Monday, April 28, 2008

இஸ்ரேல் பீரங்கித்தாக்குதல் - 4 குழந்தைகள், தாய் பலி

இஸ்ரேலின் இரானுவத்தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் நான்கு பேரும் அவர்களுடைய தாயாரும் பலியானார்கள். இந்த சம்பவம் பாலஸ்தீனம் காஸா பகுதியில் நடந்தது. இந்த சம்பவத்தில் இறந்த குழந்தைகளின் வயது 15 மாதம், 3,4,6 வயது களாகும்.

ஆப்கானில் ஆஸ்திரேலியா வீரர் பலி


தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஆஸ்திரேலியா படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் ஆஸ்திரேலியா வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 27. அவருக்கு மனைவியும், 5 மாத பெண் குழந்தையும், 5வருட ஆண்குழந்தையும் உண்டு.

அவருடைய குடும்பத்தினருக்கு பிரதமர் கெவின் ருத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

2002 ஆப்கான் போரில் பங்கெடுத்த ஆஸ்திரேலியாவிற்கு இது ஐந்தாவது உயிரிழப்பாகும்.

ஹாக்கி: கேபிஎஸ் கில் நீக்கம்


இந்திய ஹாக்கி சம்மேளனம் கலைக்கப்பட்டது. அதன் தலைவர் பதவியிலிருந்து கே.பி.எஸ் கில் நீக்கப்பட்டார். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கல்மாடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கே.பி.எஸ் கில்லும் கலந்து கொண்டார்.

இப்பதவியில் அவர் தொடர்ந்து பதினைந்தாண்டுகள் இருந்துள்ளார். இதற்கு முன்பாக அவர் இந்திரா காந்தி படுகொலைகளின் போது பஞ்சாபில் காவல்துறை உயர் பொறுப்பில் இருந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க பாடுபட்டுள்ளார்.

சமீபத்தில் ஆஜ் தக் தொலைக்காட்சி விளையாட்டு வீரர் ஒருவருக்கு இந்திய ஹாக்கி அணியில் இடமளிக்கவேண்டுமென்று கோரி செகரட்டரி ஜோதி குமரனிடம் பேரம் பேசியது. பிறகு பணம் பெற்றுக்கொண்டு அவரை சீனியர் விளையாட்டு அணியில் சேர்த்துக்கொண்டார்.

ஊழல் புகாருக்குள்ளான ஜோதி குமரன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி சுரேஷ் கல்மாடி கருத்து தெரிவிக்கையில் 'ஜோதி குமரனிற்கு கிடைக்கப்பெற்ற அரிய சந்தர்ப்பம். இதனை பயன்படுத்தி தன்னை நிறுபராதி என்று நிறூபித்திருக்கலாம்' என்று தெரிவித்தார்.

2010ல் நடைபெற இருக்கும் உலக ஹாக்கி போட்டியில் இந்திய அணி திறமையை வளர்த்துக்கொள்ளாவிடில் தகுதியிழக்க நேரிடும் என்று சர்வதேச ஹாக்கி சம்மேளனம் எச்சரித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தேர்வில் 1928 க்குப் பிறகு முதன்முறையாக இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சரப்ஜித்தை தூக்கிலிடக்கூடாது - நவாஸ் சரீப்


இந்தியாவைச்சார்ந்த சரப்ஜித் சிங் தூக்குத்தண்டனை கைதியாக பாக்கிஸ்தானில் உள்ளார். தூக்கிலடப்படுவதற்கான காலக்கெடு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் சரீப் இதுபற்றி கூறுகையில் சரப்ஜித் சிங்கை தூக்கிலடக்கூடாது. அவரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும். விடுதலை செய்தப்பிறகு அவர் குற்றவாளி என்பது ஊர்ஜிதமானால் அவரை இந்தியா திருப்பித் அனுப்பவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவிக்கையில், மனித உரிமைகளுக்கான அமைச்சர் அன்சர் புருனே, சரப்ஜித் சிங்கின் விடுதலைக்கு நவாஸ் சரீப்பின் பேச்சு நல்ல முன்னேற்றமும் நம்பிக்கையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சந்தனக் கூடில் தகராறு: பாமக நிர்வாகி கைது

சந்தனக் கூடில் தகராறு: பாமக நிர்வாகி கைது

எலவனாசூர்கோட்டையில் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பாமக-திமுக பிரமுகர்களுக்கு இடையே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் பாமக நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். திமுக பிரமுகர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எலவனாசூர்கோட்டையில் உள்ள மசூதி ஒன்றில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாறுவேடப் போட்டியும் நடைபெற்றது.

இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாûஸ கொச்சைப்படுத்தும் விதத்தில் சிலர் பேசியதாக கூறி பாமகவினர் அந்த இடத்தில் ரகளை செய்தனர்.
இவர்களுக்கு எதிர்ப்பாக திமுகவினர் பிரச்னையில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையில் அந் நிகழ்ச்சி நடந்த இடத்தில் 4 டியூப் லைட்டுகள் உடைக்கப்பட்டன.

தெருவோரக் கடைகள் சிலவும் அடித்து நொறுக்கபப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாமக மாவட்ட துணைச் செயலர் ஜெகன் (எ) ஜெகநாதன், சுரேஷ் ஆகிய இருவரை போலீஸôர் கைது செய்தனர். பாமகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர்கள் சம்சத், அப்துல்ரஹீம் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்கேன் பண்ணும் போதுஎன்ஜினீயரிங் மாணவியை நிர்வாணமாக படம் பிடித்த டாக்டர்

ஸ்கேன் பண்ணும் போதுஎன்ஜினீயரிங் மாணவியை நிர்வாணமாக படம் பிடித்த டாக்டர்

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் கன்டுகுரு என்ற கிராமத்திற்கு என்ஜினீயரிங் (பி.டெக்) இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் தீராத வயிற்று வலிக்காக தனது உறவினருடன் சிகிச்சைக்காக வந்தார். அந்த மாணவியை மட்டும் `ஸ்கேன்' பண்ணுவதற்காக டாக்டர் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு ஸ்கேன் செய்யும்போது அந்த மாணவியை நிர்வாணமாக்கி, தனது அதி நவீன செல்போனில் வீடியோ எடுத்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, அலறியடித்தபடி ஸ்கேனிங் அறையை விட்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டு கதறி அழுதார். அதற்குள் அந்த டாக்டர் ஆஸ்பத்திரியை விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஒரு வங்கி அதிகாரியின் துரதிர்ஷ்டம்

ஒரு வங்கி அதிகாரியின் துரதிர்ஷ்டம்

இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்தவர் டான் ஹில். 32 வயதான இவர் லண்டனில் உள்ள வங்கியில் பெரிய அதிகாரியாக வேலை செய்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக அந்த வேலையில் இருந்த அவரது ஆண்டு வருமானம் 56 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால் அவர் வேலை ரொம்பவும் டென்ஷனானது. இதனால் அவர் அந்த வேலையை ராஜினாமா செய்தார். சும்மா இருக்கப்பிடிக்கவில்லை. அவருக்கு தச்சுவேலை தெரியும் என்பதால் அவர் கார்பெண்டர் வேலையை எடுத்துக்கொண்டார். மரத்தை வாங்கி அறுத்து மேஜை, நாற்காலி என்று மரப்பொருள்களை செய்ய தொடங்கினார்.

ஆனால் அவரை பிடித்த துர்திர்ஷ்டம், கார்பெண்டர் வேலையை தொடங்கிய பிறகு அவர் உடலில் தடிப்பும் அதில் அரிப்பும் ஏற்பட்டது. அவர் டாக்டரிடம் சென்று காட்டியபோது, அவர் இது ஒவ்வாமை நோய் என்றும் மரத்தூள் உங்களுக்கு ஆகவில்லை என்றும் கூறினார். இனிமேல் அவர் தச்சு வேலை செய்யக்கூடாது என்றும் டாக்டர் அவருக்கு தடை போட்டு விட்டார். இதனால் அவர் தச்சுவேலையை கைவிட வேண்டியதாகி விட்டது.

"வாழ்வின் உயரத்தை எட்டிப் பிடிப்போரின் ஏணிப் படிகள் புத்தகங்கள்': கவிஞர் தமிழச்சி

"வாழ்வின் உயரத்தை எட்டிப் பிடிப்போரின் ஏணிப் படிகள் புத்தகங்கள்': கவிஞர் தமிழச்சி

புத்தகங்கள் காலத்தின் இடைவெளியை நிரப்பும் பாலம். வாழ்வின் உயரங்களை எட்டிப்பிடித்த பலருக்கும் ஏணிப்படிகளாக புத்தகங்கள் இருந்துள்ளன என்று கவிஞர் தமிழச்சி பாண்டியன் கூறினார்.
உலக புத்தக தினத்தையொட்டி யுரேகா புக்ஸ், வளரும் வந்தவாசி மற்றும் யுரேகா கல்வி இயக்கம் ஆகியன இணைந்து வந்தவநாசியில் சனிக்கிழமை புத்தகக் கலைவிழா நடத்தின.

வளரும் வந்தவாசி தலைவர் அ.ஜ. இஷாக் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ந. கருணாமூர்த்தி, திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் அ. கணேஷ்குமார், நகராட்சித் தலைவர் க. சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. முருகேஷ் வரவேற்றார்.

விழாவில் பங்கேற்ற தமிழச்சி பாண்டியன், "சில புத்தகங்கள் வாழ்வை கண்ணாடி போல் நமக்கு படம் பிடித்து காட்டுபவை' என்றார்.
திரைப்பட இயக்குனர்கள் சீமான், கரு. பழனியப்பன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். யுரேகா கல்வி உதவித் தொகை திட்ட துணைத் தலைவர் அ. வெண்ணிலா நன்றி தெரிவித்தார்.

சினிமா வேறு; வாழ்க்கை வேறு: ரமேஷ்கண்ணா

சினிமா வேறு; வாழ்க்கை வேறு: ரமேஷ்கண்ணா

சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று திரைப்பட நடிகர் ரமேஷ்கண்ணா கூறினார்.

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் வேல்ஸ் வித்யாஸ்ரமம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற ரமேஷ்கண்ணா பேசியதாவது:

நான் பள்ளியில் படிக்கும்போது மேற்கூரையில் ஏராளமான ஓட்டைகள் இருக்கும். மழைக் காலத்தில் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிடுவார்கள்.
இப்பள்ளிக்கு நல்ல கட்டடங்கள் அமைந்துள்ளன. இங்கு படிப்பவர்கள் நாளை ஜனாதிபதியாக, பிரதமராக, நடிகராக வரலாம்.

நான் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் துணை இயக்குநராக சேர்ந்து, இயக்குநராகி தற்போது நடிகராகி உள்ளேன். இது படிப்படியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி.

ஒருநாள் என் மகன்களிடம் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று சொன்னேன். நடிகர் ரஜினிகாந்த் நடித்த படத்தை என் மனைவி மகன்களுக்குக் காட்டி, ரஜினி எப்படி அவருடைய தாயாரை வணங்குகிறார் பாருங்கள். இதுபோல் நீங்களும் தாயாரை வணங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இதற்கு என் மகன்கள் "சினிமா வேறு, வாழ்க்கை வேறு' என்று அவருக்கு பதில் அளித்தார்கள் என்று நகைச்சுவை ததும்பக் கூறினார் ரமேஷ்கண்ணா.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் ஆதவன்பிரகாஷ், பள்ளி செயலர் மகேஸ்வரி ஆதவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உடற்பயிற்சி பற்றி போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு எழுதிய புத்தகம்சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டார்

உடற்பயிற்சி பற்றி போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு எழுதிய புத்தகம்சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டார்

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி. சைலேந்திரபாபு உடற்பயிற்சியின் அவசியம் குறித்து `உடலினை உறுதி செய்' எனëற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். இதன் வெளியீட்டு விழா, சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

பல்கலைக்கழக குற்றவியல்துறை ஏற்பாடு செய்த இந்த விழாவில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.திருமலைச்சாமி பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து குற்றவியல் துறை தலைவர் பேராசிரியர் திலகராஜ், சைலேந்திரபாபுவின் பேராசிரியர் பெருமாள், நூலை வெளியிட்டுள்ள சுரா பதிப்பகத்தின் உரிமையாளர் சுப்புராஜ் ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.

சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் வாழ்த்திப் பேசும்போது, "உலக அளவில் இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், புற்றுநோயாளிகள் அதிகளவில் உள்ளனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இதுபோன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும். அத்தகைய நோய் தடுப்பு முறைகளை இந்த புத்தகம் தெளிவாக கூறுகிறது'' என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, நூலாசிரியர் சைலேந்திரபாபு பேசும்போது, "20 ஆண்டு காலமாக நான் கடைப்பிடித்து வரும் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி அனுபவத்தை இந்த புத்தகத்தில் கொடுத்திருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

பாரதீய ஜனதா கட்சி தலைவர்ராஜ்நாத்சிங் நாளை பசும்பொன் வருகை

பாரதீய ஜனதா கட்சி தலைவர்ராஜ்நாத்சிங் நாளை பசும்பொன் வருகை தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

அகிலஇந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலை வர் ராஜ்நாத்சிங் நாளை பசும்பொன் வரு கிறார். அங்கு தேவர் நினை விடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

நூற்றாண்டு விழா
தேசிய தலைவர்களில் ஒரு வரும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், ஆன்மிகவாதி யுமான பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் நூற் றாண்டு விழாவில் கலந்து கொள்ள அகில இந்திய பார தீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் நாளை (29-ந்தேதி) டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குவருகிறார்.பின்னர்அங்கிருந்து திருப்புவனம் வழியாக பசும்பொன் செல்கிறார். அவருக்கு திருப்புவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாநிலதுணைத்தலைவர் எச்.ராஜா, மாவட்ட தலைவர் சபேசன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநில பார்வையாளர் வக்கீல் சொக்கலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் குருநாக ராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் பால.ரவிராஜன், திருப்புவனம் ஒன்றிய தலைவர் பொன்முருகன், ஒன்றிய செய லாளர் மலையேந்திரன், ஒன் றிய அமைப்பாளர் சண்முக நாதன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் எம்.பி.யுடன் மாநில தலைவர் இல.கணேசன், அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பின ருமான சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் வீரணசாமி ஆகியோர் உடன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். மேற்கண்ட தகவலை பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.எல்.வி சி9 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

பி.எஸ்.எல்.வி } சி9 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

இன்று காலை 9.23 மணியளவில் பத்து செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.}சி9 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக் கோள்களை பூமியில் இருந்து புறப்பட்ட 16வது நிமிடத்தில் பிஸ்எல்வி விண்ணில் செலுத்தும்.

இந்த 10 செயற்கைக் கோள்களில் 2 இந்திய செயற்கைக் கோள்கள் மற்றும் 8 வெளிநாட்டு நானோ செயற்கைக் கோள்கள் ஆகும். ஒரே நேரத்தில் 10 செயற்கைக் கோள்களை அனுப்பியது சாதனையாக கருதப்படுகிறது.
இந்த செயற்கைக் கோள்களின் மொத்த எடை 824.5 கிலோவாகும். இதற்கு முன்னர் ரஷ்யா 300 கிலோ எடை கொண்ட 16 செயற்கைக் கோள்களை சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவியது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாதான் 10 செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்

தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் குறித்து தே.மு.தி.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மேலிட பார்வையாளர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
தேசிய முற்போக்கு திரா விட கழகம் சார்பில் பாரா ளுமன்ற தேர்தலுக்கு ஆயத்த மாகும் வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வரு கிறது. இதன்படி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர் தல் ஆலோசனை கூட்டம் மேலிட பார்வையாளரும், மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளருமான தட் சிணா மூர்த்தி தலைமையில் நடந்தது.

மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, மாவட்ட அமைப்பாளர் மணிமாறன், பொருளாளர் அழகுபால கிருஷ்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில மீன வரணி துணை செயலாளர் முருகநாதன் கலந்து கொண் டார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் முத்து காமாட்சி, நாகூர்கனி, ரவிக் குமார், கைகாட்டி ராஜன், நகர் செயலாளர்கள் ராமேசு வரம் மலைச்சாமி, கீழக்கரை மதிவாணன், பரமக்குடி கருப்பையா, ஒன்றிய செயலா ளர்கள் ராமநாதபுரம் கனி, கமுதி வேல்மயில் முருகன், ஆர்.எஸ்.மங்கலம் கணேசன், பரமக்குடி பூமிநாதன், போக லூர் விஜயகுமார், கடலாடி ரவிநாயகம், திருப்புல்லாணி மேகவர்ணம், திருவாடானை சேக் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவுரை

கூட்டத்தில் மேலிட பார் வையாளர் தட்சிணா மூர்த்தி பேசியபோது, "தலைவர் விஜயகாந்த் அறிவித்தபடி அனைத்து தொகுதிகளுக்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத் தப்பட்டு வருகிறது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து, யாரு டனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று விஜய காந்த் அறிவித்துள்ளார். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற கட்சியினர் பாடு பட வேண்டும்.'' என்றார்.
கூட்டத்தில் கட்சி நிர்வா கிகள் ராஜாமுகமது, முத்தீசு வரன், ஓவியர் சரவணன், கேப்டன் பேரவை இபுராகீம், கோவிந்தராஜ், நிïட்டன், இளைஞரணி ராமராஜ், மாணவரணி முனியசாமி, நாராயண மூர்த்தி, மகளி ரணி ஜான்சிராணி, செல்வி, முத்துக்கனி, தொழிற் சங்க நிர்வாகிகள் பொருள் பொன் னையா, ரஞ்சித்குமார், மூக் கையா, வடிவேல், அப்துல் ஹக்கீம், சண்முகம், நெசவா ளர் அணி நம்பு நாயகம், என்ஜினீயர் செந்தில் செல் வா னந்த், சிவந்தி ஹரிராம், விவசாய அணி முருகன், தொண்டரணி முனியசாமி, செய்தி தொடர்பாளர் மின் னல் கோபி, சிவக்குமார், அபி ராமம் ஆறுமுகம், வர்த்தக அணி நாதன், சாயல்குடி மாணிக்கவேல், முதுகுளத் தூர் இளமாறன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை கம்ப்யூட்டர் என்ஜினீயர் அமெரிக்காவில் தற்கொலை

சென்னை கம்ப்யூட்டர் என்ஜினீயர் அமெரிக்காவில் தற்கொலை


சென்னையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வேலை இழந்து, தங்க இடமும் இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.


சென்னையைச் சேர்ந்தவர் கணேஷ் சந்தானகிருஷ்ணன் (27) கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், 2005-ல் அமெரிக்கா சென்றுள்ளார்.


நியூஜெர்சியில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இவர், அண்மையில் அந்நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், ஆசினிங் என்ற இடத்தில் ஒரு கிடங்கில் தங்கியிருந்த அவர், அத்துமீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வாரம் சிறைவாசத்துக்குப் பின் மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஏப்ரல் 3-ம் தேதி தபன் ஸீ பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் அவரது குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்படுத்திய பின்னர், அவரது பெயரை அமெரிக்க போலீஸôர் சனிக்கிழமை அறிவித்தனர். கடந்த ஓராண்டாகவே அவர் சரியாக நடந்து கொள்ளவில்லை என அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகிலிருந்தவர்கள் தெரிவித்ததாக நியூஜெர்சி மாநில போலீஸ் விசாரணை அதிகாரி நோயல் நெல்சன் கூறினார்.

"டாஸ்மாக்' கடையை உடைத்து கொள்ளை முயற்சி

"டாஸ்மாக்' கடையை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னையை அடுத்த மணலியில் உள்ள "டாஸ்மாக்' கடையை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தைக் கொள்ளை அடிக்க முயற்சி நடந்தது.
மணலி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள "டாஸ்மாக்' மதுபானக் கடையை மேற்பார்வையாளர் தாமோதரன், சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு சென்றார். அன்றைய தினம் இரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றனர்.

அச்சமயத்தில் அவ்வழியே ரோந்து வந்த போலீஸ்காரர் சகாயராஜை பார்த்ததும் கொள்ளை கும்பல் தப்பி ஓட முயன்றது. கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் சகாயராஜை, ஷட்டர் கதவின் பூட்டால் தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கடையைத் திறந்து பார்த்தபோது ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் பத்திரமாக இருந்தது தெரியவந்தது. இதுபற்றி, மணலி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்டெய்னர் மோதி டாஸ்மாக் ஊழியர் சாவு:

ஆவடி குளக்கரை தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் வேதாச்சலம். திருவொற்றியூரில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடையின் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை ஆவடியில் இருந்து திருவொற்றியூருக்கு மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி, மாதவரம் போக்குவரத்து போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை: சோனியா அதிருப்தி

மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை: சோனியா அதிருப்தி

மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் பெர்ஹாம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோனியா பேசியதாவது:

நந்தி கிராமத்தில் இன்னமும் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் துன்பப்படுகின்றனர். நந்திகிராமத்தில் நிகழ்ந்தவை தவறானவை. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை.
மாநில மக்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலை நிலவுவது மிகவும் தவறானது.
சட்டம்-ஒழுங்கு நிலை சரியாகப் பராமரிக்கப்படவில்லை எனில் முழுவதுமே சீர்குலைந்து விடும். இது நிகழக்கூடாது.
எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும், அதை எதிர்த்துப் போராடுவதற்கு காங்கிரஸýக்கு உரிமை உள்ளது.

வகுப்புவாத சக்திகள் பதவியில் அமர்வதைத் தடுக்கவே மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், எந்த நிலையிலும் தனது கொள்கைகளை காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது.
பொதுமக்கள் நலனுக்காகவே குறைந்தபட்ச செயல்திட்டத்தின்படி காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. கட்சியின் எல்லா பிரிவினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். மத்திய அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சீனாவில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல் 66 பேர் பலி

சீனாவில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல் } 66 பேர் பலி

கிழக்கு சீனா பகுதியில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 66 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
பீஜிங்கில் இருந்து கின்டாகோ சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்த ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். மேலும் 247 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 70 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதே பாதையில் இதற்கு முன் ஜனவரி மாதம் நிகழ்ந்த விபத்தில் 18 பேர்
உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய நாடாளுமன்றம் கூடியது: 10 தமிழ் எம்.பி.க்கள் பதவியேற்பு

மலேசிய நாடாளுமன்றம் கூடியது: 10 தமிழ் எம்.பி.க்கள் பதவியேற்பு

கோலாலம்பூர், ஏப். 28: மலேசியாவில் 12-வது நாடாளுமன்றம் கூடியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழர்கள் 10 பேர் பதிய எம்.பி.க்களாகப் பதவியேற்றனர். மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் 10 தமிழர்கள் எம்.பி.க்களாவது இதுவே முதல் முறை.

மேலும் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றார். இதுவும் மலேசியாவில் முதல் முறை. மக்கள் நீதிக் கட்சித் தலைவி வான் அஸிஸô வான் இஸ்மாயில் எதிர்க்கட்சித் தலைவரானார்.

Free Blog CounterLG