Friday, May 9, 2008

புரோட்டா இல்லையென்று கூறியதால் இரு கோஷ்டியினர் மோதல் 9 பேர் படுகாயம்

புரோட்டா இல்லையென்று கூறியதால் இரு கோஷ்டியினர் மோதல் 9 பேர் படுகாயம்

திண்டுக்கல் அருகே ஹோட்டலில் புரோட்டா இல்லையென்று கூறியதால் ஏற்பட்ட தகராறில் இரு கோஷ்டியினர் மோதிக் கொண்டனர். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர் பாலாஜி(47). இங்கு சம்பவத்தன்று சின்னாளபட்டியைச் சேர்ந்த குமரேசன், செந்தில், குமார், மயில்சாமி ஆகியோர் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் புரோட்டா கேட்டுள்ளனர். பாலாஜி புரோட்டா இல்லையென்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கும், பாலாஜிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

தகராறு முற்றிய நிலையில் பாலாஜியை அடித்து கழுத்தைப் பிடித்து நெரித்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதைப் பார்த்த பாலாஜியின் மகன் சண்முகம், சரவணன், உறவினர் மணிகண்டன், முத்து ஆகியோரும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் அனைவருக்கும் காயம் ஏற்பட்டு திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

Free Blog CounterLG