Saturday, April 19, 2008

11 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

சென்னை, ஏப். 19- மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட 11 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை டில்லி சர் கங்காராம் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இம்மருத் துவமனையின் குழந்தை கல்லீரல் மருத்துவ வல்லுநர் நீலம் மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தை சித்தார்த்துக்கு பிறந்த 2 ஆவது நாளிலேயே மஞ்சள் காமாலை ஏற்பட்டது இதையடுத்து குழந்தைக்கு பைலரி அட்ரீஸியா என்ற கல்லீரல் கோளாறு இருப்பது அய்ந்தாவது மாதத்தில் உறுதி செய்யப்பட்டது. அதாவது கல்லீரலில் உற் பத்தியாகும் பித்த நீரை செரி மானத்துக்காக குடலுக்கு எடுத் துச் செல்லும் பித்த நாளங்கள் இல்லாத நிலையே பைலரி அட்ரீஸியா எனப்படும். இத்தகைய கோளாறு காரணமாக நாளடைவில் கல்லீரல் செயலி ழந்து உயிர்போகும் ஆபத்து ஏற்படும்.

கல்லீரல் பாதிப்பு காரண மாக சித்தார்த்தின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்தது. குழந் தைக்கு மறு வாழ்வு அளிக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வு என குழந்தையின் பெற்றோரிடம் சென்னை மருத்துவர்கள் கூறி விட்டனர்.

இதையடுத்து டில்லி சர்கங்காராம் மருத்துவமனையில் சித்தார்த்தனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

குழந்தை சித்தார்த்தின் அத்தை சரோஜாவின் கல்லீரலிலிருந்து 20 சதவிகிதப் பகுதி தானமாக எடுக்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டது.

சித்தார்த் மற்ற குழந்தை களைப்போன்று ஆரோக்கியமாக உள்ளான் என மருத்துவர் நீலம்மோகன் தெரிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG