மக்கள் டி.வி.யின் புதிய நிகழ்ச்சிகள்
மக்கள் தொலைக்காட்சியில் நேயர்களுக்குப் பயனுள்ள வகையில் மேலும் சில புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அவற்றுள் சில...
கற்போம் கணினி: அலுவலகங்கள் மட்டுமல்லாமல் இல்லங்களும் கம்ப்யூட்டர்மயமாகி வரும் இன்றைய சூழ்நிலையில் இல்லத்தரசிகளுக்கு கம்யூட்டரைப் பயன்படுத்தக் கற்றுத் தரும் இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
முக்கூடல்: இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. தமிழ் எண்களையும் தமிழ்ச் சொற்களையும் அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் நேயர்களுக்கு ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆர்த்தி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது
புத்தக ஆர்வலர்களுக்கு... புத்தகங்களை மட்டுமே பரிசாக வழங்கும் கேள்வி-பதில் பாணியிலான இந்த அறிவார்ந்த விளையாட்டு நிகழ்ச்சி, நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பார்வைகள்: அன்றாட சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் அலசும் இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
திரைகடல் ஓடி: ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான துறையில் ஈடுபட்டிருக்கும், ஈடபட விரும்பும் வணிகர்களுக்கு திசைகாட்டி விசையூட்டும் இந்த நிகழ்ச்சி, வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Friday, May 9, 2008
மக்கள் டி.வி.யின் புதிய நிகழ்ச்சிகள்
Posted by udanadi at 5/09/2008 08:16:00 AM
Labels: ஒளிபரப்பு, நிகழ்ச்சி, மக்கள்.தொலைக்காட்சி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment