"டாஸ்மாக்' கடையை உடைத்து கொள்ளை முயற்சி
சென்னையை அடுத்த மணலியில் உள்ள "டாஸ்மாக்' கடையை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தைக் கொள்ளை அடிக்க முயற்சி நடந்தது.
மணலி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள "டாஸ்மாக்' மதுபானக் கடையை மேற்பார்வையாளர் தாமோதரன், சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு சென்றார். அன்றைய தினம் இரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றனர்.
அச்சமயத்தில் அவ்வழியே ரோந்து வந்த போலீஸ்காரர் சகாயராஜை பார்த்ததும் கொள்ளை கும்பல் தப்பி ஓட முயன்றது. கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் சகாயராஜை, ஷட்டர் கதவின் பூட்டால் தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கடையைத் திறந்து பார்த்தபோது ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் பத்திரமாக இருந்தது தெரியவந்தது. இதுபற்றி, மணலி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்டெய்னர் மோதி டாஸ்மாக் ஊழியர் சாவு:
ஆவடி குளக்கரை தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் வேதாச்சலம். திருவொற்றியூரில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடையின் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை ஆவடியில் இருந்து திருவொற்றியூருக்கு மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி, மாதவரம் போக்குவரத்து போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Monday, April 28, 2008
"டாஸ்மாக்' கடையை உடைத்து கொள்ளை முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment