Monday, April 28, 2008

ஹாக்கி: கேபிஎஸ் கில் நீக்கம்


இந்திய ஹாக்கி சம்மேளனம் கலைக்கப்பட்டது. அதன் தலைவர் பதவியிலிருந்து கே.பி.எஸ் கில் நீக்கப்பட்டார். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கல்மாடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கே.பி.எஸ் கில்லும் கலந்து கொண்டார்.

இப்பதவியில் அவர் தொடர்ந்து பதினைந்தாண்டுகள் இருந்துள்ளார். இதற்கு முன்பாக அவர் இந்திரா காந்தி படுகொலைகளின் போது பஞ்சாபில் காவல்துறை உயர் பொறுப்பில் இருந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க பாடுபட்டுள்ளார்.

சமீபத்தில் ஆஜ் தக் தொலைக்காட்சி விளையாட்டு வீரர் ஒருவருக்கு இந்திய ஹாக்கி அணியில் இடமளிக்கவேண்டுமென்று கோரி செகரட்டரி ஜோதி குமரனிடம் பேரம் பேசியது. பிறகு பணம் பெற்றுக்கொண்டு அவரை சீனியர் விளையாட்டு அணியில் சேர்த்துக்கொண்டார்.

ஊழல் புகாருக்குள்ளான ஜோதி குமரன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி சுரேஷ் கல்மாடி கருத்து தெரிவிக்கையில் 'ஜோதி குமரனிற்கு கிடைக்கப்பெற்ற அரிய சந்தர்ப்பம். இதனை பயன்படுத்தி தன்னை நிறுபராதி என்று நிறூபித்திருக்கலாம்' என்று தெரிவித்தார்.

2010ல் நடைபெற இருக்கும் உலக ஹாக்கி போட்டியில் இந்திய அணி திறமையை வளர்த்துக்கொள்ளாவிடில் தகுதியிழக்க நேரிடும் என்று சர்வதேச ஹாக்கி சம்மேளனம் எச்சரித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தேர்வில் 1928 க்குப் பிறகு முதன்முறையாக இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments:

Anonymous said...

முருகப்பா ஹாக்கி அரைஇறுதி ஏர் இந்தியாவை வீழ்த்துமா??

பலத்த எதிர்பார்பிற்கு இடையே முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியின் 2 அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது. ஆர்மி லெவன் & ஐ.ஓ.சி., ஏர் இந்தியா & ஐ.ஓ.பி. அணிகள் மோதுகின்றன.

Free Blog CounterLG