ஹரி இயக்கத்தில் உருவாகும் சேவல் படத்தில் நாயகன் பரத்துடன் கடுமையாகப் போட்டிபோடும் வேடத்தில் நடிக்கிறார் சிம்ரன்.
தமிழ்த் திரையுலகில் ஒருவிதத்தில் சிம்ரனுக்கு இது மறுபிரவேசம் மாதிரிதான். திருமணத்துக்குப் பிறகு ஒரு சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்த சிம்ரனுக்கு இது பொருத்தமான படமாக அமையும் என்கிறார் இயக்குநர் ஹரி. இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடி பூனம் பாஜ்வா என்றாலும், கதாநாயகிக்கு சற்றும் குறையாத கனமான வேடமாம் சிம்ரனுக்கு. இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு வடிவேலு. இடைவேளைக்கு முன்பு வரை அவரும் பரத்தும் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும் என்கிறார் ஹரி. ஜின்னா கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ஏ.ஜின்னா தயாரிக்கும் முதல் படம் இது. ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஹரியுடன் பிரகாஷ் இணையும் முதல் படம் சேவல் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம்.
0 comments:
Post a Comment