Thursday, April 24, 2008

முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலை.': துணைவேந்தர் சி. ராமசாமி

முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலை.': துணைவேந்தர் சி. ராமசாமி

இந்தியாவில் உள்ள 44 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்று சிறந்து விளங்குகிறது என்றார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி. ராமசாமி.
லால்குடி அருகேயுள்ள குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விடுதி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி அவர் பேசியது:
"தமிழகத்தில் 11 இடங்களில் வேளாண்மை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 4 இடங்களில் வேளாண்மை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. கிராமப்புறத்தில் உள்ள குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரியின் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சிகள் சிறப்பாக உள்ளன. இந்தியாவில் உள்ள 44 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்தான் முதலிடத்தில் உள்ளது. வேளாண்மைத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்துக்கு ஏற்றவாறு மாணவ, மாணவிகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வேளாண்மைத் துறையில் தொழில் முனைவோர் அதிகளவில் உருவாக வேண்டும். அப்போதுதான் இந்தத் துறை மிகவும் சிறப்புற்று விளங்கும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆன்லைன், கனிணி போன்றவை மூலம் வேளாண்மை உள்ளிட்ட பிற துறையினர் கல்வி கற்கின்றனர். மாணவ, மாணவிகள் புதிய சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டால்தான் வேளாண்மைத் துறையில் மேலும் சிறப்பான செயல்களைச் செய்ய முடியும்' என்றார்.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கே. ரங்கசாமி தலைமை வகித்தார். கல்லூரி விடுதிக் காப்பாளர் ஏ. தாஜுதின், பேராசிரியர்கள் எஸ். வரதராஜன், கே. சண்முகசுந்தரம், விடுதி துணைக் காப்பாளர்கள் ஏ. சுரேந்திரகுமார், எஸ். டெய்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, மாணவர் பி. வினோத் வரவேற்றார். மாணவி ஆர். மைதிலி நன்றி கூறினார்.

0 comments:

Free Blog CounterLG