Friday, May 9, 2008

முன்னர் அறிவித்தபடி வேலூ‌ர் கோ‌ட்டை‌யி‌ல் தொழுகை: ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் விடுத்துள்ள அறிக்கையில் திட்டமிட்டபடி வேலூர் கோட்டையில் உள்ள நவாப் பள்ளி வாசலில் 9ஆ‌ம் தேதி (இன்று) தொழுகை நடக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமான வேலூர் கோட்டையில் 48 அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய அலுவலகங்களும் அங்கு தொடங்கப்படுகின்றன. ஆனால் தொல்பொருள்துறை அதனை மவுனமாக வேடிக்கை பார்க்கிறது.

மசூதியை தபால் அலுவலகமாக மாற்றுவதற்கும் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதனையும் தொல்பொருள் துறை கண்டுகொள்ளவே இல்லை. வேலூர் கோட்டை பள்ளி வாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தொல்பொருள் துறையின் நிலைப்பாடு அதன் பாரபட்ச போக்கை வெளிக்காட்டுகின்றது. இக்கோட்டைக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில், புதிதாக கட்டப்பட்டுள்ள இரு சிறு கோயில்களில் வழிபாடு நடப்பதற்கும், 48 அரசு அலுவலகங்கள் முழுவீச்சில் இயங்குவதற்கும் தொல் பொருள் துறை அனுமதித்திருக்கும் போது, பள்ளி வாசலில் தொழுகை நடத்துவது மட்டும் பழம்பெரும் நினைவு சின்னத்துக்கு ஊறுவிளைவிக்கும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?

சென்னையில் நட‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் மே 5ஆ‌ம் தேதி முதல் வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகைக்கு திறந்து விட ஒப்பு கொள்ளப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கொடுத்த இந்த வாக்குறுதியை மீறிவிட்டார்கள். இதனால் 9ஆ‌ம் தேதி (இன்று) எனது தலைமையில் வேலூர் கோட்டை பள்ளி வாசலில் நண்பகல் தொழுகை நடத்த இருக்கிறோம். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்‌கிறார்கள் எ‌ன்று ஜவாஹிருல்லாஹ் கூ‌றினா‌ர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாயின : 84.4 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி

‌‌‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வு முடிவ‌ி‌ல் 84.4 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர். இ‌தி‌ல் கட‌ந்த ஆ‌ண்டை ‌விட இ‌ந்த ஆ‌ண்டு தே‌ர்‌ச்‌சி வ‌ி‌கித‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.
பிள‌ஸ் 2 தே‌ர்வு இ‌ன்று காலை 9 ம‌ணி‌‌க்கு அரசு ப‌ள்‌ளி‌த் தே‌ர்வுக‌ள் துறை இய‌‌க்க‌க‌ம் வெ‌ளி‌யி‌ட்டது. இ‌தி‌ல் அரசு ம‌ற்று‌ம் த‌னியா‌ர் ப‌ள்‌ளிக‌‌ள் மூ‌ல‌ம் தே‌ர்வுக‌ள் எழு‌தியவ‌ர்க‌ள் மொ‌த்த‌ம் 6,41,230 பே‌ர். ப‌ள்‌ளிக‌‌ள் மூலமாக தே‌ர்வு எழு‌திய‌வ‌ர்க‌ள் 5,87,994 பே‌ர்.

ப‌ள்‌ளிக‌ள் மூல‌ம் தே‌ர்வு எழு‌திய மாணவ‌ர்க‌ள் 2,79,025, மாண‌விக‌ள் 2,70,371.
தே‌‌ர்‌ச்‌சி பெ‌ற்ற மாணவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை கட‌ந்த ஆ‌ண்டை ‌விட இ‌ந்த ஆ‌ண்டு 3 வ‌ிழு‌க்காடு அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. கட‌ந்த ஆ‌ண்டு 81 ‌விழு‌க்காடாக இரு‌ந்தது. ‌இ‌ந்த ஆ‌ண்டு 84.4 ‌விழு‌க்காடாக உய‌ர்‌ந்து‌ள்ளது. மொ‌த்த‌ம் 4,96,494 பே‌ர் தே‌ர்‌‌ச்சி பெ‌ற்று‌ள்ளன‌ர்.

60 ‌விழு‌க்கா‌ட்டு‌க்கு மே‌ல் எடு‌த்தவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை கட‌ந்த ஆ‌ண்டை ‌விட இ‌ந்த ஆ‌ண்டு அ‌திக‌ரி‌த்து‌‌ள்ளது. கட‌ந்த ஆ‌ண்டு 3,29,091பே‌ர். இ‌ந்த ஆ‌ண்டு 3,60,722 பே‌ர். வழ‌க்க‌ம்போ‌ல் இ‌ந்த ஆ‌ண்டு‌ம் மாண‌விகளே அ‌திக‌ம் தே‌ர்‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர். கட‌ந்த ஆ‌ண்டு மாணவ‌ர்க‌ள் 77.4 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர். இ‌ந்த ஆ‌ண்டு 81.3 ‌விழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர்.
கட‌ந்த ஆ‌ண்டு மாண‌விக‌ள் 84.6 ‌விழு‌க்காடு தே‌ர்‌‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர். இந்த ஆ‌ண்டு 87.3 வ‌ிழு‌க்காடு தே‌ர்‌ச்‌சி பெ‌ற்று‌ள்ளன‌ர்.

ஒ‌வ்வொரு பாட‌த்‌திலு‌ம் இ‌ந்த ஆ‌ண்டு 200‌க்கு 200 ம‌தி‌ப்பெ‌ண்க‌ள் பெ‌ற்றவ‌ர்க‌ள் விவர‌‌ம் வருமாறு: இய‌ற்‌‌பிய‌ல் 282 பே‌ர், வே‌தி‌யி‌ய‌ல் 306 பே‌ர், உ‌யி‌ரி‌ய‌ல் 153 பே‌ர், தாவர‌விய‌ல் 19 பே‌ர், ‌வில‌ங்‌கிய‌ல் 1, க‌ணித‌ம் 3,852 பே‌ர், க‌ணி‌‌னி அ‌‌றி‌விய‌ல் 60 பே‌ர், வ‌ணிக‌விய‌ல் 148 பே‌ர், கண‌க்குப‌தி‌விய‌ல் 739, வ‌ணிக க‌ணித‌ம் 291 பே‌ர்.

விலையேற்றத்தால் அல்லல்படும்இலங்கை தமிழ் குடும்பங்கள் ராமேசுவரம் வந்த அகதிகள் தகவல்

விலையேற்றத்தால் அல்லல்படும்இலங்கை தமிழ் குடும்பங்கள் ராமேசுவரம் வந்த அகதிகள் தகவல்

இலங்கையில் அத்தியா வசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் தமிழ் குடும்பங்கள் அல்லல் பட்டு வருவதாக ராமேசு வரம் வந்த அகதிகள் தெரி வித்தனர்.

அகதிகள் வருகை

இலங்கையில் இருந்து 4 குடும்பத்தை சேர்ந்த 5 ஆண் கள், 6 பெண்கள், 3 ஆண் குழந் தைகள், 5 பெண் குழந்தைகள் என 19 பேர் ஒரு பிளாஸ்டிக் படகில் அகதியாக தமிழகம் புறப்பட்டார்கள். இவர்கள் நேற்று நள்ளிரவில் தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரை வந்தி றங்கினார்கள்.
அவர்கள் நேற்று காலையில் விசாரணைக்காக தனுஷ்கோடி காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் மண்டபம் அகதி கள் முகாமுக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.

விலையேற்றம்

இவர்களில் மன்னாரை சேர்ந்த மீனவர் இருதயதாசன் புரூஸ்(46), நிருபர்களிடம் கூறியதாவது:- பாதுகாப்பு நட வடிக்கை என்று கூறி இலங்கை கடற்படையினர் எங்களை கடல் செல்ல அனுமதிப்ப தில்லை. அனுமதி தந்தாலும் குறுகிய நேரத்தில் கரைக்கு திரும்புமாறு வற்புறுத்துகிறார் கள். மீன்பிடித்துவிட்டு வர தாமதமானால் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்பு றுத்துகிறார்கள்.

இதனால் என் குடும்பம் வருமானமின்றி தவித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் அத்தியாவசதிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்து விட் டது. ஒரு தேங்காய் 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ அரிசி 90 ரூபாய்க்கும், காய்கறிகள் 200 ரூபாய்க்கும், மண்எண்ணை ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின் றன.
சுட்டுக்கொலை

விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளும், தமிழ் அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார் கள். ஆனால் அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளா மல் இலங்கை அரசு ராணு வத்தை கொண்டு போராட் டத்தை ஒடுக்க நினைக்கிறது.

மன்னார் அச்சங்குளம் பகு தியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்து சென்ற 2 இளை ஞர்களை மோட்டார் சைக்கி ளில் வந்த இலங்கை ராணுவத் தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு சென்றுவிட்ட னர். உணவும் கிடைக்கவில்லை, உயிருக்கும் பாதுகாப்பில்லை என்பதால், எனது மனைவியின் நகைகளை விற்று படகு கட்ட ணமாக ரூ.40 ஆயிரம் கொடுத்து அகதியாக வந்தேன். என் மனைவி அருள்மேரி(47), மகன் தேவராஜ் புரூஸ்(24), மகள்கள் சூசையம்மாள்(16), சகபரா(15) ஆகியோரையும் அகதியாக அழைத்து வந்துள் ளேன். எனது மகள்கள் இரு வரும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ளார் கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

புரோட்டா இல்லையென்று கூறியதால் இரு கோஷ்டியினர் மோதல் 9 பேர் படுகாயம்

புரோட்டா இல்லையென்று கூறியதால் இரு கோஷ்டியினர் மோதல் 9 பேர் படுகாயம்

திண்டுக்கல் அருகே ஹோட்டலில் புரோட்டா இல்லையென்று கூறியதால் ஏற்பட்ட தகராறில் இரு கோஷ்டியினர் மோதிக் கொண்டனர். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர் பாலாஜி(47). இங்கு சம்பவத்தன்று சின்னாளபட்டியைச் சேர்ந்த குமரேசன், செந்தில், குமார், மயில்சாமி ஆகியோர் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் புரோட்டா கேட்டுள்ளனர். பாலாஜி புரோட்டா இல்லையென்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கும், பாலாஜிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

தகராறு முற்றிய நிலையில் பாலாஜியை அடித்து கழுத்தைப் பிடித்து நெரித்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதைப் பார்த்த பாலாஜியின் மகன் சண்முகம், சரவணன், உறவினர் மணிகண்டன், முத்து ஆகியோரும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் அனைவருக்கும் காயம் ஏற்பட்டு திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மக்கள் டி.வி.யின் புதிய நிகழ்ச்சிகள்

மக்கள் டி.வி.யின் புதிய நிகழ்ச்சிகள்


மக்கள் தொலைக்காட்சியில் நேயர்களுக்குப் பயனுள்ள வகையில் மேலும் சில புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அவற்றுள் சில...

கற்போம் கணினி: அலுவலகங்கள் மட்டுமல்லாமல் இல்லங்களும் கம்ப்யூட்டர்மயமாகி வரும் இன்றைய சூழ்நிலையில் இல்லத்தரசிகளுக்கு கம்யூட்டரைப் பயன்படுத்தக் கற்றுத் தரும் இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

முக்கூடல்: இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. தமிழ் எண்களையும் தமிழ்ச் சொற்களையும் அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் நேயர்களுக்கு ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆர்த்தி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது

புத்தக ஆர்வலர்களுக்கு... புத்தகங்களை மட்டுமே பரிசாக வழங்கும் கேள்வி-பதில் பாணியிலான இந்த அறிவார்ந்த விளையாட்டு நிகழ்ச்சி, நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பார்வைகள்: அன்றாட சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் அலசும் இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

திரைகடல் ஓடி: ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான துறையில் ஈடுபட்டிருக்கும், ஈடபட விரும்பும் வணிகர்களுக்கு திசைகாட்டி விசையூட்டும் இந்த நிகழ்ச்சி, வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கும்பகோணத்தில் ஒரே நேரத்தில் 12 கருட சேவை

கும்பகோணத்தில் ஒரே நேரத்தில் 12 கருட சேவை


கும்பகோணத்தில் அட்சய திருதியையொட்டி 12 வைணவக் கோயில்களின் பெருமாள் எழுந்தருளி வியாழக்கிழமை ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 12 கருட சேவை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கருடசேவையில் வழிபட்டனர்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து மூன்றாம் நாளான அட்சய திருதியை அன்று ஸ்ரீ மகாலெட்சுமி, ஸ்ரீ மகாவிஷ்ணுவை தரிசனம் செய்து வழிபட்டால் குபேரனுக்கு இணையான பொன்னும், புகழும் வந்து சேரும் என பார்வதி தேவியிடம் சிவபெருமான் கூறியதாக ஐதீகம்.
நாட்டில் வறட்சி, வறுமைகள் ஒழியவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் செழிப்புடன் விளங்கவும் அட்சய திருதியை அன்று முன்னோர்கள் தொன்றுதொட்டு பெருமாளை வழிபடுவது மரபு.

அந்த வகையில் கோயில் நகரம், பாஸ்கர சேத்திரம், தென்னக அயோத்தி, பூலோகவைகுந்தம் என்றெல்லாம் போற்றப்படும் இத்தலத்தில் மட்டுமே பல நூற்றாண்டுகளாக 12 கருட சேவை நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் கருடசேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீ சக்கரபாணி சுவாமி, ஸ்ரீ ராமஸ்வாமி, ஸ்ரீ ஆதிவராக பெருமாள், ஸ்ரீ ராஜகோபால சுவாமி, ஸ்ரீபட்டாபிராமர், சோலையப்பன்தெரு ஸ்ரீ ராமசுவாமி, ஸ்ரீ சந்தான கோபால சுவாமி, ஸ்ரீ வேணுகோபால சுவாமி, ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ வரதராஜபெருமாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகிய 12 கோயில்களின் உத்சவ பெருமாள்களும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனத்தில் அந்தந்த கோயிலிலிருந்து புறப்பட்டு பெரிய கடைத்தெருவில் ஒரே இடத்தில் எழுநதருளி 12 கருட சேவை ஒரே நேரத்தில் நடைபெற்றது.

பெரிய தெரு ஆஞ்சநேயர் கருட வாகனத்திற்கு முன்
எழுந்தருளி பெருமாள்களை வழிபட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் சுமார் 12 மணியளவில் மகாதீபாரதனை நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

மின் இணைப்பு இல்லாத கிராம மக்களுக்கு மின் கட்டண பில்

மின் இணைப்பு இல்லாத கிராம மக்களுக்கு மின் கட்டண பில்


மின் இணைப்பு இல்லாத கிராம மக்களுக்கு, மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று பில் அனுப்பப்பட்டுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் ஹர்தோய் கிராம மக்களுக்கு இதுபோல மின்சார கட்டண பில் அனுப்பப்பட்டுள்ளது.


இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தலித்துகள். இதுபோல மின்சார பில் அனுப்பப்பட்டது பற்றி, மின்துறை அமைச்சர் ராம் வீர் உபாத்யாவிடம் குன்வர் சாஹே என்பவர் புகார் கூறினார். உடனே இதுபற்றி விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவிட்டார். அப்போதுதான் இந்த விஷயம் அரசுக்குத் தெரிந்தது.


சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு மின்சார இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாம். அப்போது சில மின்கம்பங்களை மின்சார வாரிய ஊழியர்கள் அமைத்தார்களாம்.


நம் ஊருக்கு மின்சாரம் வரப்போகிறது என்று ஆவலாக இருந்தார்கள் கிராமத்தினர். ஆனால் இதுவரை அவர்களது கனவு கனவாகவே உள்ளது.
மின்சார இணைப்பு கொடுத்துவிட்டதாக அதிகாரிகள் கணக்குக் காட்டியிருப்பார்கள் போலும். அதனால்தான் இப்போது எங்களுக்கு பில் அனுப்பப்படுகிறது என்று வேடிக்கையாகக் (வேதனையப்பா) கூறுகிறார்கள் அந்த கிராம மக்கள்.

அரவானிகளுக்கு கணினிப் பயிற்சி

அரவானிகளுக்கு கணினிப் பயிற்சி

தமிழக அரசு சார்பில் அரவானிகளுக்கு எல்காட் நிறுவனம் கணினிப் பயிற்சி அளித்து வருகிறது.

அரசுத் துறை ஊழியர்களுக்கு கணினிப் பயிற்சியை எல்காட் நிறுவனம் ஜூன் 2007 முதல் வழங்கி வருகிறது. இதில் அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் ஆகியவையும் அடங்கும்.

3 நாள்கள் முதல் 5 நாள்கள் வரை நடைபெறும் இந்த பயிற்சியில் இதுவரை 442 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இன்னும் அதிகம் கற்க நினைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தொடக்கத்தில் தலைமைச் செயலகம், மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவசமாக இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது பல்வேறு துறை
சார்ந்த ஊழியர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், வணிக வரித் துறை ஊழியர்கள் 7 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க சுமார் ரூ.1.50 கோடி கட்டணம் வசூலித்து இருப்பதாகக் கூறுகிறார் எல்காட் துணை மேலாளர் வி.கிரிஜாஸ்ரீ.

இதன் தொடர்ச்சியாக, முதன் முறையாக 25 அரவானிகளுக்கு இம்மாதம் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் குறைந்தது 8-ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்தவர்களாக உள்ளனர். பயிற்சி முடிந்த பின்பு அவர்கள் விரும்பினால் கூடுதல் பயிற்சியையும் பெறலாம்.

பயிற்சி குறித்து இளம்கலை மனோதத்துவ இயல் தேர்ச்சி பெற்ற ஷில்பா என்ற அரவானி கூறும் போது, எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் சுயமரியாதையோடு வாழ்வதற்கான தன்னம்பிக்கை பிறக்கும்.

இங்கு 8-வது படித்தவருக்கும் புரியும் வகையில் சொல்லித் தருகிறார்கள். பயிற்சியை சரியாக பயன்படுத்தி எங்களிடம் உள்ள திறமைகளை வெளிக் கொணர்வோம் என்றார்.

அறிவுக் கூர்மை உள்ள இவர்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்படும். திறமை வாய்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

மற்றவர்களைப் போல, அரவானிகளும் பொது நீரோடையில் கலக்க வேண்டும் என்று கூறுகிறார் எல்காட் நிர்வாக இயக்குநர் சி.உமாசங்கர்.
பயிற்சியில் பங்கேற்றுள்ள சேலம், கோவை, மதுரை, சென்னை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரவானிகளுடன் விப்ரோ, இன்போசிஸ் போன்ற பெரிய கணினி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
இவர்களுக்கு, தகுதி அடிப்படையில் வேலை வழங்கவும் அந் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. இது, அரவானிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி விடுதலை

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி விடுதலை

முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கில் தமிழக முதல்வரின் மகன் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக சித்தூர் செஷன்ஸ் நீதிபதி டி.துர்காபிரசாத் வியாழக்கிழமை தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் 20.5.2003-ல் மதுரையில் வாக்கிங் சென்றபோது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர்.

அழகிரி உள்ளிட்ட 13 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை செய்தல்), 120 பி (கூட்டு சதி செய்தல்) மற்றும் 201 (தடயங்களை மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றபோது, இந்த வழக்கு மதுரையில் நடந்தால் அழகிரி ஆதரவாளர்கள் மிரட்டுவார்கள் என்றும் இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து கடந்த டிசம்பரில் இந்த வழக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த மார்ச் முதல் சித்தூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் முத்துராமலிங்கம், வழக்கை விசாரணை செய்த டி.எஸ்.பி. முருகேசன் உள்ளிட்ட 82 பேர் சாட்சியம் அளித்தனர்.

தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் வழக்கறிஞர் ஜின்னா மொழிபெயர்த்தார்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம். மன்னன் என்கிற மதுரை மன்னன், பி.ஈஸ்வர் கோபி, சிவகுமார் என்கிற கராத்தே சிவா, கார்த்திக், ஈஸ்வரன், மணி, பாலகுரு, பாண்டி என்கிற உதால பாண்டி, சீனி என்கிற சீனிவாசன், ராஜா, முபாரக் மந்திரி, சேட் என்கிற இப்ராகிம் சேட் ஆகிய 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அரசு தரப்பில் ராஜேந்திர ரெட்டி ஆஜரானார். அழகிரி உள்ளிட்டோர் சார்பில் வழக்கறிஞர்கள் விவி சந்திரசேகரன், பி. விஜயகிருஷ்ண ரெட்டி, சி. சுப்பிரமணியன், வேலூர் வரதராஜன், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள்.
5 நிமிடத்தில் தீர்ப்பு: மாலை 3.50 மணிக்கு அழகிரியும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மாலை 4.15 மணிக்கு நீதிபதி துர்காபிரசாத் இருக்கையில் அமர்ந்தார். தீர்ப்பை ஆங்கிலத்தில் நீதிபதி படித்தார். 5 நிமிடத்தில் தீர்ப்பை படித்துவிட்டு நீதிபதி தனது அறைக்கு திரும்பினார்.
சித்தூர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டவுடன் சுமார் 55 நாள்களில் இந்த வழக்கை விசாரணை செய்து சித்தூர் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

முதல்வரின் மகன் மீதான வழக்கு என்பதால் சென்னை மற்றும் வேலூரில் இருந்து செய்திகளை சேகரிக்க பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சியினரும் திமுகவினரும் வந்திருந்தனர்.

Free Blog CounterLG