Sunday, May 4, 2008

4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது

4 டாக்டர்களுக்கு பி. சி. ராய் விருது


சென்னை, மே 3: சென்னையைச் சேர்ந்த இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் உள்பட நான்கு டாக்டர்களுக்கு மருத்துவ உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருது கிடைத்துள்ளது.

இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக மனநல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரை, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவர் டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப் ஆகியோர் டாக்டர் பி. சி. ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) இவர்களைத் தேர்வு செய்து ள்ளது.

டாக்டர் மீர் முஸ்தபா உசேன்டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்
டாக்டர் என். ரங்கபாஷ்யம் டாக்டர் ஆர். பொன்னுதுரை டாக்டர் ஆர். பொன்னுதுரை

டாக்டர் ஆர். ரங்கபாஷ்யம்:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை - குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். பத்ம விபூஷண் விருது பெற்றவர். ஏராளமான இரைப்பை - குடல் மருத்துவ - அறுவைச் சிகிச்சை நிபுணர்களை உருவாக்கிய பேராசிரியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

டாக்டர் மீர் முஸ்தபா உசேன்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்புத் துறையின் துறைத் தலைவராக ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். "சிறந்த மருத்துவ ஆசிரியர்' என்ற பிரிவில் இவரது பெயர், பி. சி. ராய் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் ஆர். பொன்னுதுரை: சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஆர். பொன்னுதுரைக்கு, துறை சார்ந்த மருத்துவ முதுநிலை படிப்புப் பிரிவுகளை ஏற்படுத்தியதற்காக பி. சி. ராய் விருது வழங்கப்படுகிறது. மன நல மருத்துவத் துறையில் 35 ஆண்டுக்கால அனுபவம் பெற்றவர். சென்னை அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவமனையின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மன நல மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றியபோது, எம்.டி. மனநலப் படிப்பை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

டாக்டர் எம். எஸ். அஷ்ரஃப்: திருச்சியைச் சேர்ந்த பொது மருத்துவ நிபுணரான இவர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவராக உள்ளார். மருத்துவ சமூக சேவைக்காக அவருக்கு பி.சி. ராய் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தென் மாநிலப் பிரிவின் தலைவராக இருந்தபோது, கிராம மருத்துவ சேவைத் திட்டத்தை வெற்றிகரமாக இவர் செயல்படுத்தினார்.

0 comments:

Free Blog CounterLG