Monday, April 28, 2008

சினிமா வேறு; வாழ்க்கை வேறு: ரமேஷ்கண்ணா

சினிமா வேறு; வாழ்க்கை வேறு: ரமேஷ்கண்ணா

சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று திரைப்பட நடிகர் ரமேஷ்கண்ணா கூறினார்.

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் வேல்ஸ் வித்யாஸ்ரமம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற ரமேஷ்கண்ணா பேசியதாவது:

நான் பள்ளியில் படிக்கும்போது மேற்கூரையில் ஏராளமான ஓட்டைகள் இருக்கும். மழைக் காலத்தில் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிடுவார்கள்.
இப்பள்ளிக்கு நல்ல கட்டடங்கள் அமைந்துள்ளன. இங்கு படிப்பவர்கள் நாளை ஜனாதிபதியாக, பிரதமராக, நடிகராக வரலாம்.

நான் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் துணை இயக்குநராக சேர்ந்து, இயக்குநராகி தற்போது நடிகராகி உள்ளேன். இது படிப்படியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி.

ஒருநாள் என் மகன்களிடம் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று சொன்னேன். நடிகர் ரஜினிகாந்த் நடித்த படத்தை என் மனைவி மகன்களுக்குக் காட்டி, ரஜினி எப்படி அவருடைய தாயாரை வணங்குகிறார் பாருங்கள். இதுபோல் நீங்களும் தாயாரை வணங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இதற்கு என் மகன்கள் "சினிமா வேறு, வாழ்க்கை வேறு' என்று அவருக்கு பதில் அளித்தார்கள் என்று நகைச்சுவை ததும்பக் கூறினார் ரமேஷ்கண்ணா.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் ஆதவன்பிரகாஷ், பள்ளி செயலர் மகேஸ்வரி ஆதவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments:

Free Blog CounterLG