மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை: சோனியா அதிருப்தி
மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் பெர்ஹாம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோனியா பேசியதாவது:
நந்தி கிராமத்தில் இன்னமும் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் துன்பப்படுகின்றனர். நந்திகிராமத்தில் நிகழ்ந்தவை தவறானவை. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை.
மாநில மக்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலை நிலவுவது மிகவும் தவறானது.
சட்டம்-ஒழுங்கு நிலை சரியாகப் பராமரிக்கப்படவில்லை எனில் முழுவதுமே சீர்குலைந்து விடும். இது நிகழக்கூடாது.
எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும், அதை எதிர்த்துப் போராடுவதற்கு காங்கிரஸýக்கு உரிமை உள்ளது.
வகுப்புவாத சக்திகள் பதவியில் அமர்வதைத் தடுக்கவே மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், எந்த நிலையிலும் தனது கொள்கைகளை காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது.
பொதுமக்கள் நலனுக்காகவே குறைந்தபட்ச செயல்திட்டத்தின்படி காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. கட்சியின் எல்லா பிரிவினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். மத்திய அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
Monday, April 28, 2008
மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை: சோனியா அதிருப்தி
Posted by udanadi at 4/28/2008 08:23:00 PM
Labels: அதிருப்தி, உரிமை, சோனியா, மேற்கு வங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment