Thursday, April 24, 2008

இந்தியா: சீன ஒலிம்பிக்சுக்கு இதுவரை 28 பேர் தகுதி

இந்தியா: சீன ஒலிம்பிக்சுக்கு இதுவரை 28 பேர் தகுதி

சீனாவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் இதுவரை 28 வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தெரிவித்தார்.ராஜ்யசபாவில் நேற்று கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் கில் கூறியதாவது:சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவுள்ள 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 28 வீளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு 9 வீரர்கள், தடகளம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு தலா 5 வீரர்கள், வில்வித்தையில் 4 பேர், மல்யுத்தம் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிக்காக தலா 2 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதுதவிர ஒரு நீச்சல் வீரரும் தகுதி பெற்றுள்ளார்.இன்னும் மற்ற போட்டிகளுக்கு நடக்கும் தகுதிச் சுற்றுகள் அனைத்தும் முடிந்த பிறகுதான் எவ்வளவு பேர் தேர்வு பெற்றுள்ளனர் என்பதைக் கூறமுடியும்.சிறந்த வீரர்களை உருவாக்குவதற்குத் தேவையான பயிற்சி முகாம்கள், விஞ்ஞானபூர்வ உபகரணங்கள் வழங்குதல், வெளிநாட்டு பயிற்சியாளர் வசதி ஆகியவற்றை தேசிய விளையாட்டு சம்மேளனத்தின்மூலம் வழங்க இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் உதவி வருகிறது.பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர்களை அமர்த்தி இந்திய அரசு சிறப்பு பயிற்சியை வழங்குவது குறிப்பிடத்தக்கது என்றார் கில்.சீனா மிரட்டலா?:மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், டெல்லியில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை நடத்தக்கூடாது என்று சீன அரசு நிர்பந்திக்கவில்லை. ஜோதி ஓட்டத்தின் பாதையை இந்திய ஒலிம்பிக் சங்கம்தான் தீர்மானித்தது என்றார்.

0 comments:

Free Blog CounterLG