புதுடெல்லி, ஏப். 18-மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை கணிசமாக உயர்த்த 6-வது சம்பளக்கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதை பார்த்ததும் அரசின் மற்ற பல்வேறு அமைப்பு களும், தங்களுக்கும் சம்பளத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவம், ரெயில்வே துறைகளில் சம்பள உயர்வு போதாது என்ற அதிருப்தி நிலவுகிறது.
இந்த நிலையில் நீதிபதிகளும் தங்கள் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்தபட்சம் 10 மடங்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கூறி உள்ளனர். டெல்லியில் நேற்று தொடங்கிய நீதிபதிகள் மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் மத்திய அரசிடம் முறைப்படி பரிந்துரைக்கப்படும் என்று மாநாட்டுக்கு தலைமை தாங்கிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் கூறினார்.
சம்பளம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் "செபி, டிராய், சிஇஆர்சி, சிசிஐ மற்றும் ஐஆர்டிஏ போன்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கு மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வழங்க 6-வது சம்பளக் கமிஷனில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நீதிபதிகளாக இருப்பவர்கள் நாட்டுக்காக நீதியை நிலை நாட்டும் மிகப்பெரும் சேவையை செய்து வருகிறார் கள். அவர்களது தியாகத்தை கவுரவிக்கும் வகையில் மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வழங்கப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
(நன்றி-மாலைமலர்)
Saturday, April 19, 2008
10 மடங்கு சம்பள உயர்வு கேட்கும் நீதிபதிகள்: மாதம் ரூ.3 லட்சம் வேண்டும்.
Posted by udanadi at 4/19/2008 03:01:00 AM
Labels: சம்பள உயர்வு, நீதிபதி, நீதிமன்றம், ராணுவம், ரெயில்வே
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment