ராசிபுரம், ஏப். 19- ராசிபுரம் அருகில் உள்ள நாமகிரிப் பேட்டையில் 15 அடி ஆழத்தில் இருந்த பாதாள அறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதைக் காண மக்கள் திரள் திரளாக வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போயர் தெருவில் பழனிச்சாமி என்பவரின் வீட்டிற்கு எதிரில் நீண்ட காலமாக திட்டு ஒன்று இருந்து வந்துள்ளது. 17 ஆம் தேதியன்று அந்தத் திட்டின் மீது விறகை வைத்து பழனிச்சாமி வெட்டியுள்ளார். அப்போது அந்த இடத்தில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. தன் தந்தையை அழைத்து வந்து அந்தப் பள்ளத்தைப் பெரிதாக்கி பார்த்த போது, அந்த இடத்தில் 15 அடி ஆழத்தில் பாதாள அறை ஒன்று இருப்பது தெரிய வந்தது. 10 அடி அகல நீளத்தில் செங்கற்களால் கட்டப்பட்டு, சுண்ணாம்பால் பூசப்பட்டி ருந்தது. அதன் தென்புறத்தில் மேலும் ஒரு சிறிய அறையும் தெரிந்தது. அதில் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன்மேல் ஒரு மனித எலும் புக்கூடு இருந்தது.
தகவலறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு பாதாள அறையை வியப்புடன் பார்த் துச் சென்றனர். இது பற்றி ஊர் மக்கள், இந்தப் பகுதியில் ஜங்கம சமூகத்தை (பண்டாரம்) சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந் தனர். இவர்கள் துறவியாக கோயில்களில் இறந்தவர்களை பாதாள அறைகள் கட்டி புதைப்பார்கள். அவ்வாறு புதைக்கப்பட்ட சமாதி யாக இது இருக்கலாம் என்று கூறினார்.
இந்த பாதாள அறை சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று சேலம் பாரமஹால் நாணயவியல் சங்க துணைத் தலைவர் சுல்தான் கூறினார்
Saturday, April 19, 2008
15 அடி ஆழத்தில் பாதாள அறை ராசிபுரம் அருகே பரபரப்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment