Saturday, May 3, 2008

பிரியங்கா- நளினி சந்திப்பு, தவறான தகவல் தந்த சிறை அதிகாரி

வேலூர் சிறையில் மார்ச் 19 தேதி நளினியை பிரியங்கா சந்தித்து பேசினார். ஆனால் அத்தகைய சந்திப்பு நிகழவில்லை என சிறை அதிகாரி ராஜசௌந்தரியின் கடிதம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி பொற்கோவிலில் வழிபடுவதற்காக பிரியங்கா வந்துள்ளார் என்கிற செய்தி அறிந்த ராஜ்குமார் (வக்கீல்), பிரியங்கா வேறு விசயமாகத்தான் வந்திருக்கலாம் என்று எண்ணியவராக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் கடந்த 8 தியதி தபால் வழியே சந்திப்பு பற்றிய தகவல் தேவை என்று வேலூர் சிறைதுறையிடம் விண்ணப்பித்தார்.

ஏப்ரல் 10 தியதி சிறைத்துறை அதிகாரிகளுக்கு அக்கடிதம் கிடைக்கப்பெற்றது. ஆனால் பொறுப்பு அதிகாரி ராஜசௌந்தரி மார்ச் 19 (நளினி-பிரியங்கா) சந்திப்பு நிகழவில்லை என ஒற்றை வரியில் பதில் அனுப்பினார்.

இந்த சந்திப்பு பற்றி பிரியங்கா 'தான் அமைதி வேண்டி நளினியை சந்தித்ததாக' அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இப்படியிருக்க சிறை அதிகாரி தவறான தகவல் தந்ததற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 20(2) ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி மாநில தகவல் ஆணையத்திற்கு (State Information Commission (SIC)) கடிதம் அனுப்பியிருக்கிறார் ராஜ்குமார்.

இத்தகவலை ரைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

1 comments:

Anonymous said...

http://www.tnsic.gov.in/faq.htm

Free Blog CounterLG