Friday, April 18, 2008

செப்டம்பரில் ஐபோன்

அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபோன் வருகிற செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. வோடோபோன் மூலம் சந்தைக்கு வர இருக்கிறது.
ஆரம்பத்தில் 8ஜிபி அளவுடன் அறிமுகமாகும் இதன் விலை ரூ 28000 வரை இருக்கம்.




ரஷ்ய அதிபர் புதின் இரண்டாவது திருமணம்?

ரஷ்ய அதிபர் புதின் 24 வயது விளையாட்டு வீராங்கனையை விரைவில் காதல் திருமணம் செய்யவுள்ளார்.

உலகளவில் வல்லரசு நாடாக திகழும் ரஷ்ய நாட்டு அதிபர் புதின் (56). இவரது மனைவி லுட்மில்லா (50). அமைதியாக வாழ்க்கை சக்கரத்தை சுழற்றியஇவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் அதிபர் புஷ் பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். 24 வயதான அலினா கபேவா மாடல் அழகியாகவும் உள்ளார். சூட்டைக் கிளப்பும் இவரது கவர்ச்சி போஸ்கள் அங்கு மிகவும் பிரபலம். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதிபர் புதினும், அலினா கபேவாவும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றிதிரிவதாக அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதிபர் புதினின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் வரும் ஜூன் மாதம் 2வது வாரத்தில் தனது காதலியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹஜ்:2008 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

அமைச்சர் இ.அஹமது பேட்டி
வரும் 2008ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம்விளக்கினார்.

இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் 'பச்சை' வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் வெள்ளை' வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி 'அசிசியா' பகுதி என்றும் குறிப்பிடப்படும். இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.

சென்னை பொது மருத்துவமனை விரிவாக்கம்.


சென்னை அரசு பொது மருத்துவமனையை மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது.

இதுகுறித்து முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் இன்று வெளியிட்ட அறிக்கையில், 165 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சென்னை அரசு பொது மருத்துவமனை தற்போது 30 ஏக்கரில் மட்டுமே செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டியுள்ளார்.

பொது மருத்துவமனையில் நிலவி வரும் இடப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பழைய மத்திய சிறைச்சாலை செயல்பட்டு வந்த இடத்தில் உள்ள 10 ஏக்கர் நிலத்தை மருத்துவமனை விரிவாக்கத்திற்கு பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார் கருணாநிதி.

இதேபோல் வட சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையும் 10 ஏக்கர் பரப்பளவில் மேலும் விரிவு செய்யப்படுகிறது. இதற்காக பொதுப்பணித்துறை இடம் ஒதுக்கப்படும் என்று கருணாநிதி தெரிவித்தார்.

சென்னையில் தாவரவியல் பூங்கா: சென்னை நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த உட்லேண்ட்ஸ் ஓட்டலை, நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப அரசு கையகப்பட்டுத்தி இருப்பதை குறிப்பிட்ட முதலமைச்சர் கருணாநிதி, அந்த இடத்தில் உலக தரம் வாய்ந்த வேளாண் தோட்டக்கலை பூங்கா (தாவரவியல் பூங்கா) அமைக்கப்படும் என்று தனது பதிலுரையில் தெரிவித்தார்.

நன்றி- MSN

ஐக்கிய அரபு நாட்டுக்கு புதிய தலைநகரம்.


துபாய், ஏப்.18-ஐக்கிய அரபு நாட்டின் தலைநகரான அபுதாபியில் மக்கள் நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருப்பதால், புதிய தலைநகரம் உருவாக்கப்பட இருக்கிறது. இப்போது உள்ள அபுதாபி நகருக்கு அருகில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த நகரம் உருவாக்கப்படஇருக்கிறது. 4900 ஹெக்டேரில் இந்த நகரம் அமைய இருக்கிறது. இதற்கு காலீபா (Khalifa City) என்று பெயர்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்த நகரில் 30 லட்சம் மக்கள் வசிக்க வகை செய்யப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும், துறை அலுவலகங்களும், அமைச்சரகங்களும், இந்த புதிய தலைநகரில் இருக்கும். அதோடு அனைத்து நாடுகளின் தூதரகங்களும் இங்கு இருக்கும். அலுவலகங்களுடன் மக்களின் குடியிருப்புகளும் இங்கு இருக்கும்.

இந்த தகவல்களை நகரமைப்பு கவுன்சில் டைரக்டர் பலா அல் அக்காபி தெரிவித்தார்.

Free Blog CounterLG