Sunday, April 27, 2008

வயலார் ரவி தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்

வயலார் ரவி தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் வயலார் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

அக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் சோனியா காந்தி இதற்கான அறிவிப்பைத் தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நிறைய சிக்கல்கள் இருக்கும் நிலையில், ஒரு முறை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள அருண்குமார் போன்ற மேலிடப் பார்வையாளரால், பிரச்னைகளை திறமையாகக் கையாள முடியாது என்று ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் சோனியாவிடம் கூறிவந்தனர்.
மூத்த தலைவர் ஒருவரை பொறுப்பில் அமர்த்தினால்தான், சிக்கல்களைத் திறமையாகச் சமாளிக்க முடியும் என்ற யோசனையை ஏற்று வயலார் ரவி நியமிக்கப்பட்டிருப்பதாகக் கட்சித் தலைவர்கள் சொல்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளராக ஆந்திரத்தைச் சேர்ந்த அருண்குமார் நியமிக்கப்பட்ட பிறகு பல முறை சென்னை வந்து சென்றுள்ளார். ஆனால், தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களாக உள்ள முதல்வர் கருணாநிதியை ஒருமுறை கூட அவர் சந்திக்கவில்லை.
இந் நிலையில் கருணாநிதியை திருப்திப்படுத்தும் வகையில், அருண்குமாருக்கும் மேலே ஒரு பதவியில் வயலார் ரவி நியமிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சியினர் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கியாக வேண்டும். எனவே, வயலார் ரவியின் நியமனம் தேர்தலுக்கு ஆயத்தமாகும் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது.

0 comments:

Free Blog CounterLG