புகைப்படங்களை ஆதாரமாக வெளியிட்டார்நடிகர் மணிவண்ணன் மகன் மீது பெண் டைரக்டர் பரபரப்பு புகார்`காதலித்து ரகசிய திருமணம் செய்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டார்'
டைரக்டரும், நடிகருமான மணிவண்ணனின் மகன் மீது `நேபாளி' படத்தின் உதவி பெண் டைரக்டர் பரபரப்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளார். காதலித்து ரகசிய திருமணம் செய்துவிட்டு, தற்போது தன்னை தூக்கி எறிந்துவிட்டதாக தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
பெண் டைரக்டர் ஸ்டெபி
`நேபாளி' படத்தில் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர் ஸ்டெபி (வயது 20). இவர், சென்னை விருகம்பாக்கம் சாய்நகர், 2-வது மெயின் ரோட்டில் வசிக்கிறார். இவர் நேற்று தனது தந்தை செல்வம், தாயார் மாலா ஆகியோருடன் வந்து சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இணையதளம் மூலம் காதல்
`எனது தந்தை செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தாயார் மாலா சினிமாவில் உதவி டான்ஸ் மாஸ்டராக பணிபுரிகிறார். எனது பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. `விஷுவல் கம்ïனிகேஷன்' 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். எனது தாயாருக்கு சினிமாவில் தொடர்பு இருப்பதால், எனக்கும் திரையுலகில் நிறைய பேரை தெரியும். `ஆர்குட்' இணையதளத்தில் எனது படம் மற்றும் முகவரியை வெளியிட்டிருந்தேன்.
இதை பார்த்து டைரக்டரும், நடிகருமான மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன், என்னை இன்டர்நெட்டில் தொடர்பு கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி இன்டர்நெட் மூலம் அவர், என்னுடன் முதன் முதலில் பேசினார். சினிமா டைரக்டர் ஒருவர், அவர் நல்ல பையன் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் நானும், அவரிடம் இன்டர்நெட்டில் பேசி வந்தேன். முதலில் நண்பர்களாக தான் பேசினோம். ரகுவண்ணன் தான் என்னை காதலிப்பதாக முதலில் தெரிவித்தார். அதன்பிறகு நானும், அவரும் நேரில் சந்தித்தோம். நானும் அவரை காதலித்தேன்.
பெண் கேட்டனர்
அவர் `மாறன்', `தொடக்கம்' என்ற 2 படங்களில் நடித்தார். அந்த படங்கள் வெற்றி அடையவில்லை. 9-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் கம்ப்ïட்டரை கையாளுவதிலும் நல்ல அறிவு திறன் பெற்றவர். அவரது தந்தை டைரக்டர் மணிவண்ணன் மீது, எனது பெற்றோர் நல்ல மரியாதை வைத்திருந்தனர். இதனால் நானும், ரகுவண்ணனும் ஒன்றாக சுற்றித் திரிந்ததை எனது பெற்றோர் எதிர்க்கவில்லை.
என்னை திருமணம் செய்து கொள்ள ரகுவண்ணன் விரும்பினார். எனது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். டைரக்டர் மணிவண்ணனின் மானேஜரும், உறவினர் ஒருவரும், எனது பெற்றோரை சந்தித்து ரகுவண்ணனுக்கு என்னை பெண் கேட்டனர். மணிவண்ணனின் சம்மதத்தின் பேரிலேயே இது நடந்தது. மணிவண்ணன், எனது தாயாரிடம் போனிலும் பேசி சம்மதம் தெரிவித்தார்.
தாலி கட்டினார்
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி அன்று சென்னை கே.கே.நகர் 15-வது செக்டரில் உள்ள அவரது வீட்டுக்கு ரகுவண்ணன் காரில் என்னை அழைத்து சென்றார். வீட்டிற்கு போய் பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. ரகுவண்ணனின் தாயார் மற்றும் அக்காள் ஆகியோரும் வெளியில் போய்விட்டனர். மணிவண்ணனும் வீட்டில் இல்லை. ரகுவண்ணன் நான் இப்போதே உனக்கு தாலி கட்டி, எனது மனைவியாக்கி கொள்ள போகிறேன் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நான் அதற்கு சம்மதிக்கவில்லை. முதலில் உன்னை ரகசிய திருமணம் செய்து கொள்கிறேன், பின்னர் ஊரறிய திருமணம் செய்து கொள்கிறேன் என்று ரகுவண்ணன் கூறினார். அவ்வாறு சொன்னதோடு நிற்காமல், அவரது பாட்டியின் புகைப்படத்துக்கு முன்பு என்னை நிற்க வைத்தார். பாட்டியின் படத்தின் முன்பு தங்க தாலி கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிறும், மெட்டியும் இருந்தது. மஞ்சள் கயிறு தாலியை எனது கழுத்தில் கட்டி, மெட்டியை எனது காலில் ரகுவண்ணன் அணிந்துவிட்டார். இந்த சம்பவம் நான் எதிர்பாராத வகையில் நடந்துவிட்டது.
நெருக்கமான பழக்கம்
இந்த சம்பவத்திற்கு பிறகு ரகுவண்ணனும், நானும் நெருக்கமாக பழக ஆரம்பித்தோம். அவர் எனக்கு முத்தம் கொடுப்பது உள்பட அனைத்து `செக்ஸ்' குறும்புகளையும் செய்வார். ஆனால், உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளாமல் நான் ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டேன். இந்த நிலையில், சமீபத்தில் திடீரென்று ரகுவண்ணன் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.
தாயார் மறுப்பு
`திருமணத்துக்கு தனது தாயார் மறுப்பதாகவும், எனவே, என்னை மறந்துவிடு' என்றும் ரகுவண்ணன் கூறினார். இதை கேட்டதும் `எனது தலையில் இடி விழுநëதது போல் இருந்தது'. அதன்பிறகு ரகுவண்ணன், என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்துக்கொண்டார். என்னோடு பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். என்னை மிரட்ட ஆரம்பித்தார். டைரக்டர் ஒருவர் மூலம் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். `என்னை மறக்காவிட்டால் ஆசிட் ஊற்றி கொன்றுவிடுவேன்' என்றும் அடிக்கடி போனில் மிரட்டினார். அவர் செல்வாக்கு மிக்கவர். அவரால், எனக்கும், எனது பெற்றோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன்.
புகைப்படம் ஆதாரம்
ரகுவண்ணனும், நானும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் லேப்-டாப் கம்ப்ïட்டரில் பதிவு செய்து வைத்துள்ளேன். இந்த படங்களை ரகுவண்ணனே எடுத்தார். அவர், எனக்கு தாலி கட்டியதை கூட வீடியோ படமாக எடுத்திருந்தார். பின்னர் அதை அழித்துவிட்டார். திரையுலக பிரமுகர்கள் அனைவரிடமும் என்னை, அவரது மனைவி என்று ரகுவண்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், திடீரென்று என்னை திருமணம் செய்ய மறுத்து தூக்கி எறிந்து பேசுகிறார். என்மீது மகளிர் ஆணையத்தில் பொய்யான புகார் கொடுத்துள்ளார். அவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. 3 நாட்களாக எனக்கு சாப்பாடு பிடிக்கவில்லை. தூக்கம் வரவில்லை. உலகமே இருட்டாக உள்ளது. அவரோடு சேர்ந்து வாழ்வதே எனது குறிக்கோள். அவரை அடையாமல் விடமாட்டேன். உயிருக்கு உயிரான காதலை தனது தாயாருக்காக ஒரே நொடியில் சாகடிக்க பார்க்கிறார். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு உதவி பெண் டைரக்டர் ஸ்டெபி தெரிவித்தார்.
படங்களை காட்டினார்
ரகுவண்ணனோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ பட காட்சிகளை ஸ்டெபி, நிருபர்களுக்கு போட்டு காண்பித்தார். வீடியோவில் சில படங்களில் அவர்கள் இருவரும் மேலாடை இல்லாமல் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும், ரகுவண்ணன், ஸ்டெபிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. இநëத வீடிய பட ஆதாரங்களை எல்லாம் ஸ்டெபி போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் கமிஷனர் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. ஸ்டெபியின் தாயார் மாலா, `எனது மகள் காதல் போராட்டத்தில் இறங்கி இருக்கிறாள். கண்டிப்பாக அவள் வெற்றி பெற்றே தீருவாள்' என்று தெரிவித்தார்.
Thursday, April 24, 2008
புகைப்படங்களை ஆதாரமாக வெளியிட்டார்நடிகர் மணிவண்ணன் மகன் மீது பெண் டைரக்டர் பரபரப்பு புகார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment