Tuesday, May 13, 2008

EDS ஐ விலைக்கு வாங்கியது HP நிறுவனம்


மேலே HP சிஇஒ மார்க் ஹர்ட்

டெக்ஸாஸ் மாகாணத்தில் பிளானோவை தலைமையிடமாகக் கொண்ட Electronics Data Systems (EDS) கார்பரேஷனை 13 பில்லியன் டொலருக்கு கலிபோர்னியா மாகாணத்தின் பாலொ அல்டோ நகரில் தலைமையிடமாக கொண்டு இயங்கும் கணினி உற்பத்தி நிறுவனமான ஹாவ்லட் பேக்கார்ட் (Hewlett-Packard - HP) நிறுவனம் திங்கட்கிழமை வாங்கியது.

ஐபிஎம் மின் ஊழியராக இருந்த H. Ross Perot என்பவர் தனியே வந்து 1962 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர் முதலீட்டில் EDS நிறுவனத்தை ஆரம்பித்தார்.
1984 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை GM ஜெனரல் மோட்டார்ஸ் நிறுனத்திற்கு 2.5 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்தார். தன்னுடைய பெயரில் (Perot Systems ?) தனியே வேறொரு நிறுவனத்தை தொடங்க எண்ணி முற்றிலுமாக (all shares) கார் தயாரிப்பு நிறுவனமான ஜிஎம்மிற்கு விற்றார்.

பீரட்டின் கை வெள்ளை மாளிகை வரை நீண்டது. 1992, 1996 களில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

தற்போது இந்நிறுவனத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் 65 நாடுகளில் பணிபுரிகிறார்கள். மென்பொருள் சேவை நிறுவனமான இது உலகின் முதல் மூன்று பெரிய நிறுவனங்களில் HP, IBM க்கு அடுத்ததாக இருந்து வந்தது. சென்ற ஜனவரியில் அமெரிக்காவின் எம்பஸிஸ் (Mphasis) என்னும் BPO நிறுவனத்தை EDS வாங்கியிருந்தது. அப்போது அதில் 20,000 பேர் பணியிலிருந்தார்கள்.

இந்தியாவில் மட்டும் தற்போது EDS நிறுவனத்தில் 30,000 பேர் பணியில் உள்ளார்கள்.

EDS ன் ஒரு பங்குக்கு 25$ என்று நிர்ணயித்திருக்கிறது, இது 33 சதவீத விலை அதிகமாகும். EDS ஐ விலைக்கு வாங்குவதன் மூலம முன்னணியில் உள்ள IBM நிறுவனத்தை வீழ்த்த முடியும் என HP யின் கணக்காகும்.

கடந்த ஜனவரியின் போது HP யின் சந்தை விலை 115 பில்லியன் டொலராகும். அப்போது அதன் கையிருப்பு மட்டும் 10 பில்லியன் டொலர் இருந்தது. அதனால் EDS க்கு தன்னுடைய கையிருப்பிலிருந்தே அது கொடுக்கலாம். EDS ஐ வாங்குவதன் மூலம் இரண்டாவது இடத்துக்கு HP வந்துள்ளது. முதலாவதாய் ஐபிஎம்.

2002 ஆம் ஆண்டில் காம்பாக் நிறுவனத்தை HP 20 பில்லியன் டொலருக்கு பிறகு வாங்கும் இரண்டாவதாக மிகப்பெரிய நிறுவனமாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் மாற்றம் காரணமாக அமெரிக்க பங்கு வணிகத்தில் ஹெச் பி நிறுனத்தின் பங்குகள் 5.8 சதவீதம் அளவிற்கு குறைந்து 43.75 டொலர் வரை சென்றன. EDS நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன 36 சதவீதம் ஏறி 24.44 டொலருக்கு வந்தது.

முன்னதாக டாட்காம் சரிவுகளின் போது 2002-2003 ஆம் ஆண்டுகளில் 1.7 பில்லியன் டொலர் அளவிற்கு நட்டத்தை EDS கண்டிருந்தது. பின்னர் இந்தியா போன்ற நாடுகளுக்கு வேலைகளை அனுப்பி சரிவுகளிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

1 comments:

Anonymous said...

thanks for the news

Free Blog CounterLG