உடற்பயிற்சி பற்றி போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு எழுதிய புத்தகம்சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டார்
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி. சைலேந்திரபாபு உடற்பயிற்சியின் அவசியம் குறித்து `உடலினை உறுதி செய்' எனëற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். இதன் வெளியீட்டு விழா, சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
பல்கலைக்கழக குற்றவியல்துறை ஏற்பாடு செய்த இந்த விழாவில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.திருமலைச்சாமி பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து குற்றவியல் துறை தலைவர் பேராசிரியர் திலகராஜ், சைலேந்திரபாபுவின் பேராசிரியர் பெருமாள், நூலை வெளியிட்டுள்ள சுரா பதிப்பகத்தின் உரிமையாளர் சுப்புராஜ் ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.
சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் வாழ்த்திப் பேசும்போது, "உலக அளவில் இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், புற்றுநோயாளிகள் அதிகளவில் உள்ளனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இதுபோன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும். அத்தகைய நோய் தடுப்பு முறைகளை இந்த புத்தகம் தெளிவாக கூறுகிறது'' என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, நூலாசிரியர் சைலேந்திரபாபு பேசும்போது, "20 ஆண்டு காலமாக நான் கடைப்பிடித்து வரும் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி அனுபவத்தை இந்த புத்தகத்தில் கொடுத்திருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment