Sunday, May 11, 2008

புஷ்ஷின் மகள் ஜென்னாவின் திருமணம்


அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மகள் ஜென்னாவின் திருமணம் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள புஷ்ஷிற்கு சொந்தமான 1600 ஹெக்டர் பரப்பளவில் உள்ள கிராபோர்ட் பண்ணை வீட்டில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் புஷ்ஷிற்கு நெருங்கிய 200 குடும்ப நண்பர்கள் கலந்து கொள்கின்றனர். ஜென்னாவின் காதலர் ஹென்றி சேஸ் ஹேகர் முன்னாள் விர்ஜீனியா ஆளுநரின் மகனாவார். ஜென்னாவின் வயது 26, மணமகனுக்கு வயது 30.

2004 தந்தையின் தேர்தல் பிரசாரத்தின் போது ஹென்றியுடன் காதல் வயப்பட்டார் ஜென்னா புஷ். மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய புஷ் தம்பதி திருமணத்தை எளிமையாக நடத்தத் திட்டமிட்டது. அமெரிக்க அதிபர்கள் பதவியில் இருக்கும்போது அவர்களது பிள்ளைகளுக்கு நடைபெறும் 22வது திருமணம் இதுவாகும்.

அமெரிக்க ஜனாதிபதி பதவியின் பதவிக்காலம் வருகிற ஜனவரியுடன் முடிவுறுகின்ற நிலையில் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி, இராக் போர் எதிர்ப்பு போன்ற காரணங்களால் திருமணம் எளிமையாக நடைபெறுவதாக புஷ்ஷின் வட்டாரங்கள் தெரிவித்தன.

விருந்தின் போது ஸ்மிது குழுவின் 'You Are So Beautiful' பாட்டுக்கு மகளுடன் புஷ் டான்ஸ் ஆடுவார். தாஜ்மஹால் வாத்தியக் குழுவினரின் Lovin' in My Baby's Eyes பாட்டுக்கு புது தம்பதியினரின் ஆட்டம் (டான்ஸ்) நடைபெறும். திருமண உடையாக Oscar de la Renta நிறுவனம் தயாரிக்கும் கவுனை மணமகள் அனிந்திருப்பார்.

முன்னதாக தன்னுடைய பண்ணைவீட்டில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற லாரா புஷ் தயக்கம் காட்டியதாக தெரிகிறது. அங்கு கோழி (சிக்கன்) சமைக்க சரியான சமையற்காரர் கிடைப்பாரா என்ற கவலையில்.

இவ்விருந்தில் இந்தியர்கள்
எவராவது கலந்து கொள்கிறார்களா என்பது பற்றி தகவலில்லை.

0 comments:

Free Blog CounterLG