயர்ப்புச் சேவையை (translation) கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆங்கிலம் தட்டச்சிட்டு அதன் மொழியாக்கத்தை இந்தியில் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியைக்கொண்டு முழு இணையபக்கத்தையும் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கலத்திருக்கும் மாற்றிக்கொள்ளலாம்.

தமிழுக்கும் இத்தகைய சேவையை கூகிளிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

http://www.google.com/translate_t

இந்தியாவின் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி


ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிபூர் என்னும் இடத்திலிருந்து இன்று காலை 9.55 மணிக்கு அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சீனாவின் உள்ளே சென்று தாக்கும் சக்தி கொண்ட அக்னி-3 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடாத்தியது.

48 டன் எடையும், 16 மீட்டர் உயரமும் கொண்டதுமான அக்னி-3 ஏவுகணை, 1.5 டன் எடைகொண்ட அணுஆயுதங்களை தாங்கிக் கொண்டு தரையில் இருந்து புறப்பட்டு, 3000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தரையிலக்கைத் தாக்கக்கூடிய திறன் கொண்டதாகும்.

கடந்த 2006-ல் மேற்கொள்ளப்பட்ட அக்னி ஏவுகணை சோதனை தோ ல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தே தி நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை வெற்றி பெற்றது. இப்போது மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த அக்னி-3 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

DRDO வின் தனது ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் முகமாக இந்த சோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

5000 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய அக்னி 4 வகை ஏவுகனையையும் இந்தியா தயாரித்து வருகிறது. மேலும் நீர்மூழ்கி கப்பலிருந்து செல்லக்கூடிய அக்னி SL ஏவுகணையையும் விரைவில் இந்தியா சோதிக்க உள்ளது.

சேப்பாக்கத்தில் நமீதா.

சென்னையில் நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியை காண வந்த அரேபிய குதிரை நமீதா.

வாரணம் ஆயிரத்தில் சூர்யாவின் தோற்றம்.




வாரணம் ஆயிரம் திரைப்படத்துக்காக கட்டுடல் கொண்ட ஆணழகனாக தன்னை மாற்றிக்கொண்டு காட்சியளிக்கும் சூர்யா.

மியான்மரில் சாவு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

சமீபத்தில் மியான்மாரில் அடித்த நர்கீஸ் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22,000 பேர்களையும் கடந்து விட்டது என்றும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 41,000 பேர்கள் என்றும் அரசு தரப்பு செய்திகள் கூறுகின்றன. பெருத்த சேதத்திற்கு உள்ளான இர்ராவட்டி டெல்டா பகுதிக்கு உதவிப் பொருட்கள் விரைந்தவண்ணம் உள்ளன.வயல்கக‌ளி‌ல் பிணங்கள் நிறைந்து காணப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தப் புயல் தாக்குவதற்கு 48 மணி நேரம் முன்பு மியான்மாரை எச்சரிக்கை செய்ததாக இந்திய வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் குறித்த நேரத்தில் பலர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியவில்லை.இந்த புயல் நிவாரண உதவியில் ஈடுபட்டு வரும் ஒரு அமைப்பு, சாவு எண்ணிக்கை 50,000த்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்துள்ளது.

மியான்மாரின் ராணுவ ஆட்சி சர்வதேச உதவிகளை விரைவில் நாட்டிற்குள் அனுமதிக்குமாறும் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீட்புப் பணிகளுக்காக கப்பற்படை கப்பல்களை அனுப்பவும் தயார் என்று கூறியுள்ளார். முன்னதாக இந்தியா 2 போர்க்கப்பல்களில் அனுப்பிய மருத்துவ, உணவு மற்றும் உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இன்று மியான்மாரை சென்றடைந்து விடும் என்று தெரிகிறது.

Free Blog CounterLG