Friday, April 18, 2008

சென்னை பொது மருத்துவமனை விரிவாக்கம்.


சென்னை அரசு பொது மருத்துவமனையை மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது.

இதுகுறித்து முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் இன்று வெளியிட்ட அறிக்கையில், 165 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சென்னை அரசு பொது மருத்துவமனை தற்போது 30 ஏக்கரில் மட்டுமே செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டியுள்ளார்.

பொது மருத்துவமனையில் நிலவி வரும் இடப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பழைய மத்திய சிறைச்சாலை செயல்பட்டு வந்த இடத்தில் உள்ள 10 ஏக்கர் நிலத்தை மருத்துவமனை விரிவாக்கத்திற்கு பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார் கருணாநிதி.

இதேபோல் வட சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையும் 10 ஏக்கர் பரப்பளவில் மேலும் விரிவு செய்யப்படுகிறது. இதற்காக பொதுப்பணித்துறை இடம் ஒதுக்கப்படும் என்று கருணாநிதி தெரிவித்தார்.

சென்னையில் தாவரவியல் பூங்கா: சென்னை நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த உட்லேண்ட்ஸ் ஓட்டலை, நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப அரசு கையகப்பட்டுத்தி இருப்பதை குறிப்பிட்ட முதலமைச்சர் கருணாநிதி, அந்த இடத்தில் உலக தரம் வாய்ந்த வேளாண் தோட்டக்கலை பூங்கா (தாவரவியல் பூங்கா) அமைக்கப்படும் என்று தனது பதிலுரையில் தெரிவித்தார்.

நன்றி- MSN

0 comments:

Free Blog CounterLG