அம்பத்தூர், மே. 11-
சென்னை அண்ணா நகர் மேற்கு, 18-வது மெயின் ரோட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு `விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ்' என்ற பெயரில் கம்ப்யுட்டர் கம்பெனி ஆரம்பிக்கப்பட் டது. இதன் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்த சிவக்குமார்.
இங்கு பல்வேறு நிறுவனங் களின் திட்டப்பணிகளை (புராஜக்ட் ஒர்க்) ஆர்டர் எடுத்து வாங்கி, அதை முடித்து கொடுக்கும் வேலை வழங்கப்பட்டு வந்தது. புரா ஜக்ட் வேலைகளை செய்ய கம்ப்யுட்டர் படித்த இளைஞர்கள்-இளம்பெண் களை வேலைக்கு சேர்த்தனர்.
read more
டி.வி.க்கள், பத்திரிகை களில் தினமும் விளம்பரம் செய்தனர். இதை பார்த்து பி.சி.ஏ., எம்.சி.ஏ. முடித்த சாப்ட்வேர் என்ஜினீயர்கள் வேலைக்கு சேர்ந்தனர். ஒவ்வொருவரிடமும் டெபாசிட் தொகையாக ரூ.40 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாங்கி கொண்டனர். ஆனால் ரசீது ரூ.40 ஆயிரத்துக்கு மட்டுமே கொடுத்துள்ளனர்.
முதலில் 6 மாதம் பயிற்சி என்றும் அப்போது ரூ.4 ஆயிரம், 5 ஆயிரம், சம்பளம் தருவோம் என்றும் அதன் பிறகு நிறைய சம்பளம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
இதை நம்பி வேலையில் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களுடன் படித்த நண்பர் களையும் வேலையில் சேர்த்து விட்டனர். சுமார் 2 ஆயிரம் பேர் முன் பணம் கட்டி வேலையில் சேர்ந்தனர்.
இந்த நிலையில் அங்கு வேலை பார்த்த கம்பெனி ஊழியர்கள் 25 பேர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் கொடுக் காமல் இழுத்தடித்தனர். அவர்கள் கேட்டுப்பார்த்தும் சம்பளம் கிடைக்கவில்லை. இந்த விஷயம் வேலையில் சேர்ந்த கம்ப்யுட்டர் என்ஜினீ யர்களுக்கு தெரிய ஆரம்பித்தது.
ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்காத கம்பெனி, எப்படி புராஜக்ட் ஒர்க் செய்யும் என்ஜினீயர்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டது.இதனால் எல்லோரும் சேர்ந்து இயக்குனர்களிடம் முறையிட்டனர்.
ஆனால் அந்த அதிகாரிகள் 3 மாத சம்பளத்தை சேர்த்து தந்து விடுவோம் என்று சமாதானம் செய்தனர்.
ஆனால் திடீரென நேற்று முன்தினம் பகலிலேயே முக்கிய நிர்வாகிகள் அனை வரும் கம்பெனியை விட்டு வெளியேறி ஒவ்வொருவராக தப்பி விட்டனர். இதை அறிந்த ஊழியர்கள் அங்கி ருந்த கம்ப்யுட்டர்களை அடித்து நொறுக்கினர். பின்னர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.
சுமார் 1600-க்கும் மேற் பட்டவர்கள் திரண்டு புகார் செய்ததால் திருமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது.
கம்பெனி நடத்தியவர்கள் சுமார் 50 கோடிக்கும் மேல் மோசடி செய்து விட்டு ஓடி விட்டதாக புகார் கூறப்பட்ட தால் போலீசார் தீவிர விசாரணை நடத்த தொடங் கினர். போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமர னுக்கு இந்த மோசடி குறித்து தெரிய வந்ததும் அவர் உயர் அதிகாரி களை அனுப்பி மோசடி பேர் வழிகளை கைது செய்ய உத்தர விட்டார்.
உடனே மத்திய சென்னை இணை கமிஷனர் பாலசுப்பிர மணியன், அண்ணாநகர் துணை கமிஷனர் ஜெயகவுரி, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ராமசுப்பிரமணி ஆகியோர் அந்த கம்ப்யுட்டர் கம்பெனிக்கு போலீஸ் படை யுடன் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கிருந்த தஸ்தாவேஜூக் களை பார்த்து கட்டிடத்தின் உரிமையாளரை கண்டு பிடித்து போலீஸ் நிலையத் துக்கு வரவழைத்தனர். அவரிடம் கம்பெனியை நடத்தியவர்கள் யார்ப யார்ப உங்களுக்கு வாடகை தருவது யார் என்று கேட்டனர். இதில் பல தகவல்கள் கிடைத்தது.
இந்த கம்பெனியை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் ஒரு பெண் தொழில் அதிபர் என தெரிந் தது. அவரது பெயர் கிரண் அகர்வால். இவர் அந்த கட்டி டத்தில் இன்னொரு தளத்தில் இன்சிஸ் கம்ப்யுட்டர் டெக் னாலஜி என்ற பெயரில் கம்பெனி நடத்தி வந்தார். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவருடன் சேல்ஸ் மானேஜர் சார்லஸ், புராஜக்ட் மானேஜர் ஸ்ரீகணே சன் ஆகியோரும் கைதானார் கள்.
விஸ்ப்ரோஸ் டெக்னா லஜிஸ் கம்பெனி வருவதற்கு கிரண் அகர்வால் தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து ஒப்பந்தம் போட்டு கொடுத்திருந்தார்.
இந்த கம்பெனியின் நிர்வாக இயக்குனர் சிவக் குமார் கோடிக்கணக்கான ரூபாயுடன் ஆந்திரா தப்பி சென்றதும் தெரிய வந்தது. அவருடன் பங்குதாரர்கள் சுப்பிரமணியம், சதீஷ்குமார், பொது மேலாளர் வெங்க டேசன் ஆகியோரும் ஆந்திரா வுக்கு ஓடி விட்டனர்.
இவர்களை பிடிக்க உதவி கமிஷனர் அழகு சோலைமலை தலைமையில் போலீசார் மசூலிப்பட்டினம் விரைந்துள்ளனர்.
இதற்கிடையே அண்ணா நகரில் உள்ள கம்ப்யுட்டர் கம்பெனியில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினார்கள். கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
நன்றி மாலை மலர்
//சுமார் 1600-க்கும் மேற் பட்டவர்கள் திரண்டு புகார் செய்ததால் திருமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது.//
திருவிழா என்றால் கரகாட்டம் ஒயிலாட்டம் நடைபெற்றதா, குத்து டான்ஸ் இருந்ததா?, பஞ்சு மிட்டாய், கடலை மிட்டாய் வித்தார்களா?
பணத்தையும் வாழ்வையும் தொலைத்தவர்கள் பற்றிய செய்தி ஜனரஞ்சக பத்திரிக்கைக்கு திருவிழா போன்றுள்ளது. ஆம் சில நாட்களுக்கு மாலைப் பத்திரிக்கைகளுக்கு திருவிழா தான்....