அமெரிக்காவின் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் எல்லைகளையொட்டியுள்ள பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது.
ஹிஸ்புல்லா அமைப்பு இரான், சிரியாவின் உதவியுடன் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஹிஸ்புல்லாவின் ஒரு பிரிவு அரசியலில் ஈடுபட்டுள்ளதோடு தற்போதைய அரசில் அங்கமும் வகிக்கிறது. சியா பிரிவைச் சார்ந்த நஸ்ரல்லா என்பவர் ஹிஸ்புல்லாவின் தலைவராக உள்ளார்.
ஹிஸ்புல்லாவின் ஆயுத, திறமைகளை அந்நாட்டின் இரானுவத்தை விட வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று பிரதமர் சினாரியோ, ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்று தெரிவித்தார்.
தருணம் பார்த்துக்கொண்டிருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் இந்த அறிவிப்பு ஹிஸ்புல்லா மீதான அரசின் நேரடிப்போருக்கான அறிவிப்பு என்று அறிவித்தார். அதனால் ஹிஸ்புல்லாவின் ஆயுத தாரிகள் கடந்த வியாழன் அன்று தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளை மறித்தனர். இதனால் பல்வேறு நாடுகளின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து பெய்ரூட்டின் பெரும் பகுதிகளை அவர்கள் கைப்பற்றினர். சுன்னிப் பிரிவைச்சார்ந்த புயூச்சர் மூவ்மென்ட் அமைப்பினரின் சொத்துக்களுக்கு தீவைத்தனர். முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி க்குச் சொந்தமான தொலைக்காட்சி நிலைய்யத்திற்கும் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் தீவைத்தனர்.
இந்த சம்பவத்தில் 30 பேர் இறந்துள்ளனர். அதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சவ ஊர்வலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சம்பவத்தில் சியா பிரிவைச்சாரந்த ஒருவர் சுட்டதில் இருவர் பலியாயினர்.
இதுபற்றி தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் சினாரியோ ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற ஹிஸ்புல்லா சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவத்தை சவூதி அரேபியா கடுமையாக கண்டித்துள்ளது. அவசர கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தது. அமெரிக்கா, சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் லெபனான், சவூதி அரேபியாவின் அதிகப்படியான பண உதவி பெற்று வருகிறது.
கடைசியாக கிடைத்த தகவலின்படி, இரானுவம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஹிஸ்புல்லா அமைப்பு தங்களுடைய ஆயுததாரிகளை சனிக்கிழமையிலிருந்து பெய்ரூட்டிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் தொலைத்தொடர்பு இரானுவ கண்கானிப்பின் கீழ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, May 11, 2008
தலைநகர் பெய்ரூட்டை சியா பிரிவினரின் ஹிஸ்புல்லா கைப்பற்றியது
Posted by udanadi at 5/11/2008 12:05:00 PM
Labels: உலகம், பெய்ரூட், லெபனான், ஹிஸ்புல்லா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment