Wednesday, May 7, 2008

இந்தியாவின் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி


ஒரிஸ்ஸா மாநிலம் சண்டிபூர் என்னும் இடத்திலிருந்து இன்று காலை 9.55 மணிக்கு அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சீனாவின் உள்ளே சென்று தாக்கும் சக்தி கொண்ட அக்னி-3 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடாத்தியது.

48 டன் எடையும், 16 மீட்டர் உயரமும் கொண்டதுமான அக்னி-3 ஏவுகணை, 1.5 டன் எடைகொண்ட அணுஆயுதங்களை தாங்கிக் கொண்டு தரையில் இருந்து புறப்பட்டு, 3000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தரையிலக்கைத் தாக்கக்கூடிய திறன் கொண்டதாகும்.

கடந்த 2006-ல் மேற்கொள்ளப்பட்ட அக்னி ஏவுகணை சோதனை தோ ல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தே தி நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை வெற்றி பெற்றது. இப்போது மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த அக்னி-3 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

DRDO வின் தனது ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் முகமாக இந்த சோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

5000 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய அக்னி 4 வகை ஏவுகனையையும் இந்தியா தயாரித்து வருகிறது. மேலும் நீர்மூழ்கி கப்பலிருந்து செல்லக்கூடிய அக்னி SL ஏவுகணையையும் விரைவில் இந்தியா சோதிக்க உள்ளது.

0 comments:

Free Blog CounterLG