Friday, May 9, 2008

மின் இணைப்பு இல்லாத கிராம மக்களுக்கு மின் கட்டண பில்

மின் இணைப்பு இல்லாத கிராம மக்களுக்கு மின் கட்டண பில்


மின் இணைப்பு இல்லாத கிராம மக்களுக்கு, மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று பில் அனுப்பப்பட்டுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் ஹர்தோய் கிராம மக்களுக்கு இதுபோல மின்சார கட்டண பில் அனுப்பப்பட்டுள்ளது.


இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தலித்துகள். இதுபோல மின்சார பில் அனுப்பப்பட்டது பற்றி, மின்துறை அமைச்சர் ராம் வீர் உபாத்யாவிடம் குன்வர் சாஹே என்பவர் புகார் கூறினார். உடனே இதுபற்றி விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவிட்டார். அப்போதுதான் இந்த விஷயம் அரசுக்குத் தெரிந்தது.


சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு மின்சார இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாம். அப்போது சில மின்கம்பங்களை மின்சார வாரிய ஊழியர்கள் அமைத்தார்களாம்.


நம் ஊருக்கு மின்சாரம் வரப்போகிறது என்று ஆவலாக இருந்தார்கள் கிராமத்தினர். ஆனால் இதுவரை அவர்களது கனவு கனவாகவே உள்ளது.
மின்சார இணைப்பு கொடுத்துவிட்டதாக அதிகாரிகள் கணக்குக் காட்டியிருப்பார்கள் போலும். அதனால்தான் இப்போது எங்களுக்கு பில் அனுப்பப்படுகிறது என்று வேடிக்கையாகக் (வேதனையப்பா) கூறுகிறார்கள் அந்த கிராம மக்கள்.

0 comments:

Free Blog CounterLG