Thursday, April 24, 2008

இலண்டன் நான்கு இலட்சம் பேர் வேலை நிறுத்தம்

சம்பள உயர்வு, சம்பள பாக்கி போன்றவற்றை வலியுறுத்தி வியாழன் (24-04-2008) அன்று இலன்டன் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் சுமார் 8000 பள்ளிகள் ஒரு நாள் மூடப்பட்டன.

ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்ததிற்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டு இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததிறுந்தது. சம்பள பிரச்சினைக்காக ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் கடந்த இருபது ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

இது பற்றி பிரதமர் கருத்து தெரிவிக்கையில் பத்தாண்டுகளாக கல்விக்கு அதிக ஒதிக்கீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.

சாம்சுங் தலைவர் பதவி விலகினார்

தென் கொரிய நிறுவனமான சாம்சுங்கின் தலைவர் லீ குன் ஹீ பதவி விலகியுள்ளார். வரி ஏய்ப்பு, நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் அவர் மீது சாட்டப்பட்டுள்ளன. அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட ஒரு வாரத்தில் அவர் பதவி விலகியிருக்கிறார்.


செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தனது முடிவை அறிவித்தார். தென் கொரியாவின் ஊழல் ஒழிப்பு நிறுவனம் கடந்த மூன்று மாதங்கள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து லீ மீது குற்றம் சாட்டப்பட்டது. தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறிய லீ, நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தான் வருந்துவதாகக் கூறினார்.
அவருக்குப் பதிலாக சாம்சுங் நிறுவனத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது தெரியவில்லை.
நன்றி: வாஷிங்டன் போஸ்ட்.

வணிகர்கள் மாநாட்டுக்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது த.வெள்ளையன் அறிவிப்பு

வணிகர்கள் மாநாட்டுக்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது த.வெள்ளையன் அறிவிப்பு

வணிகர்கள் மாநாட்டுக்கு அனைத்து கட்சி தலை வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று த.வெள்ளையன் தெரிவித்தார்.
பொருளாதார சீர்குலைவு
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பரமக்குடி யில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசின் தவறான பொருளா தார கொள்கையும், தேவை யற்ற வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதியும், தேவை யற்ற வரிகளும் இந்திய பொருளா தாரத்தை சீர்குலைத்து வரு கிறது. சிறு வியாபாரிகளை நசுக்கும் நோக்கத்தில் ரிலை யன்ஸ் கடைகள் திறக்கப் பட்டு வருகிறது. பல வட மாநிலங்களில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டதால், ரிலை யன்ஸ் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
மாநில மாநாடு
தற்போது தமிழகத்திலும் ரிலையன்ஸ் ஆதிக்கம் தலை விரித்து ஆடுவதால் அவற்றை அடித்து நொறுக்க தயாராகி வருகிறோம். இது போன்ற வர்த்தகத்துக்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர் களுக்கு வியாபாரிகளின் நிலையை விளக்குவதற்காக வருகிற மே 5-ந்தேதி சென்னை மாதவரம் காமராஜர் திட லில் வணிகர் சங்கங்களின் வெள்ளிவிழா மாநாடு நடத் தப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்கு மாறு அனைத்து கட்சி தலை வர்களுக்கும் அழைப்பு விடுக் கப்பட்டு உள்ளது. அவர் களின் முன்னிலையில் வணிகர்க ளின் கோரிக்கைகள் வலியு றுத்தப்படும். இந்த மாநாட் டில் ராமநாதபுரம் மாவட்ட வணிகர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது பரமக்குடி வியா பாரிகள் சங்க தலைவர் காசி, பொதுச்செயலாளர் ஜபருல் லாகான், துணை தலைவர் ராசி என்.போஸ், இணை செயலாளர் மோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மதானி உள்பட 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி மறுஆய்வு மனு

மதானி உள்பட 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி மறுஆய்வு மனு

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி உள்பட 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி உள்பட 7 பேரை விடுதலை செய்து கோவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்துவிட்டு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்ட எஸ்.ஏ. பாஷா உள்பட 43 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்' என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மறுஆய்வு மனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கே. வெள்ளியங்கிரி (60) சார்பில் வழக்கறிஞர்கள் பிரபு மனோகர், டி.வி.கிருஷ்ணமாச்சாரி, ஏ.ஸ்ரீதர் மூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

புகைப்படங்களை ஆதாரமாக வெளியிட்டார்நடிகர் மணிவண்ணன் மகன் மீது பெண் டைரக்டர் பரபரப்பு புகார்

புகைப்படங்களை ஆதாரமாக வெளியிட்டார்நடிகர் மணிவண்ணன் மகன் மீது பெண் டைரக்டர் பரபரப்பு புகார்`காதலித்து ரகசிய திருமணம் செய்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டார்'

டைரக்டரும், நடிகருமான மணிவண்ணனின் மகன் மீது `நேபாளி' படத்தின் உதவி பெண் டைரக்டர் பரபரப்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளார். காதலித்து ரகசிய திருமணம் செய்துவிட்டு, தற்போது தன்னை தூக்கி எறிந்துவிட்டதாக தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
பெண் டைரக்டர் ஸ்டெபி
`நேபாளி' படத்தில் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர் ஸ்டெபி (வயது 20). இவர், சென்னை விருகம்பாக்கம் சாய்நகர், 2-வது மெயின் ரோட்டில் வசிக்கிறார். இவர் நேற்று தனது தந்தை செல்வம், தாயார் மாலா ஆகியோருடன் வந்து சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இணையதளம் மூலம் காதல்
`எனது தந்தை செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தாயார் மாலா சினிமாவில் உதவி டான்ஸ் மாஸ்டராக பணிபுரிகிறார். எனது பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. `விஷுவல் கம்ïனிகேஷன்' 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். எனது தாயாருக்கு சினிமாவில் தொடர்பு இருப்பதால், எனக்கும் திரையுலகில் நிறைய பேரை தெரியும். `ஆர்குட்' இணையதளத்தில் எனது படம் மற்றும் முகவரியை வெளியிட்டிருந்தேன்.
இதை பார்த்து டைரக்டரும், நடிகருமான மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன், என்னை இன்டர்நெட்டில் தொடர்பு கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி இன்டர்நெட் மூலம் அவர், என்னுடன் முதன் முதலில் பேசினார். சினிமா டைரக்டர் ஒருவர், அவர் நல்ல பையன் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் நானும், அவரிடம் இன்டர்நெட்டில் பேசி வந்தேன். முதலில் நண்பர்களாக தான் பேசினோம். ரகுவண்ணன் தான் என்னை காதலிப்பதாக முதலில் தெரிவித்தார். அதன்பிறகு நானும், அவரும் நேரில் சந்தித்தோம். நானும் அவரை காதலித்தேன்.
பெண் கேட்டனர்
அவர் `மாறன்', `தொடக்கம்' என்ற 2 படங்களில் நடித்தார். அந்த படங்கள் வெற்றி அடையவில்லை. 9-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் கம்ப்ïட்டரை கையாளுவதிலும் நல்ல அறிவு திறன் பெற்றவர். அவரது தந்தை டைரக்டர் மணிவண்ணன் மீது, எனது பெற்றோர் நல்ல மரியாதை வைத்திருந்தனர். இதனால் நானும், ரகுவண்ணனும் ஒன்றாக சுற்றித் திரிந்ததை எனது பெற்றோர் எதிர்க்கவில்லை.
என்னை திருமணம் செய்து கொள்ள ரகுவண்ணன் விரும்பினார். எனது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். டைரக்டர் மணிவண்ணனின் மானேஜரும், உறவினர் ஒருவரும், எனது பெற்றோரை சந்தித்து ரகுவண்ணனுக்கு என்னை பெண் கேட்டனர். மணிவண்ணனின் சம்மதத்தின் பேரிலேயே இது நடந்தது. மணிவண்ணன், எனது தாயாரிடம் போனிலும் பேசி சம்மதம் தெரிவித்தார்.
தாலி கட்டினார்
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி அன்று சென்னை கே.கே.நகர் 15-வது செக்டரில் உள்ள அவரது வீட்டுக்கு ரகுவண்ணன் காரில் என்னை அழைத்து சென்றார். வீட்டிற்கு போய் பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. ரகுவண்ணனின் தாயார் மற்றும் அக்காள் ஆகியோரும் வெளியில் போய்விட்டனர். மணிவண்ணனும் வீட்டில் இல்லை. ரகுவண்ணன் நான் இப்போதே உனக்கு தாலி கட்டி, எனது மனைவியாக்கி கொள்ள போகிறேன் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நான் அதற்கு சம்மதிக்கவில்லை. முதலில் உன்னை ரகசிய திருமணம் செய்து கொள்கிறேன், பின்னர் ஊரறிய திருமணம் செய்து கொள்கிறேன் என்று ரகுவண்ணன் கூறினார். அவ்வாறு சொன்னதோடு நிற்காமல், அவரது பாட்டியின் புகைப்படத்துக்கு முன்பு என்னை நிற்க வைத்தார். பாட்டியின் படத்தின் முன்பு தங்க தாலி கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிறும், மெட்டியும் இருந்தது. மஞ்சள் கயிறு தாலியை எனது கழுத்தில் கட்டி, மெட்டியை எனது காலில் ரகுவண்ணன் அணிந்துவிட்டார். இந்த சம்பவம் நான் எதிர்பாராத வகையில் நடந்துவிட்டது.
நெருக்கமான பழக்கம்
இந்த சம்பவத்திற்கு பிறகு ரகுவண்ணனும், நானும் நெருக்கமாக பழக ஆரம்பித்தோம். அவர் எனக்கு முத்தம் கொடுப்பது உள்பட அனைத்து `செக்ஸ்' குறும்புகளையும் செய்வார். ஆனால், உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளாமல் நான் ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டேன். இந்த நிலையில், சமீபத்தில் திடீரென்று ரகுவண்ணன் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.
தாயார் மறுப்பு
`திருமணத்துக்கு தனது தாயார் மறுப்பதாகவும், எனவே, என்னை மறந்துவிடு' என்றும் ரகுவண்ணன் கூறினார். இதை கேட்டதும் `எனது தலையில் இடி விழுநëதது போல் இருந்தது'. அதன்பிறகு ரகுவண்ணன், என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்துக்கொண்டார். என்னோடு பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். என்னை மிரட்ட ஆரம்பித்தார். டைரக்டர் ஒருவர் மூலம் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். `என்னை மறக்காவிட்டால் ஆசிட் ஊற்றி கொன்றுவிடுவேன்' என்றும் அடிக்கடி போனில் மிரட்டினார். அவர் செல்வாக்கு மிக்கவர். அவரால், எனக்கும், எனது பெற்றோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன்.
புகைப்படம் ஆதாரம்
ரகுவண்ணனும், நானும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் லேப்-டாப் கம்ப்ïட்டரில் பதிவு செய்து வைத்துள்ளேன். இந்த படங்களை ரகுவண்ணனே எடுத்தார். அவர், எனக்கு தாலி கட்டியதை கூட வீடியோ படமாக எடுத்திருந்தார். பின்னர் அதை அழித்துவிட்டார். திரையுலக பிரமுகர்கள் அனைவரிடமும் என்னை, அவரது மனைவி என்று ரகுவண்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், திடீரென்று என்னை திருமணம் செய்ய மறுத்து தூக்கி எறிந்து பேசுகிறார். என்மீது மகளிர் ஆணையத்தில் பொய்யான புகார் கொடுத்துள்ளார். அவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. 3 நாட்களாக எனக்கு சாப்பாடு பிடிக்கவில்லை. தூக்கம் வரவில்லை. உலகமே இருட்டாக உள்ளது. அவரோடு சேர்ந்து வாழ்வதே எனது குறிக்கோள். அவரை அடையாமல் விடமாட்டேன். உயிருக்கு உயிரான காதலை தனது தாயாருக்காக ஒரே நொடியில் சாகடிக்க பார்க்கிறார். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு உதவி பெண் டைரக்டர் ஸ்டெபி தெரிவித்தார்.
படங்களை காட்டினார்
ரகுவண்ணனோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ பட காட்சிகளை ஸ்டெபி, நிருபர்களுக்கு போட்டு காண்பித்தார். வீடியோவில் சில படங்களில் அவர்கள் இருவரும் மேலாடை இல்லாமல் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும், ரகுவண்ணன், ஸ்டெபிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. இநëத வீடிய பட ஆதாரங்களை எல்லாம் ஸ்டெபி போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் கமிஷனர் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. ஸ்டெபியின் தாயார் மாலா, `எனது மகள் காதல் போராட்டத்தில் இறங்கி இருக்கிறாள். கண்டிப்பாக அவள் வெற்றி பெற்றே தீருவாள்' என்று தெரிவித்தார்.

நேரு யுவகேந்திராவுக்கு சேவை தொண்டர்கள் தேர்வு

நேரு யுவகேந்திராவுக்கு சேவை தொண்டர்கள் தேர்வு

சென்னை மாவட்ட நேரு யுவகேந்திராவுக்கு 2008-09-ம் ஆண்டுக்கான தேசிய சேவை தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இளைஞர், மகளிர் வளர்ச்சிக்காக சமூகப் பணி, மன்றங்கள் அமைத்தல், சுய உதவிக் குழுக்கள் ஆரம்பித்தல் போன்ற சமூகப் பணிகள் செய்வதற்கு ஆர்வமுடைய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியின் காலம் அதிகபட்சம் 2 ஆண்டுகள் ஆகும். இப் பணிக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ. 1000 வழங்கப்படும். பட்டதாரிகளாகவும், 1.4.85-க்கு பிறகு பிறந்தவராகவும், 23 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஆண்கள், பெண்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவராகவும், 1.4.82-க்குப் பிறகு பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவர்கள், வேலையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் வரும் மே 2-ம் தேதி காலை 9 மணிக்கு, எண் 3, 4-வது குறுக்குத் தெரு, டாக்டர் சீதாபதி நகர் (விரிவு), வேளச்சேரி, சென்னை-42 என்ற முகவரியில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தக்க சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மகன்களின் நிறுவனங்களுக்கு கேஸ் சப்ளை-சிக்கலில் டி.ஆர்.பாலு!

மகன்களின் நிறுவனங்களுக்கு கேஸ் சப்ளை-சிக்கலில் டி.ஆர்.பாலு!

தனது மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நலன் கருதி, அந்த நிறுவனங்களுக்கு எரிவாயு சப்ளை செய்யுமாறு பெட்ரோலியத் துறையை தான் கேட்டுக் கொண்டது உண்மைதான் என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன்களான டி.ஆர்.பி. செல்வக்குமார், கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும், டி.ஆர்.பி. ராஜ்குமார் கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களில் டி.ஆர்.பாலுவின் இரு மனைவியரான டி.ஆர்.பி பொற்கொடி, டி.ஆர்.பி. ரேணுகா தேவி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர்.பிரச்சினை என்னவென்றால், தனது மகன்களுக்குச் சொந்தமான மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் சலுகை விலையில், நரிமணம் மற்றும் குத்தாலத்திலிருந்து இயற்கை எரிவாயுவை சப்ளை செய்ய டி.ஆர்.பாலு ஓ.என்.ஜி.சி மற்றும் கெய்ல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார் என்பதுதான்.சுவாமி கிளப்பிய புயல்!:இதுதொடர்பாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், டி.ஆர்.பாலுவின் இரு மகன்களுக்கும் சொந்தமான, அவரு இரு மனைவியரும் பெருமளவிலான பங்குகளை வைத்துள்ள கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் கிங்ஸ் இந்தியா கெமிக்கல் நிறுவனம் ஆகியவற்றுக்கு சலுகை விலையில், எரிவாயுவை சப்ளை செய்யுமாறு ஓ.என்.ஜி.சி, மற்றும் கெய்ல் நிறுவனங்களுக்கு டி.ஆர்.பாலு உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கெய்ல் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் செளபேயை தனது அலுவலகத்திற்கு அழைத்து, காவிரிப் படுகைப் பகுதியிலிருந்து தனது மகன்களின் நிறுவனங்களுக்கு எரிவாயுவை அனுப்புமாறு ஓ.என்.ஜி.சி. நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சர்மாவைக் கேட்டுக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.ஆனால், இந்த இரு நிறுவனங்களுக்கும் கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சலுகை விலையில் எரிவாயு அளிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அதற்குப் பலன் இல்லாததால், சென்னை மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு இடைக்காலத் தடை உத்தரவும் பெறப்பட்டுள்ளது.'அதிகார துஷ்பிரயோகம்':எனவே டி.ஆர்.பாலு தனது மகன்களின் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் எரிவாயுவை சப்ளை செய்ய உத்தரவிட்டிருப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள டி.ஆர்.பாலு மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 11, 12, 13 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார் சுவாமி.பிப்ரவரி 28ம் தேதி பிரதமருக்கு ஒரு நினைவூட்டல் கடிதத்தையும் அனுப்பியுள்ளார் சுவாமி.மைத்ரேயன் கேள்வி-பாலு கோபம்!:இந் நிலையில் நேற்று இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் வெடித்தது.இதுகுறித்து ராஜ்யசபாவில் நேற்று அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் டி.ஆர்.பாலு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.அதற்குப் பதிலளித்த டி.ஆர்.பாலு, எனது குடும்பத்தாருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு எரிவாயு அளிக்க நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. முறையாக விதிமுறைகளை பின்பற்றியே எரிவாயு அனுமதி கோரப்பட்டது.தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நான் கிங்ஸ் கெமிக்கல்ஸ் மற்றும் கிங்ஸ் ஹை பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தேன். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இணைந்த பின்னர் அந்தப் பதவியை நான் விட்டு விட்டேன்.கெய்ல் நிறுவனத்துடன் இந்த இரு நிறுவனங்களும் கடந்த 1999ம் ஆண்டு 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் எரிவாயுவைப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் 2003ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையிலிருந்து நான் ராஜினாமா செய்தவுடன் இந்த ஒப்பந்தத்தை பாஜக அரசு ரத்து செய்து விட்டது.இதில் என்ன தவறு?:இதனால் மேற்கண்ட இரு நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்தன. நிறுவனங்களை மூட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. அந்த நிறுவனங்களில் 40,000 ஷேர் ஹோல்டர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர். அனைவரும் என்னை அணுகி தங்களது வேலை பறிபோகும் நிலை உள்ளது. எனவே நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கோரினர்.ஏராளமான தொழிலாளர்களின் நலன்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை கருத்திற்கொண்டும், பங்குதாரர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கும் நோக்கத்திலும் இப்பிரச்னையை பெட்ரோலிய அமைச்சர் முன்பாக எடுத்து வைத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது?. நான் தவறு ஏதும் செய்யவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவும் இல்லை என்று கோபமாக பதிலளித்த டி.ஆர்.பாலு அதன் பின்னர் அவையை விட்டு வெளியேறி விட்டார்.அதன் பின்னர் பேசிய திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, இது நாடாளுமன்ற விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். அதை இங்கு எழுப்புவது சரியல்ல என்றார்.ஆனால் அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த பி.ஜே.குரியன், இந்த எதிர்ப்பை நிராகரித்தார். இதனால் திமுக தரப்பில் சலசலப்பு ஏற்பட்டது.பின்னர் பேசிய புதுச்சேரி எம்.பியும், அமைச்சருமான நாராயணசாமி, அதிமுக உறுப்பினர் தனது புகாருக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்றார். அதற்கு மைத்ரேயன், இதுதொடர்பாக செய்தித் தாளில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதைக் காட்டித்தான் நான் கேட்கிறேன். ஆதாரத்தை நிரூபிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.லோக்சபாவிலும் சிக்கல்!:இந்த நிலையில், லோக்சபாவிலும் பாலுவுக்கு நேற்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக பிரச்சினையைக் கொடுத்தன.தேசிய நெடுஞ்சாலைகளில் அவசரத் தேவையான ஆம்புலன்ஸ்கள், கிரேன்கள் மற்றும் பிற வசதிகள் போதுமான அளவு இல்லை என பல எம்.பிக்கள் குற்றம் சாட்டினர். லோக்சபா தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, எம்.பிக்கள் சார்பில் கூறுகையில், எம்.பிக்கள், தங்கள் தொகுதிக்குச் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் காணும் குறைகளை தெரிவித்துள்ளனர். இதற்கு தாங்கள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பாலுவை கேட்டுக் கொண்டார்.இதற்கு பாலு பதிலளிக்கையில், மத்திய நெடுஞ்சாலைத் துறை சார்பில், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை சில, மாநில அரசுகள் செயல்படுத்த தவறி விட்டன. தற்போது, பெருகிவரும் வாகன போக்குவரத்து காரணமாக நெடுஞ்சாலைப் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் போதிய வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலை.': துணைவேந்தர் சி. ராமசாமி

முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலை.': துணைவேந்தர் சி. ராமசாமி

இந்தியாவில் உள்ள 44 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்று சிறந்து விளங்குகிறது என்றார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி. ராமசாமி.
லால்குடி அருகேயுள்ள குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விடுதி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி அவர் பேசியது:
"தமிழகத்தில் 11 இடங்களில் வேளாண்மை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 4 இடங்களில் வேளாண்மை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. கிராமப்புறத்தில் உள்ள குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரியின் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சிகள் சிறப்பாக உள்ளன. இந்தியாவில் உள்ள 44 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்தான் முதலிடத்தில் உள்ளது. வேளாண்மைத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்துக்கு ஏற்றவாறு மாணவ, மாணவிகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வேளாண்மைத் துறையில் தொழில் முனைவோர் அதிகளவில் உருவாக வேண்டும். அப்போதுதான் இந்தத் துறை மிகவும் சிறப்புற்று விளங்கும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆன்லைன், கனிணி போன்றவை மூலம் வேளாண்மை உள்ளிட்ட பிற துறையினர் கல்வி கற்கின்றனர். மாணவ, மாணவிகள் புதிய சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டால்தான் வேளாண்மைத் துறையில் மேலும் சிறப்பான செயல்களைச் செய்ய முடியும்' என்றார்.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கே. ரங்கசாமி தலைமை வகித்தார். கல்லூரி விடுதிக் காப்பாளர் ஏ. தாஜுதின், பேராசிரியர்கள் எஸ். வரதராஜன், கே. சண்முகசுந்தரம், விடுதி துணைக் காப்பாளர்கள் ஏ. சுரேந்திரகுமார், எஸ். டெய்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, மாணவர் பி. வினோத் வரவேற்றார். மாணவி ஆர். மைதிலி நன்றி கூறினார்.

இந்தியா: சீன ஒலிம்பிக்சுக்கு இதுவரை 28 பேர் தகுதி

இந்தியா: சீன ஒலிம்பிக்சுக்கு இதுவரை 28 பேர் தகுதி

சீனாவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் இதுவரை 28 வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தெரிவித்தார்.ராஜ்யசபாவில் நேற்று கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் கில் கூறியதாவது:சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவுள்ள 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 28 வீளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு 9 வீரர்கள், தடகளம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு தலா 5 வீரர்கள், வில்வித்தையில் 4 பேர், மல்யுத்தம் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிக்காக தலா 2 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதுதவிர ஒரு நீச்சல் வீரரும் தகுதி பெற்றுள்ளார்.இன்னும் மற்ற போட்டிகளுக்கு நடக்கும் தகுதிச் சுற்றுகள் அனைத்தும் முடிந்த பிறகுதான் எவ்வளவு பேர் தேர்வு பெற்றுள்ளனர் என்பதைக் கூறமுடியும்.சிறந்த வீரர்களை உருவாக்குவதற்குத் தேவையான பயிற்சி முகாம்கள், விஞ்ஞானபூர்வ உபகரணங்கள் வழங்குதல், வெளிநாட்டு பயிற்சியாளர் வசதி ஆகியவற்றை தேசிய விளையாட்டு சம்மேளனத்தின்மூலம் வழங்க இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் உதவி வருகிறது.பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர்களை அமர்த்தி இந்திய அரசு சிறப்பு பயிற்சியை வழங்குவது குறிப்பிடத்தக்கது என்றார் கில்.சீனா மிரட்டலா?:மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், டெல்லியில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை நடத்தக்கூடாது என்று சீன அரசு நிர்பந்திக்கவில்லை. ஜோதி ஓட்டத்தின் பாதையை இந்திய ஒலிம்பிக் சங்கம்தான் தீர்மானித்தது என்றார்.

ஜாக்கிசான் இன்று சென்னை வருகிறார்

ஜாக்கிசான் இன்று சென்னை வருகிறார்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று இரவு 10 மணிக்கு சென்னை வந்தடைகிறார் ஜாக்கிசான். பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார். ஏப்ரல் 25-ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் "தசாவதாரம்' பட ஆடியோ சிடி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி எய்ம்ஸ்க்கு இணையாக புதுவை ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம்

டெல்லி எய்ம்ஸ்க்கு இணையாக புதுவை ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம்

புதுவை ஜிப்மருக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க மாநிலங்களவையில் மசோதா நேற்று நிறைவேறியது. புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் குளிர கால கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மசோதாவில் பல திருத்தங்களை மத்திய அரசு செய்தது. இந்த மசோதா மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் அன்புமணி பேசியதாவது: உறுப்பினர்கள் கூறிய திருத்தங்கள செய்யப்பட்டு புதிய மசோதாவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்துக்கு (எய்ம்ஸ்) இணையான தன்னாட்சி அதிகாரம் ஜிப்மருக்கு கிடைக்கும்.

http://www.puduvaitamilsonline.com/news50.html

'சங்கரா டிவி': சேனல் தொடங்கும் காஞ்சி மடம்

'சங்கரா டிவி': சேனல் தொடங்கும் காஞ்சி மடம்

காஞ்சி மடத்தின் சார்பில் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த தொலைக்காட்சி சேவை தொடங்கப்படுகிறது.சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கித் தவித்து வரும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவங்கவுள்ள இந்த டிவியின் பெயர் சங்கரா டி.வி.இதில் இந்து சமயம் குறித்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.காஞ்சி காமக்கோடி பீடம் டிரஸ்ட் சார்பில் தொடங்கப்படும் இந்த டிவிக்கான அலுவலகம், ஊழியர்கள், கருவிகள் எல்லாம் தயாராக உள்ளன.இன்னும் 2 வாரங்களில் லைசென்ஸ் வந்து சேர்ந்துவிடும் எனத் தெரிகிறது இதையடுத்து 20 நாட்களுக்குள் சங்கரா டி.வி தனது ஒளிபரப்பை துவக்கும் என காஞ்சி மட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கோவில்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பஜனை, கர்நாடக இசை, அதிகாலையில் சுப்ரபாதம் என இந்து மதம் குறித்த நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறும்.தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகுமாம்.

ஒரு வரி செய்திகள்.

தேனாம்பேட்டையில் இயங்கி வந்த சன் டிவி அலுவலகம் தற்போது மந்தைவெளிக்கு மாற உள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் 6 புதிய தனியார் அலைவரிசைகள் துவங்க உள்ளன.

சென்னையில் 1500 கோடியில் தகவல் தொழில் நுட்ப பொருளாதார மண்டலம். முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.

சரப்ஜித் தண்டனை தள்ளிவைப்பு!

ராஜ‌ஸ்தா‌னி‌ல் சாலை ‌விப‌த்‌து: 5 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 24 பே‌ர் ப‌லி!

இல‌ங்கை‌யி‌ல் கடும் போர் பல‌ர் ப‌லி.

சென்னை அணி வெற்றி.

டோனி தலைமையிலான சென்னை அணி, ஹர்பஜன் தலைமையிலான(பொறுப்பு) மும்பை அணியுடன் நேற்று மோதியது. பரபரப்பாக நடந்த இவ்வாட்டத்தில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது. முன்னதாக களமிறங்கிய சென்னை அணி நிர்ணயக்கபட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹைடன் 81 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது, ஆனால் 12 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக அபிஷேக் நாயர் 45 ரன்கள் எடுத்தார்.

Free Blog CounterLG